உள்ளடக்கத்துக்குச் செல்

ஓ. பி. நய்யார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஓ. பி. நய்யார்
O.P.Nayyar
இந்திய அரசின் அஞ்சல் தலையில் நய்யார்
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்ஓம்கார் பிரசாத் நய்யார்
பிறப்பு(1926-01-16)16 சனவரி 1926
இலாகூர், பஞ்சாப், பிரித்தானிய இந்தியா
இறப்பு28 சனவரி 2007(2007-01-28) (அகவை 81)
மும்பை, மகாராட்டிரம், இந்தியா
இசை வடிவங்கள்திரை இசை
தொழில்(கள்)பாடகர், இசை தயாரிப்பாளர், இசையமைப்பாளர்
இசைக்கருவி(கள்)கின்னரப் பெட்டி, தோலக், கிளபம், நூதன முரசு
இசைத்துறையில்1951–1994

ஓம்கார் பிரசாத் நய்யார் (Omkar Prasad Nayyar) (16 ஜனவரி 1926 - 28 ஜனவரி 2007) ஒரு இந்தியத் திரைப்படத்துறையைச் சேர்ந்த இசையமைப்பாளரும், பாடகர்-பாடலாசிரியரும், இசைத் தயாரிப்பாளரும் மற்றும் இசையமைப்பாளரும் ஆவார். இந்தித் திரையுலகின் மெல்லிசை இசை அமைப்பாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். [1] நயா தௌர் படத்திற்காக 1958 ஆம் ஆண்டு சிறந்த இசை அமைப்பாளருக்கான பிலிம்பேர் விருதைப் பெற்றார். நய்யார் பாடகிகளான கீதா தத், ஆஷா போஸ்லே, முகமது ரபி ஆகியோருடன் அதிகம் பணியாற்றினார். இருப்பினும் பாலிவுட்டின் முன்னணி பெண் பாடகி லதா மங்கேஷ்கருடன் ஒருபோதும் பணியாற்றவில்லை.

பிரபல பாடகராக மாறுவதற்கு முன்பே கிஷோர் குமாரை அங்கீகரித்திருந்தார். பாப் ரே பாப் (1955), ராகினி (1958) போன்ற திரைப்படங்களில் கிஷோர் குமாரின் வெற்றிப் படங்களில் அடங்கும். ஆனால் இந்த உறவு நிலைக்கவில்லை.

நய்யாருக்கு, இந்துத்தானி இசையிலுள்ள பிலு இராகம் மிகவும் பிடித்த ராகம் ஆகும். இது கருநாடக இசையின் காபி இராகத்திற்கு சமமானது. இது இறுதியில் இவரது பெரும்பாலான பாடல்களுக்கு ஆதாரமாக இருந்தது.

இறப்பு

[தொகு]

நய்யார் மாரடைப்பால் 2007 ஜனவரி 28 அன்று இறந்தார். நய்யாரின் மறைவைத் தொடர்ந்து லதா மங்கேஷ்கர், ஷர்மிளா தாகூர், மும்தாஜ், மகேசு பட், முகமது சாகுர் கயாம், சக்தி சமந்தா, சோனு நிகம், ரவீந்திர ஜெயின், அனு மாலிக், பி. ஆர். சோப்ரா மற்றும் சம்மி கபூர் உள்ளிட்ட பல பாலிவுட் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர். இந்திய அஞ்சல் துறையால் 2013 மே 3 அன்று ஒரு நினைவு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. இவரது பேத்தி நிகரிகா ரைசாடாவும் ஒரு நடிகை ஆவார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. O.P.Nayyar – The Rhythm King – Hindi Film Music – Profiles. Cinema Sangeet (16 January 1926). Retrieved on 2018-11-08.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓ._பி._நய்யார்&oldid=4155433" இலிருந்து மீள்விக்கப்பட்டது