கத்தார் பகுரைன் தரைப்பாலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கத்தார் பகுரைன் தரைப்பாலம்
Qatar Bahrain Bridge
ஆள்கூற்று26°1′22″N 50°48′8″E / 26.02278°N 50.80222°E / 26.02278; 50.80222
வாகன வகை/வழிகள்இயங்கூர்தி வாகனங்கள் மற்றும் இரயில்
கடப்பதுபகுரைன் வளைகுடா
இடம்பகுரைன் மற்றும் கத்தார்
Other name(s)கத்தார் பகுரைன் நட்புப் பாலம்
பராமரிப்புகத்தார் பகுரைன் தரைப்பால அறக்கட்டளை
Characteristics
மொத்த நீளம்40 km (25 mi)
History
திறக்கப்பட்ட நாள்2022 (திட்டமிடப்பட்டது)

கத்தார் பகுரைன் தரைப்பாலம் (Qatar Bahrain Causeway) என்பது அரபு நாடுகளான கத்தாருக்கும் பகுரைனுக்கும் இடையில் தரைப்பாலம் அமைக்கும் திட்டமாகும். கத்தார் பகுரைன் நட்புப் பாலம் என்ற பெயராலும் இத்திட்டம் அழைக்கப்படுகிறது. 2.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் 2009 ஆம் ஆண்டு[1] இத்தரைப்பாலத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கும் என 2008 ஆம் ஆண்டு டிசம்பர் 13 இல் அறிவிக்கப்பட்டது. ஆனால் 2015 ஆம் ஆண்டு சூன் மாதம் வரை கட்டுமானப் பணிகள் எதுவும் தொடங்கப்படவில்லை. கத்தார் பகுரைன் தரைப்பாலத் திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திட்டத்துடன் தொடர்பு கொண்ட ஒப்பந்தத் தொழில்கள் கூட்டமைப்பு கலைக்கப்பட்டதாக கத்தார் பகுரைன் தரைப்பால அறக்கட்டளை நிறுவனம் தெரிவிக்கிறது. பொருளாதார சந்தையாகக் கருதப்படும் கத்தாரின் பொருளாதார மண்டலம் பிற நாடுகளுடன் நன்கு இணைக்கப்பட்டிருக்கவேண்டும், இக்குறிக்கோளின் ஒரு பகுதியே கத்தார் பக்ரைன் தரைப்பாலமாகும். இத்திட்டம் இரு நாடுகளும் அவசியமானதாக கருதப்படவேண்டும் என்று பகுரைன் நாட்டின் வெளியுறவு அமைச்சர் 2011 ஆம் ஆண்டு சனவரி மாதம் 14 ஆம் நாள் தெரிவித்தார்[2]. பாலத்தின் கட்டுமானம் 2011 ஆம் ஆண்டில் தொடங்கி 2015 இல் நிறைவடையும் என்றும் சுமார் 5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் [3]செலவாகும் என்றும் பகுரைன் நாட்டின் அல் வாசட் செய்தித்தாளில் 2011 ஏப்ரல் 27 இல் ஒர் அதிகாரப்பூர்வமற்ற செய்தி வெளியிடப்பட்டிருந்தது[4][5]. 2022 உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிகள் நடைபெறுவதற்கு முன்னர் இப்பாலம் கட்டி முடிக்கப்படும் வகையில் நிதி ஆதாரங்களை எதிர்நோக்குவதாக பகுரைனின் வெளியுறவுத்துறை அமைச்சர் டிசம்பர் 2012 இல் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தார்[6].

மீள்பார்வை[தொகு]

இரு நாடுகளுக்கும் இடையே இணைப்பு நீளம் சுமார் 40 கிமீ (25 மைல்) இருக்கும். ஒரு சாலை மற்றும் ஒரு இரயில் பாதையை இதில் அடங்கியிருக்கும்[7]. மேலும் இப்பாலம் பல இணைப்புப் பாலங்களுடன் இணைக்கப்பட்டிருக்கும். சவூதி அரேபியாவையும் பகுரைனையும் இணைக்கும் கிங் பாகட் தரைப்பாலத்தின் ஒரு இயற்கையான நீட்சியாகவும் இப்பாலம் இருக்கும். இதனால் முழுமையாக இம்மண்டலம் இணைக்கப்படும். 18 கிமீ (11 மைல்) நீளமுடைய செயற்கை அணைகரைகள் 22 கிமீ (14 மைல்) நீளமுள்ள உயர்கோபுரப் பாலங்கள் ,மேம்பாலங்கள் ஆகியவை இந்த இணைப்புகளில் அடங்கும். இந்த மேம்பாலங்கள் கடல்வழிப்பாதையை அனுமதிக்கும் இடங்களில் 40 மீட்டர் (131 அடி) உயரம் இருக்கும். கத்தார் கடல் பாலத்தின் கிழக்கு முனை கத்தார் நாட்டின் சுபாராக் நகருக்கு தெற்கில் 5 கி.மீ தொலைவிலுள்ள ராசு அசுகாய்ரிச்சிலும், எதிர்முனை பகுரைன் நாட்டின் அசுகாரின் வடக்குப் பகுதியையும் இணைக்கக் கூடியதாக இருக்கும்.

