கங்கை காவிரி விரைவு வண்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சென்னை சென்ட்ரல்-சாப்ரா சந்திப்பு கங்கா காவேரி அதிவிரைவு தொடருந்து
கங்கா காவேரி அதிவிரைவு தொடருந்து பெயர்ப்பலகை
கண்ணோட்டம்
வகைஅதிவிரைவு
நிகழ்வு இயலிடம்தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், தெலுங்கானா,மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார்
முதல் சேவைசனவரி 1, 1984; 40 ஆண்டுகள் முன்னர் (1984-01-01)
நடத்துனர்(கள்)தென்னிந்திய ரயில்வே
வழி
தொடக்கம்புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆர் சென்ட்ரல் சந்திப்பு சென்ட்ரல் சந்திப்பு நிலையம்
முடிவுசாப்ரா
ஓடும் தூரம்2,341 km (1,455 mi)
சராசரி பயண நேரம்42 மணி நேரம்
சேவைகளின் காலஅளவுவாரமிருமுறை
தொடருந்தின் இலக்கம்12669/ 12670
பயணச் சேவைகள்
வகுப்பு(கள்)முதல் வகுப்பு குளிர்சாதன வசதி கொண்ட பெட்டி, ஈரடுக்கு மற்றும் மூன்றடுக்கு இரண்டாம் வகுப்பு குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகள், முன்பதிவு வசதி கொண்ட இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டிகள், பொதுப்பெட்டிகள் மற்றும் சமையலறை பெட்டி வசதி .
இருக்கை வசதிவசதி உண்டு
படுக்கை வசதிவசதி உண்டு
உணவு வசதிகள்வசதி உண்டு
தொழில்நுட்பத் தரவுகள்
வேகம்55 Km/hr சராசரியாக
வழிகாட்டுக் குறிப்புப் படம்

கங்கா காவேரி அதிவிரைவு தொடருந்து வாரம் இருமுறை இந்திய ரயில்வே துறையினரால் தென்னிந்தியாவின் சென்னை சென்ட்ரல் சந்திப்பிலிருந்து பீகார் மாநிலத்தின் சாப்ரா நிலையம் வரை இயக்கப்படும் அதிவிரைவு தொடருந்தாகும்.[1][2] இந்த தொடருந்தானது 1977ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16ஆம் தேதி உத்திரப் பிரதேசம் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் அப்போதைய ரயில்வே துறை அமைச்சருமான கமலாபதி திரிபாதி அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.[3] அப்போதைய மதறாஸ் மாகாணத்தின் (தற்போது சென்னை) மெட்ராஸ் கடற்கரை நிலையம் முதல் உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரணாசி நிலையம் வரை இயக்கப்பட்டது. ஆரம்ப காலகட்டத்தில் இந்த இந்த தொடருந்தானது குறுகிய தொடருந்து பாதையில் இயக்கப்பட்டது. மேலும் வாரணாசியில் இருந்து சென்னைக் கடற்கரை தொடருந்து நிலையம் வரை இயக்கப்பட்டபின்பு அங்கிருந்து காவேரி ஆற்றின் கரையோர தொடருந்து பாதை வழியாக ராமேஸ்வரம் வரை இயக்கப்பட்டது.

பெயர்க்காரணம்[தொகு]

இந்தியர்களின் புனித நகரமாக கருதப்படும் உத்திரப்பிரதேசம் மாநிலம் வாரணாசி மற்றும் பீகார் மாநிலம் சாப்ரா ஆகிய இரு நகரங்களின் வழியாக ஓடும் ஆறு கங்கை ஆகும். தென்னிந்தியாவின் கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் வழியாக ஓடும் ஆறு காவிரி ஆகும். இந்த தொடருந்தானது இவ்விரு ஆற்றங்கரை ஓரங்களில் போடப்பட்டுள்ள தொடருந்து பாதைகளில் செல்லுவதால் கங்கா காவேரி விரைவு தொடருந்து என பெயர் பெற்றது பெற்றது.

