ககன்யான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search


ககன்யான்
தயாரிப்பாளர்இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிட்டெட் மற்றும் இந்திய விண்வெளி ஆய்வு மையம்
நாடு இந்தியா
இயக்கம்இந்திய விண்வெளி ஆய்வு மையம்
விவரக்கூற்று
வடிவமைப்பு வாழ்நாள்7  days
ஏவு திணிவு7,800 கிகி (includes service module)[1]
உலர் திணிவு3,735 கிகி[1]
பணிக்குழு திறன்3
அளவைகள்விட்டம்: 3.00 m[1]
உயரம்: 2.70 m
கொள்ளளவு11.5 மீ3[1]
சுற்றுப்பாதை முறைமைதாழ் புவி-சுற்றுப்பாதை
தயாரிப்பு
நிகழ்நிலைமேம்படுத்துதலில்
முதல் ஏவல்டிசம்பர், 2020 (பயனிகள் இல்லாமல்), டிசம்பர்2021 ( திட்டமிட்டபடி பயணிகளுடன்) [2][3]

ககன்யான் (Gaganyaan விண்கலம்) என்பது மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டம் ஆகும். இந்த விண்கலத்தில் மூன்று பேர் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் இந்த விண்கலமானது ஜி. எஸ். எல். வி மார்க் III மூலம் 2021 ஆம் ஆண்டில் விண்ணில் ஏவப்படவுள்ளது. இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிட்டெட் தயாரித்துள்ள இந்த விண்கலத்தின் சோதனை ஓட்டமானது டிசம்பர் 18,2014 இல் நடைபெற்றது.[4]

வரலாறு[தொகு]

ககன்யானுக்கான தொடக்கநிலை ஆய்வுகள் மற்றும் தொழில்நுட்ப வசதிகள் தொடர்பான முன்னேற்பாடுகள் 2006 ஆம் ஆண்டில் துவங்கப்பட்டது. முதலில் இதற்கு சுற்றுப்பாதை வாகனம் என்று பொதுப் பெயரிடப்பட்டது. இது மேர்க்குரித் திட்டம் போன்றே வடிவமைக்கத் திட்டமிடப்பட்டது. மேலும் கூடுதலாக ஒரு வாரம் விண்வெளியில் நீடித்திருக்கும் திறன் கொண்டதாகவும் வடிவமைக்கத் திட்டமிடப்பட்டது. இந்தத் திட்டம் மார்ச், 2008 இல் இந்திய அரசிடம் நிதி பெறுவதற்காக ஒப்படைக்கப்பட்டது. இந்திய மனித விண்வெளி ஆய்வுத் திட்டமானது இதற்கான இசைவாணையை பிப்ரவரி, 2009 இல் அளித்தது.[5] பயணிகள் அல்லாத சோதனை ஓட்டமானது 2013 இல் நடத்தத் திட்டமிட்டுருந்தனர்.[6][7] பின் அது 2016 ஆம் ஆண்டாக மாற்றம் ஆனது.[8]

நிதி மற்றும் உள்கட்டமைப்பு[தொகு]

திட்டத்தின் முன்னேற்பாடுகளுக்கு இந்திய அரசானது 500 மில்லியன்இந்திய ரூபாய்களை 2007 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளுக்காக வழங்கியது. பயணிகள் விண்கலமானது 7 ஆண்டுகள் விண்வெளியில் தங்கும் திறன் கொண்டதாக வடிவமைக்க 124 பில்லியன் இந்திய ரூபாய் தேவை என எதிர்பார்க்கப்பட்டது. இந்திய ஐந்தாண்டு திட்டத்திற்கான (2007–12). திட்டமிடலின் போது திட்டக்குழு உறுப்பினர்கள் 2007 ஆம் ஆண்டில் பயணிகள் விண்கலத்திற்கான முன்னேற்பாடுகளுக்காக 50 பில்லியன் இந்திய ரூபாய் தேவைப்படும் என மதிப்பிட்டனர்.[9][10]

விளக்கம்[தொகு]

ககன்யான் என்பது முழுமையான தன்னாட்சி கொண்ட 3.7 டன் எடையுள்ள விண்கலம் ஆகும். இதில் மூன்று பேர் சுற்றுப்பாதைக்கு சென்று புவிக்கு திரும்பக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள்ளது. இந்த திட்டம் 7 நாட்கள் வரை சுற்றுப்பாதையில் இருக்கும்.

இது சோயூசு விண்கலம் போன்ற விண்கலம் ஆகும்.

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 Indian Manned Spacecraft. Astronautix. 2014.
  2. Gaganyaan mission to take Indian astronaut to space by 2022: PM Modi. The Hindu. 15 August 2018.
  3. "First Unmanned Mission Under Gaganyaan By December 2020, Says ISRO Chief". https://www.ndtv.com/india-news/first-unmanned-mission-under-gaganyaan-by-december-2020-says-isro-chief-1947483. 
  4. http://hal-india.com/Crew%20Module.asp
  5. Priyadarshi, Siddhanta (23 February 2009). "Planning Commission Okays ISRO Manned Space Flight Program". Indian Express: pp. 2. https://indianexpress.com/article/news-archive/web/plan-panel-okays-isro-manned-space-flight/. 
  6. ISRO gets green signal for manned space mission, Science News - By Indiaedunews.net
  7. "Gaganyan: How to send an Indian into space".
  8. Beary, Habib (27 January 2010). "India announces first manned space mission". Bangalore: BBC News. http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/8483787.stm. பார்த்த நாள்: 5 May 2010. 
  9. Mishra, Bibhu Ranjan (8 October 2008). "ISRO plans manned mission to moon in 2014". Business Standard. பார்த்த நாள் 14 June 2013.
  10. Eleventh Five year Plan (2007-12) proposals for Indian space program

வெளியிணைப்புகள்[தொகு]

ககன்யான்-அதிகாரப்பூர்வ வலைத்தளம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ககன்யான்&oldid=2800449" இருந்து மீள்விக்கப்பட்டது