ஓம் பன்னா (புல்லட் பாபா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஓம் பன்னா
Om Bana sthan, near Chotila village, Pali, Rajasthan.jpg
ஓம் பன்னா ஆலயம்
சமயம்ராஜஸ்தான், இந்தியா

ஓம் பன்னா (Om Banna) புல்லட் பாபா என்றும் அழைக்கப்படும் [1] ) இது இந்தியாவின் சோத்பூருக்கு அருகிலுள்ள பாலி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு ஆலயம் ஆகும். இது ஒரு விசையுந்து வடிவத்தில் ஒரு தெய்வத்திற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது பாலியிலிருந்து 20 கிலோமீட்டர் (12 மைல்) தொலைவிலும், சோத்பூரிலிருந்து 53 கிலோமீட்டர் (33 மைல்) தொலைவிலும் பாலி-சோத்பூர் நெடுஞ்சாலையில், சோட்டிலா கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ளது. இந்த விசையுந்து 350 சிசி ராயல் என்ஃபீல்ட் புல்லட் ஆர்.என்.ஜே 7773 ஆகும்.

ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பாதுகாப்பான பயணத்திற்காக இங்கு வந்து பிரார்த்தனை செய்கிறார்கள். [2] [3]

வரலாறு[தொகு]

1991 திசம்பர் 2 அன்று, ஓம் பன்னா (முன்னர் ஓம் சிங் ரத்தோர் என அழைக்கப்பட்டார். (பன்னா என்பது ராஜ்புத் இளைஞர்களால் பயன்படுத்தப்படும் ஒரு கெளரவ சொல் ) பாலியின் சண்டேராவ் அருகே உள்ள பாங்கி நகரத்தில் இருந்து சோட்டிலாவுக்குச் சென்று கொண்டிருந்தபோது, இவரது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து ஒரு மரத்தில் மோதியது. இவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதே நேரத்தில் இவரது வாகனம் அருகிலுள்ள பள்ளத்தில் விழுந்தது. விபத்து நடந்த மறுநாள் காலை உள்ளூர் காவலர்கள் இவரது வாகனத்தை அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். அடுத்த நாள் நிலையத்திலிருந்து மர்மமான முறையில் வாகனம் காணாமல் போனதாகவும், சம்பவம் நடந்த இடத்தில் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டது. [4] காவலர்கள், மீண்டும் ஒரு முறை வாகனத்தை எடுத்துச் சென்றனர். இந்த முறை அதன் எரிபொருள் தொட்டியைக் காலி செய்து பூட்டு போட்டு வைத்தனர். அவர்களின் முயற்சிகள் இருந்தபோதிலும், மறுநாள் காலையில் அது மீண்டும் வாகனம் மறைந்து விபத்து நடந்த இடத்தில் காணப்பட்டது. விசையுந்து அதே பள்ளத்திற்குத் திரும்பிக் கொண்டே இருந்தது என்று கதை கூறப்படுகிறது. உள்ளூர் காவல் நிலையத்தின் காவலர்கள் மேற்கொண்ட ஒவ்வொரு முயற்சியையும் அது முறியடித்தது; வாகனம் எப்போதும் விடியற்காலையில் அதே இடத்திற்குத் திரும்பியது.

இது உள்ளூர் மக்களால் ஒரு அதிசயமாகக் காணப்பட்டது. மேலும் அவர்கள் "புல்லட் பைக்கை" வணங்கத் தொடங்கினர். அதிசய வாகனம் பற்றிய செய்தி அருகிலுள்ள கிராமங்களுக்கு பரவியது. பின்னர் அவர்கள் அதை வணங்க ஒரு கோவிலைக் கட்டினர். இந்த கோயில் "புல்லட் பாபாவின் கோயில்" என்று அழைக்கப்படுகிறது. ஓம் பன்னாவின் ஆவி துன்பமடைந்த பயணிகளுக்கு உதவுகிறது என்று நம்பப்படுகிறது.

ஓம் பன்னாவின் புல்லட் விசையுந்து (புல்லட் பன்னா)

வழிபாடு[தொகு]

ஒவ்வொரு நாளும் அருகிலுள்ள கிராமவாசிகளும் பயணிகளும் இங்கு தங்களது வாகனத்தை நிறுத்தி, வாகனத்திற்கும், அதன் மறைந்த உரிமையாளர் ஓம் சிங் ரத்தோருக்கும் பிரார்த்தனை செய்கிறார்கள். மேலும் சில ஓட்டுநர்கள் அந்த இடத்தில் சிறிய மது பாட்டில்களையும் வழங்குகிறார்கள். [5] சன்னதியில் பிரார்த்தனை செய்யாமல் தங்களது வாகனத்தை நிறுத்தாத ஒருவருக்கு அவரது பயணத்தில் ஆபத்து ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. பக்தர்கள் 'திலகம்' குறியை பூசி, வாகனத்தில் சிவப்பு நூலைக் கட்டுகிறார்கள். ஓம் பன்னா என்ற பெயரில் உள்ளூர் மக்கள் நாட்டுப்புறப் பாடல்களைப் பாடுகிறார்கள். [6]

ஓம் பன்னாவின் மரணத்திற்கு காரணமான மரம் வளையல்கள், தாவணி போன்றவற்றால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

பிரசாதங்களில் ஊதுபத்தி, மலர்கள், தேங்காய், மதுபானம், சிவப்பு நூல் மற்றும் இனிப்புகள் ஆகியவை அடங்கும். சன்னதியில் ஒரு நித்திய விளக்கு வைக்கப்பட்டுள்ளது. [7]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]