கத்தார் மற்றும் பகுரைன் (மேல் இடப்பக்கம் தீவு )

தரைப்பாலத்தின் கட்டுமானத்திற்கான திட்டம் முதலில் செப்டம்பர் 2001 இல் தீட்டப்பட்டது. டென்மார்க்கைச் சேர்ந்த கோவி குழுமம் 60 மில்லியன் டானிய குரோன் தொகைக்கான முதற்கட்டமாக கத்தார் நாட்டுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது[8]. கோவி குழுமம் இணைப்பு குறித்த பூர்வாங்க ஆய்வுகளைத் தொடங்கியது[9][10][11]

மைல்கற்கள்[தொகு]

சுபாராக் நகருக்கு அருகில் வடமேற்கு கத்தார் மற்றும் மனாமா நகருக்கு அருகில் பகுரைனையும் இணைக்கும் உலகின் மிக நீண்ட இந்நிரந்தர இணைப்புத் திட்டத்திற்கு 2005 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 இல் ஒப்புதல் அளிக்கப்பட்டது[12] . தேவையான மூலதனத்தை திரட்டவும், கட்டுமானப் பணிகளை முன்னெடுக்கவும் தேவையான ஒரு நிறுவனத்தை அமைக்க இரு நாடுகளுக்கும் இடையே ஒரு முறையான ஒப்பந்தம் 2006 ஆம் ஆண்டு சூன் மாதம் 11 இல் கையெழுத்தானது[13]

கட்டுமானப் பணிகள் ஏழு மாதங்களுக்குள் தொடங்கப்பட்டு 48 மாதங்களில் கட்டிமுடிக்கப்படும் 30 செப்டம்பர் 2007 அன்று அறிவிக்கப்பட்டது[14] . இதன் விளைவாக கத்தார் பகுரைன் தரைப்பால அறக்கட்டளைக்கும் கட்டுமான நிறுவனங்களுக்கும் இடையில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

கத்தார் பகுரைன் தரைப்பால அறக்கட்டளை அமைப்பு 2008 ஆம் ஆண்டு நவம்பர் 15 இல், இயூசுடன் நகரைத் தலைமையிடமாகக் கொண்ட பொறியியல் நிறுவனமான கே.பி.ஆர் எனப்படும் கெல்லாக் பிரவுன்&உரூட் நிறுவனத்திற்கு ஒரு ஒப்பந்தத்தை வழாங்கியது. கத்தார் பகுரைன் சாலை, இரயில் பாதை ஆகியனவற்றுக்கான மேலாண்மை, திட்ட வடிவமைப்பு முதலானவற்றை வழங்குவது இந்நிறுவனத்தின் பணியாகும்[15]

இரயில் போக்குவரத்திற்கு பொருத்தமுள்ளதாகச் செய்ய பாலத்தின் சாய்வை அமைப்பது குறித்து விவாதங்கள் 2009 ஆம் ஆண்டில் நிகழ்ந்தன[16]. பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த கட்டட வடிவமைப்பாளர் தாமசு லெவினின் மற்றும் கிறிசுடோப் செரோன் இருவரும் வின்சி தலைமையிலான நிறுவனங்களுடன் இணைந்து பொறியாளர்கள் ஒத்துழைப்புடன் தரைப்பாலம் மற்றும் இரண்டு பிரதான பாலங்களையும் வடிவமைத்தனர்.

2010 ஆம் ஆண்டு மே மாதத்தில் கத்தார் நாட்டு கடலோர காவல்படையினர் அவார் தீவு குறித்த சர்ச்சையில் ஈடுபட்டு பகுரைன் நாட்டு மீனவர் ஒருவரை காயப்படுத்தினர். இதன் விளைவாக தரைபாலத் திட்டம் மீண்டும் தள்ளி வைக்கப்பட்டது[17]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Work on Qatar-Bahrain causeway to start next month"
 2. "Qatar-Bahrain Causeway USD4 bln project on hold - says Qatar Bahrain Causeway Foundation"[தொடர்பிழந்த இணைப்பு]
 3. "Qatar-Bahrain causeway to be ready by 2015"
 4. "Qatar-Bahrain Causeway still planned - MEED.com - 24 May 2011"
 5. "GREEN LIGHT"
 6. "Qatar-Bahrain causeway faces delay, says minister"
 7. "Setting standards for the GCC rail network". MEED. பார்த்த நாள் 2010-11-05.
 8. "The Qatar Bahrain causeway, Qatar Bahrain"[தொடர்பிழந்த இணைப்பு]
 9. "Qatar - Bahrain Causeway" பரணிடப்பட்டது நவம்பர் 17, 2008 at the வந்தவழி இயந்திரம்
 10. "Modelling Studies for the Qatar/Bahrain Causeway Project" பரணிடப்பட்டது நவம்பர் 17, 2008 at the வந்தவழி இயந்திரம்
 11. "Environmental Impact Assessment Qatar – Bahrain Causeway" பரணிடப்பட்டது திசம்பர் 4, 2008 at the வந்தவழி இயந்திரம்
 12. "USD4.8bn Qatar, Bahrain causeway" (article dated Feb. 28, 2005, consulted Oct. 7, 2007) "Archived copy". மூல முகவரியிலிருந்து September 27, 2007 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் April 9, 2007.
 13. "Bahrain-Qatar Causeway Construction to Begin" (article dated June 12, 2006, consulted Oct. 7, 2007) [1][தொடர்பிழந்த இணைப்பு]
 14. "Construction of Bahrain-Qatar causeway to start next year" (article dated Sept. 30, 2007, consulted Oct. 7, 2007 "Archived copy". மூல முகவரியிலிருந்து November 6, 2007 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் October 6, 2007.
 15. "KBR Awarded Contract by Qatar-Bahrain Causeway Foundation for Project Management of World's Longest Marine Causeway" பரணிடப்பட்டது சனவரி 16, 2013 at the வந்தவழி இயந்திரம்
 16. "Rail link forces redesign of bridge between Qatar and Bahrain"
 17. "Qatar Bahrain Causeway in doubt" (article dated June 16, 2010, consulted Oct. 3, 2010) [2][தொடர்பிழந்த இணைப்பு]

புற இணைப்புகள்[தொகு]