கண் பரிசோதனை சட்டகம்
கண் பரிசோதனை சட்டகம் (Ophthalmic trial frame) என்பது கண் மருத்துவர்கள் மற்றும் பார்வை அளவையியல் நிபுணர்கள் போன்ற கண் மருத்துவ நிபுணர்களால் பயன்படுத்தப்படும் ஒரு கருவியாகும். இது அடிப்படையில் பல அலகுகளைக் கொண்ட சரிசெய்து கொள்ளக்கூடிய கண்ணாடி சட்டகமாகும். துல்லியமான பார்வைத் திறனை அடைய உதவும் பார்வை திருத்தும் வில்லைகள், பிற துணைக்கருவிகள் மற்றும் விழித்திரை நோக்கியையும் ஏந்திக்கொள்ள இச்சட்டகம் பயன்படுத்தப்படுகிறது.
பயன்கள்
[தொகு]நோயாளியின் ஒளிவிலகல் பிழை, கண் கூச்சம், வெள்ளெழுத்து நோய் போன்றவற்றை அளவிட உதவும் வில்லைகள், பட்டகம் அல்லது ஊசித்துளை வட்டு போன்ற கருவிகளைப் பிடித்துக் கொள்ளப் பயன்படுகிறது.[1] பரிசோதனைச் சட்டகத்தின் அலகுகள் வில்லைகளை சரியான நிலையில் வைத்திருக்க அனுமதிக்கின்றன.
வில்லைகளைக் கொண்டிருக்கும் ஒளிவிலக்கிகள் விரைவான ஒளிவிலகலை அனுமதித்தாலும், நோயாளியின் உட்காரும் நிலை மற்றும் விருப்பமான பணி தூரத்தில் கிட்டப் பார்வையை பரிசோதிக்க உதவுகிறது.[1] சட்டகக் கருவி கையடக்கமாக இருப்பதால், குடியிருப்பு வருகைகள் மற்றும் வெளிப்புற முகாம்களின் போது பார்வை மற்றும் விழித்திரை சோதனைகளுக்குச் சட்டகம் சிறந்ததாக உள்ளது. கண் பரிசோதனை சட்டகம் மிகவும் இயற்கையான பார்வையை அனுமதிப்பதால், குறைந்த பார்வை கொண்ட நோயாளிகளால் சோதனை சட்டக ஒளிவிலகல் விரும்பப்படுகிறது.[2][3]
உட்கூறுகள்
[தொகு]ஒரு சிறந்த பரிசோதனைச் சட்டகத்தில் குறைந்தபட்சம் 3 அலகுகள் உள்ளன. கோள வில்லைகள், உருளை வில்லைகள், ஊசித்துளை வட்டுகள் போன்றவற்றை பிடித்துக் கொள்ள இவை பயன்படுகின்றன.[4] பார்வைச் சிதறலுக்கான அச்சுக் கோணம் வெளியில் தெரியும் அலகில் குறிக்கப்படுகிறது. கண்பாவை தூரம், பக்க கோணம், உயரம் மற்றும் உருளை வில்லை அச்சை சரிசெய்ய குமிழ்கள் வைக்கப்பட்டுள்ளன.[5] கண்களுக்கு முன்னால் உள்ள வில்லைகளை சரியாக நிலைநிறுத்துவதற்கு உதவும் மூக்குக் கண்ணாடி தொகுதியை முன்-பின்புறமாகவும் மேல்-கீழாகவும் நகர்த்தலாம்.[5] சட்டகத்தின் கால்களின் நீளத்தையும் சரிசெய்யலாம்.[5] இரு பக்கத் தொகுப்புகளின் நிலைகள் கண்பாவைகளிடை தூரத்தின் சரியான அளவீட்டைக் கொடுக்கின்றன. [5]
-
பரிசோதனை சட்டகத்தின் மேல்பக்கத் தோற்றம்
-
பார்வைச் சிதறல் சோதனை செய்யும் போது பரிசோதனை சட்டகத்தை அணிந்துள்ள நோயாளி
-
ஒளிவிலகல் சோதனை செய்யும் போது பரிசோதனை சட்டகத்தை அணிந்துள்ள நோயாளி
-
பரிசோதனை சட்டகத்துடன் இரட்டை மேதாக்சு கழி சோதனை
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Refraction and prescribing". Clinical procedures in primary eye care (in English). David B. Elliott (Fourth ed.). Philadelphia. 2014. pp. 73–75. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7020-5194-4. இணையக் கணினி நூலக மைய எண் 863192233.
{{cite book}}
: CS1 maint: location missing publisher (link) CS1 maint: others (link) CS1 maint: unrecognized language (link) - ↑ DeCarlo, Dawn K.; McGwin, Gerald; Searcey, Karen; Gao, Liyan; Snow, Marsha; Waterbor, John; Owsley, Cynthia (January 2013). "Trial Frame Refraction versus Autorefraction among New Patients in a Low-Vision Clinic". Investigative Ophthalmology & Visual Science 54 (1): 19–24. doi:10.1167/iovs.12-10508. பன்னாட்டுத் தர தொடர் எண்:0146-0404. பப்மெட்:23188726.
- ↑ "An accurate trial frame refraction is the key to managing low vision patients". www.healio.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-04-17.
- ↑ A. K. Khurana (2018). "clinical refraction: determination of the errors of refraction". Theory and practice of optics and refraction (in English) (Fourth ed.). Elsevier. p. 131.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ 5.0 5.1 5.2 5.3 "Community Eye Health Journal » Understanding and looking after a retinoscope and trial lens set". www.cehjournal.org. பார்க்கப்பட்ட நாள் 2022-04-17.