வரலாறு[தொகு]

139 மற்றும் 140 என்ற எண்களில் இயக்கப்பட்ட இந்த தொடருந்தானது ஆரம்பத்தில் வாரணாசி நிலையம் மற்றும் மெட்ராஸ் கடற்கரை நிலையம் ஆகிய இரண்டு நிலையங்களுக்கும் இடையில் இயக்கப்பட்டது. அங்கிருந்து மெட்ராஸ் கடற்கரை நிலையத்திலிருந்து குறுகிய வழிப்பாதையில் ராமேஸ்வரம் வரை இயக்கப்பட்டது. இந்துமத புனித இடங்களாக கருதப்படும் வாரணாசி, ராமேஸ்வரம் ஆகிய இரண்டு இடங்களையும் இணைக்கும் வகையில் இந்த தொடருந்து இயக்கப்பட்டது இடையில் சிறிது காலம் சென்னை கடற்கரை நிலையம் வரை இயக்கப்பட்டு வந்த இந்த தொடருந்து,விரைவு தொடருந்து என்ற நிலையிலிருந்து சாதாரண தொடருந்து என்ற நிலைக்கு மாற்றப்பட்டு சென்னை சென்ட்ரல் (அப்போதைய மெட்ராஸ் சென்ட்ரல்) நிலையம் வரை இயக்கப்பட்டது. சென்னை முதல் ராமேஸ்வரம் வரை குறுகிய தொடருந்து பாதையாக இருந்த காரணத்தினால் அவ்விரு நிலையங்களுக்கும் இடையே இயக்கம் நிறுத்தப்பட்டு கங்கா காவேரி விரைவு தொடர்ந்து என்ற பெயர் மெட்ராஸ் வாரணாசி விரைவு தொடருந்து என மாற்றப்பட்டது. இதன்படி நிறுத்தங்கள் அதிகரிக்கப்பட்டு ஓரிரவில் பயணித்து இறுதி நிலையம் சென்றடைந்த இந்த சென்றடைந்த இந்த தொடருந்து பயண நேரம் அதிகரித்து இரண்டு இரவுகள் பயணம் செய்யும் வகையில் மாற்றப்பட்டது. குளிர்சாதன வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டது.[4] 1990களில் அப்போதைய ரயில்வே துறை அமைச்சரான ஜாபர் ஷெரீப் அவர்களின் முன்னெடுப்பில் முன்னதாக இருந்தபடியே இந்த தொடருந்து கங்கா காவேரி விரைவு தொடருந்து என பெயர் மாற்றப்பட்டு தொடர்வண்டியின் வேகமும் அதிகரிக்கப்பட்டது .[5][6][7] இதன் மூலம் வட இந்தியாவின் புனித நகரமான வாரணாசிக்கு புனித யாத்திரையாக செல்லும் தென்னிந்திய பயணிகள் மிகவும் பயனடைந்தனர்.[8][9][10] 2006 ஆம் ஆண்டு டிசம்பர் முதல் தென்னிந்திய பயணிகள் மற்றும் வாரணாசிவாசிகளின் பலத்த எதிர்ப்புகளுக்கு இடையே கங்கா காவிரி தொடருந்தானது சாப்ரா நிலையம் வரை நீட்டிக்கப்பட்டது.[11][12]

இழுவை இயந்திரம்[தொகு]

சென்னை சென்ட்ரல் நிலையத்திலிருந்து இட்டரசி நிலையம் வரை மின்தூக்கி இழுவை இயந்திரம் WDP4D மூலம் எடுக்கப்படும் இந்த தொடர் உண்டானது அதன்பின்பு டீசல் இயந்திரம் பயன்படுத்தி சாப்ரா நிலையம் வரை இழுக்கப்படுகிறது.

