கத்தார் (பாடகர்)
கதர் | |
---|---|
![]() நிசாம் கல்லூரி வளாகத்தில் 2005 இல் நடைபெற்ற சந்திப்பில் | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1949 தூப்ரான், ஐதராபாத் இராச்சியம், தற்போது தெலங்காணா இந்தியா) |
இறப்பு | (அகவை 74) ஐதராபாது, தெலங்காணா, இந்தியா |
அரசியல் கட்சி | தெலங்கான பிரஜா முன்னணி |
துணைவர் | விமலா கதர் |
வாழிடம் | ஐதராபாது, தற்போது தெலங்காணா) |
முன்னாள் மாணவர் | உசுமானியா பல்கலைக்கழகம் |
கத்தார் (Gaddar, தெலுங்கு: గద్దర్) கதர் எனவும் பரவலாக அழைக்கப்படும் கும்மாடி விட்டல் ராவ் (Gummadi Vittal Rao, 1949 – 6 ஆகத்து 2023) ஓர் இந்தியக் கவிஞர், புரட்சிகர நாட்டுப்புறப் பாடகர் மற்றும் சமூக ஆர்வலர் ஆவார். கதர் 2010 வரை இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்-லெனினியம்) இயக்கத்தில் தீவிரமாக இருந்தார், பின்னர் தெலங்காணாவின் மாநிலத்துக்கான இயக்கத்தில் சேர்ந்தார்.
ஆரம்ப கால வாழ்க்கை
[தொகு]கதர் 1980 களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிச) மக்கள் போரில் உறுப்பினரானார் . அதன் கலாச்சார பிரிவின் ஒரு பகுதியாக இருந்தார்.
2010 வரை நக்சல் இயக்கத்தில் தீவிரமாக செயல்பட்ட பின்னர், தன்னை அம்பேத்கரை தீவிரமாக பின்பற்றக்கூடியவராக அடையாளப்படுத்திக் கொண்டார். [1] 1910 களில் பஞ்சாபில் பிரித்தானிய காலனித்துவ ஆட்சியை எதிர்த்த சுதந்திரத்திற்கு முந்தைய கதர் கட்சிக்கு நன்றி செலுத்தும் விதமாக இவர் தனது பெயரை கதர் என மாற்றிக்கொண்டார்.

மறைவு
[தொகு]கத்தார் 2023 சூலை 20 இல் இதய நோய்க்காக ஐதராபாது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, ஆகத்து 3 இல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.[2] 2023 ஆகத்து 6 இல் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் தனது 74-ஆவது அகவையில் உயிரிழந்தார்.[3][4][5]
விருதுகள்
[தொகு]- 2011 - தெலுங்கானாவுக்கான சிறந்த ஆண் பின்னணி பாடகருக்கான நந்தி விருது - ஜெய் போலோ திரைப்படத்திற்காக
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Swamy, Rohini (2018-12-04). "In Telangana, Naxal poet Gaddar embraces the ballot & old foes to fight 'fundamentalists'". ThePrint (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2021-01-03.
- ↑ Reddy, U Sudhakar (6 August 2023). "Renowned Telangana folk singer Gummadi Vittal Rao, popularly known as 'Gaddar', passes away". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. http://timesofindia.indiatimes.com/articleshow/102477594.cms.
- ↑ "Telangana: Poet activist Gaddar passes away at 77". The Siasat Daily. 6 August 2023. https://www.siasat.com/telangana-poet-activist-gaddar-passes-away-at-apollo-hospitals-2660638/.
- ↑ "Telangana Poet Gaddar, Known For His Revolutionary Songs, Dies At 77". NDTV. https://www.ndtv.com/india-news/telangana-poet-balladeer-gaddar-dies-at-77-4273956.
- ↑ "Famed Folk Singer Gaddar Passes Away at Apollo Hospital". www.telegraphindia.com.