உள்ளடக்கத்துக்குச் செல்

கதிர் (நடிகர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கதிர்
பிறப்பு21.09.1992
தமிழ்நாடு, இந்தியா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2013 – தற்போது வரை

கதிர் (Kathir) இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் தற்போது தமிழ்த் திரைப்படங்களில் நடித்து வருகிறார். 2013 ஆம் ஆண்டில் மத யானைக் கூட்டம் எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். 2015 ஆம் ஆண்டில் வெளியான கிருமி எனும் திரைப்படத்தின் மூலம் பரவலாக அறியப்பட்டார்.

திரைப்பட வாழ்க்கை

[தொகு]

2013 ஆம் ஆண்டில் விக்ரம் சுகுமாறன் இயக்கிய மதயானைக் கூட்டம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதனை ஜி. வி. பிரகாஷ் குமார் தயாரித்தார்.[1] இந்தத் திரைப்படத்திற்கும் கதிரின் நடிப்பிற்கும் நேர்மறையான விமர்சனங்கள் கிடைத்தன. தி இந்து நாளிதழ் கதிர் தனது சிறப்பான திறனை வெளிப்படுத்தியுள்ளார் எனவும், சிஃபி வலைத்தளம் தனது முதல் கதாப்பாத்திரத்தினை சிறப்பாக செய்துள்ளார் எனத் தெரிவித்தது.[2][3][4] பின் 2015 ஆம் ஆண்டில் வெளியான கிருமி திரைப்படமும் இவருக்கு பாராட்டுக்களைப் பெற்றுத் தந்தது.[5][6]

திரைப்படங்கள்

[தொகு]
Films that have not yet been released இக்குறியிட்ட திரைப்படங்கள் இன்னும் வெளியாகவில்லை
ஆண்டு படம் பாத்திரம் குறிப்பு
2013 மதயானைக் கூட்டம் (திரைப்படம்) பார்த்திபன்
2015 கிருமி கதிர்
2017 என்னோடு விளையாடு ஸ்ரீதர்
விக்ரம் வேதா புல்லி
2018 பரியேறும் பெருமாள் பரியேரும் பெருமாள்
சிகை
சத்ரு

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Audio Beat: Madha Yaanai Koottam - Village vignettes". The Hindu. 2013-12-14. பார்க்கப்பட்ட நாள் 2017-02-16.
  2. "Review: Madha Yaanai Koottam shows senseless violence - Rediff.com Movies". Rediff.com. 2013-12-26. பார்க்கப்பட்ட நாள் 2017-02-16.
  3. "Madhayaanai Koottam: Herd mentality". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 2017-02-16.
  4. "Review :". Sify.com. 2013-12-26. Archived from the original on 2016-04-25. பார்க்கப்பட்ட நாள் 2017-02-16.
  5. "Kirumi: A superb, low-key character study masquerading as a thriller". The Hindu. 2015-09-25. பார்க்கப்பட்ட நாள் 2017-02-16.
  6. "Review : 'Kirumi' Review: Original story and a tight screenplay". Sify.com. 2015-09-23. Archived from the original on 2015-09-26. பார்க்கப்பட்ட நாள் 2017-02-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கதிர்_(நடிகர்)&oldid=3900192" இலிருந்து மீள்விக்கப்பட்டது