பயணத்திட்டம்[தொகு]

12669 என்று எண்ணைக் கொண்ட இந்த அதிவிரைவு தொடருந்து சென்னை சென்ட்ரல் நிலையத்திலிருந்து ஒவ்வொரு வாரமும் திங்கள் மற்றும் சனிக்கிழமைகளில் மாலை ஐந்து நாற்பதுக்கு இயக்கப்பட்டு குடூர், ஓங்கோல், விஜயவாடா சந்திப்பு நிலையம், கம்மம், வாரங்கல், ராமகுண்டம், பல்கார்ஷா நிலையம், நாக்பூர், இட்டரசி சந்திப்பு, ஜபல்பூர், கட்னி, சாட்னா, அலகாபாத் சந்திப்பு, வாரணாசி வழியாக 23 நிறுத்தங்களைக் கடந்து 2351 கிலோமீட்டர் தூரத்தை மணிக்கு 55 கிலோ மீட்டர் வீதம் மீட்டர் வீதம் வீதம் பயணித்து சாப்ரா நிலையத்தை வந்தடைகிறது. மறுமார்க்கமாக 12670 என்ற எண்ணைக்கொண்ட தொடருந்தானது ஒவ்வொரு வாரமும் திங்கள் மற்றும் புதன் கிழமைகளில் இரவு 9 மணிக்கு சாப்ரா நிலையத்திலிருந்து இயக்கப்பட்டு மணிக்கு 55 கிலோ மீட்டர் வீதம் 22 நிறுத்தங்களை 41 மணி 25 நிமிடங்கள் பயணித்து இரண்டு நாட்கள் கழித்து மதியம் 2.25 மணிக்கு

பயணப் பெட்டிகளின் அமைப்பு[தொகு]

முதல் வகுப்பு குளிர்சாதன வசதி கொண்ட பெட்டி ஒன்றும், இரண்டாம் வகுப்பு குளிர்சாதன வசதி கொண்ட ஈரடுக்கு பெட்டிகள் மூன்றும்,இரண்டாம் வகுப்பு குளிர்சாதன வசதி கொண்ட மூன்றடுக்கு பெட்டிகள் இரண்டும், முன்பதிவு வசதியுடன் படுக்கை வசதியும் கொண்ட இரண்டாம் வகுப்பு பெட்டிகள் பதிமூன்றும், பொதுப்பெட்டிகள் இரண்டும், சரக்கு பெட்டி ஒன்றும் மற்றும் சமையலறை பெட்டி ஒன்றும் என மொத்தம் இருபத்தி இரண்டு(22) பெட்டிகள் இந்த கங்கா காவிரி அதிவிரைவு தொடருந்தில் இணைக்கப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது.

Loco 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24
எசு.எல்.ஆர் பொது எசு13 எசு12 எசு11 எசு10 எசு9 எசு8 எசு7 எசு6 எசு5 எசு4 எசு3 உணவு எசு2 எசு1 பி2 பி1 ஏ3 ஏ2 ஏ1 எச்.ஏ ஏ1 பொது எசு.எல் ஆர்

மேற்கோள்கள்[தொகு]

  1. "12669/Ganga Kaveri Express (PT) - Chennai to Chhapra SR/Southern Zone - Railway Enquiry". Archived from the original on 26 September 2008. பார்க்கப்பட்ட நாள் 2008-09-26., India Rail Info,11 April 2015.
  2. "12670/Ganga Kaveri Express - Chhapra to Chennai SR/Southern Zone - Railway Enquiry". Archived from the original on 27 September 2008. பார்க்கப்பட்ட நாள் 2008-09-27., India Rail Info,11 April 2015.
  3. [1], [IRFCA.com],11 April 2015.
  4. [2], [IRFCA.com],11 April 2015.
  5. [3], [indiarailinfo.com],11 April 2015.
  6. [4], [indiarailinfo.com],11 April 2015.
  7. [5], [www.indiamike.com],11 April 2015.
  8. [6], [whereincity.com],11 April 2015.
  9. [7], [whereincity.com],11 April 2015.
  10. [8], Allahabad Nagar Nigam,11 April 2015.
  11. [9], [india9.com],11 April 2015.
  12. [10] பரணிடப்பட்டது 2015-04-25 at the வந்தவழி இயந்திரம், ஹிந்துஸ்தான் டைம்ஸ்,11 April 2015.