கங்கிரினைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கங்கிரினைட்டு
Cancrinite
Cancrinite 3166.jpg
கங்கிரினைட்டு
பொதுவானாவை
வகைஃபெல்சுபதாய்டல்
வேதி வாய்பாடுNa6Ca2[(CO3)2|Al6Si6O24]·2H2O
இனங்காணல்
நிறம்சாம்பல்-பச்சை, வெண்மை, மஞ்சள், நீலம், ஆரஞ்சு, சிவப்பு
படிக இயல்புஅரிய பட்டக படிகங்கள்
படிக அமைப்புஅறுகோணம்
இரட்டைப் படிகமுறல்அரிதானது
பிளப்புஒழுங்கான பிளவு {1010}, குறை பிளவு {0001}
முறிவுஒழுங்கற்ற/சமமற்ற
விகுவுத் தன்மைநொறுங்கும்
மோவின் அளவுகோல் வலிமை5-6
மிளிர்வுமுத்துப் போன்ற மிளிர்வு
கீற்றுவண்ணம்வெண்மை
ஒளிஊடுருவும் தன்மைஒளி புகும்,ஒளிகசியும்
ஒப்படர்த்தி2.42 - 2.51
ஒளியியல் பண்புகள்ஓரச்சு எதிரொளி சுழற்றி
ஒளிவிலகல் எண்nω = 1.507 - 1.528 nε = 1.495 - 1.503
இரட்டை ஒளிவிலகல்δ = 0.012 - 0.025
மேற்கோள்கள்[1][2][3]

கங்கிரினைட்டு (Cancrinite) என்பது Na6Ca2[(CO3)2|Al6Si6O24]•2H2O என்ற வேதியியல் வாய்பாடு கொண்ட ஃபெல்சுபதாய்டல் தொகுதியைச் சேர்ந்த ஒரு கனிமம் ஆகும். சிலிக்காவின் அளவு குறைந்த கார ஃபெல்சுபாரே, ஃபெல்சுபாதாய்டல் தொகுதியாகும். கூட்டு கார்பனேட்டு , சோடியம் சிலிக்கேட்டு மற்றும் அலுமினியம் ஆகியவை இக்கனிமத்தின் உட்கூறுகள் ஆகும். மஞ்சள் கலந்த பழுப்பு நிறமாகவும், சிவப்பு, பச்சை, வெண்மை மற்றும் நிறமற்றவையாகவும் கங்கிரினைட்டு கனிமம் காணப்படுகிறது. இக்கனிமத்தின் பிளவுகள் முத்துப் போன்ற மிளிர்வைக் கொண்டுள்ளன. குறை சங்கு முறிவு கொண்ட , எளிதில் உருகும் தன்மையுடைய இக்கனிமத்தின் கடினத் தன்மை 5-6 மற்றும் ஒப்படர்த்தி 2.45 ஆகும். சிலிக்கேட்டு வகை கனிமங்களுடன் இது இயல்புக்கு மாறாகச் செயல்படுகிறது. ஐதரோ குளோரிக் அமிலத்தில் கரைந்து பசை போன்ற ஊன் சிவப்பு வீழ்படிவைக் கொடுக்கிறது. அறுகோண அமைப்புடனும், அரிதான படிகங்களின் படிக அமைப்பும், ஒழுங்கான படிகப் பிளவுடனும் இதன் அமைப்பு காணப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கங்கிரினைட்டு&oldid=2632608" இருந்து மீள்விக்கப்பட்டது