கடற்காற்று நடவடிக்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கடற்காற்று நடவடிக்கை
Operation Sea Breeze
ஈழப் போர் பகுதி
நாள் செப்டம்பர் 1990
இடம் முல்லைத்தீவு, வட இலங்கை
இலங்கை இராணுவம் வெற்றி
பிரிவினர்
இலங்கை இலங்கை ஆயுதப் படைகள் தமிழீழ விடுதலைப் புலிகள்
தளபதிகள், தலைவர்கள்
மேஜர் ஜெனரல் (பின்னர் லெப்டினன்ட் ஜெனரல்) டென்சில் கொப்பேகடுவ,
படைப்பகுதித் தலைவர் (பின்னர் மேஜர் ஜெனரல்) விஜய விமலரத்ன
வேலுப்பிள்ளை பிரபாகரன்

கடற்காற்று நடவடிக்கை (Operation Sea Breeze (Sri Lanka)) என்பது இலங்கை முல்லைத்தீவில் இலங்கை ஆயுதப்படைகளால் முன்னெடுக்கபட்ட ஒரு ஒருங்கிணைந்த இராணுவ நடவடிக்கை ஆகும். இலங்கை இராணுவம் தனது வரலாற்றில் முன்னெடுத்த முதல் நீர்நில நடவடிக்கை இதுவாகும். முல்லைத்தீவில் உள்ள இலங்கை இராணுவ முகாமை பலப்படுத்தவும், தமிழீழ விடுதலைப் புலிகள்களின் சுற்றிவளைப்பை முறியடிக்கவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இது வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு, முகாமின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி விரிவாக்கபட்டது.[1]

1990 ஆம் ஆண்டு சூன் மாதம் தனிமைப்படுத்தப்பட்ட இராணுவ முகாமானது விடுதலைப் புலிகளால் பலமான தாக்குதலுக்கு உள்ளானது. முற்றுகையிடப்பட்ட முகாமை வலுப்படுத்தும் முயற்சியாக, கிழக்குப் பகுதியின் ஒட்டுமொத்த நடவடிக்கைத் தளபதியான மேஜர் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ, கடற்காற்று நடவடிக்கையை மேற்கொண்டார். இலங்கைக் கடற்படையின் விரைவு துப்பாக்கி படகுகளான, எஸ். எல். என். எஸ். சூரயா, எஸ். எல். என். எஸ். வீரயா ஆகியவை கரையோரத்தில் புலிகளின் துப்பாக்கிச் சூட்டை அடக்குவதற்காக கடற்படை துப்பாக்கிச் சூடுகளை மேற்கொண்டன. முல்லைத்தீவுக்கு வடக்கே மூன்று கடல் மைல் தொலைவில் உள்ள கடற்கரைக்கு எஸ். எல். என். எஸ். கந்துலா, எஸ். எல். என். எஸ். பப்பாதா ஆகிய விரைவுத் துப்பாக்கிப் படகுகள் தரைப்படைகளை கொண்டுவந்து இறக்கின.[2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கடற்காற்று_நடவடிக்கை&oldid=3954749" இலிருந்து மீள்விக்கப்பட்டது