கதிர் செறிவு வரைபடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கர்டர் மற்றும் டிாிபீல்டின் (Hurter & Driffield) கதிர் செறிவு வரைபடம்
இரா. கண்டின் (R. Hunt's) கதிர் செறிவு வரைபட விளக்கம்[1]

கதிர் செறிவு வரைபடம் (actinograph) என்பது ஒளியின் அளவை அளக்கப் பயன்படுகிறது. இதன் மூலம் புகைப்படத்தில், எந்த அளவிற்கு ஒளியைக் காட்ட வேண்டும் என்பது கணிக்கப்படுகிறது. அதாவது ஒளிப்படத்துறையில், இடத்திற்கு ஏற்றாற் போல் ஒளிச்செறிவின் அளவை நிர்ணயிக்க உதவுகிறது.

ஆரம்ப கால கதிர் செறிவு வரைபடங்கள் 24 மணி நேரமும் பதிவிடப்பட்டன. சுழலும் புகைப்படச் சுருளில் வரைபடமானது வரையப்பட்டது. அரச கார்ன்வெல் தொழிற்நுட்ப கழகத்தில் (Royal Cornwall Polytechnic Society) 1845 ஆம் ஆண்டு இராபர்ட் கண்ட் இப்படத்தைப் பற்றி விளக்கியுள்ளார்.[2]

1888 ல் பெர்டினன்ட் கர்டர் (Ferdinand Hurter) மற்றும் வெரோ சார்லசு டிாிபீல்டு (Vero Charles Driffield) ஆகியோர் சூரிய ஒளியின் திறனையும், புகைப்படக்கருவியின் துளையை எவ்வளவு நேரம் திறக்க வேண்டும் என்பதையும் அளக்கும் கருவியை உருவாக்கி, அதற்குக் காப்புரிமை பெற்றனர். இவை முதலில் நழுவு சட்டங்களாக மட்டுமே வடிவமைக்கப்பட்டன. பின்னரே வரைப்படத்தாள் இணைக்கப்பட்டது.

1911 ல் ஆர்தர் வில்லியம் கிளைடென் (Arthur William Clayden) இக் கருவியை வானிலையியலர்களும் பயன்படுத்தும் வண்ணம் வடிவமைத்தார். கதிர்வீசலில் ஏற்படும் மாற்றத்தைப் பதிவிட மற்றும் கண்காணிக்க இக் கருவி பயன்படுத்தப்பட்டது.[3]

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. John Timbs, The Year-book of Facts in Science and Art, London: Simpkin, Marshall, and Co., 1846
  2. Klaus Hentschel, Mapping the Spectrum: Techniques of Visual Representation in Research and Teaching, Oxford University Press, 2002, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-850953-7.
  3. The actinograph: An instrument for observing and recording changes in radiation (April 1911) Quarterly Journal of the Royal Meteorological Society 37 no. 158, pp, 163–168
"https://ta.wikipedia.org/w/index.php?title=கதிர்_செறிவு_வரைபடம்&oldid=2769778" இலிருந்து மீள்விக்கப்பட்டது