உள்ளடக்கத்துக்குச் செல்

ஓமிலைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஓமிலைட்டு
Homilite
பொதுவானாவை
வகைநெசோசிலிகேட்டு
வேதி வாய்பாடுCa2(Fe2+,Mg)B2Si2O10
இனங்காணல்
நிறம்பச்சை முதல் கரும்பழுப்பு
படிக அமைப்புஒற்றைச்சரிவச்சு
மோவின் அளவுகோல் வலிமை5–5 12
மிளிர்வுகண்ணாடி பளபளப்பு, பிசின் போன்றது
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகாது
ஒப்படர்த்தி3.34
ஒளியியல் பண்புகள்ஈரச்சு (+)
ஒளிவிலகல் எண்nα = 1.715 nβ = 1.725 nγ = 1.738
இரட்டை ஒளிவிலகல்δ =
2V கோணம்அளக்கப்பட்டது: 80°
மேற்கோள்கள்[1] [2] [3]

ஓமிலைட்டு (Homilite) என்பது Ca2(Fe,Mg)B2Si2O10 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். கடோலினைட்டு தொகுதி கனிமங்களில் ஒரு போரோ சிலிக்கேட்டு கனிமமாக இது வகைப்படுத்தப்படுகிறது.

பெக்மாடைட்டு எனப்படும் தீப்பாறைகளில் பெல்டுசுபார் பொதிகளில் பழுப்பு நிறத்தில் ஒற்றைச் சாய்வுப் படிகங்களாக ஓமிலைட்டு கனிமம் காணப்படுகிறது. நார்வே நாட்டின் சுடோக்கோ தீவில் 1876 ஆம் ஆண்டு ஓமிலைட்டு கண்டறியப்பட்டது. மெலிபேனைட்டு மற்றும் அல்லேனைட்டு கனிமங்களுடன் சேர்ந்து இது கானப்படுகிறது. கிரேக்க மொழியில் ஒன்றாகத் தோன்றுதல் என்ற பொருள் கொண்ட சொல்லிலிருந்து இக்கனிமத்திற்கான பெயர் வரப்பெற்றுள்ளது.

பன்னாட்டு கனிமவியல் சங்கம் ஓமிலைட்டு கனிமத்தை Hom[4]என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Mineral Society of America Handbook (PDF)
  2. Mindat with locations
  3. Webmineral data
  4. Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓமிலைட்டு&oldid=4137084" இலிருந்து மீள்விக்கப்பட்டது