ஒ. எம். நம்பியார்
ஒத்தயோது மாதவன் நம்பியார் Othayothu Madhavan Nambiar | |
---|---|
பிறப்பு | வடகரை, கோழிக்கோடு மாவட்டம், கேரளம், பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு | 16 பெப்ரவரி 1932
இறப்பு | 19 ஆகத்து 2021 வடகரை, கோழிக்கோடு மாவட்டம், கேரளா, இந்தியா | (அகவை 89)
ஒத்தயோது மாதவன் நம்பியார் (Othayothu Madhavan Nambiar) இந்தியாவைச் சேர்ந்த ஒரு தடகளப் பயிற்சியாளர் ஆவார். 1932 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16 ஆம் தேதியன்று இவர் பிறந்தார்.[1] 1985 ஆம் ஆண்டில் துரோணாச்சார்யா விருதையும் 2021 ஆம் ஆண்டில் பத்மசிறீ விருதையும் பெற்றார் [2] அவர் நன்கு அறியப்பட்ட இந்திய தடகள வீராங்கனை பி.டி.உஷாவுக்கு பயிற்சியாளராக இருந்தார். 2021 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 19 ஆம் தேதியன்று ஒ. எம். நம்பியார் காலமானார்.
பி.டி.உஷா
[தொகு]விமானப்படையில் பணியாற்ரிய நாட்களில் ஒரு விளையாட்டு வீரராக இந்தியாவின் பெயர் பதிந்த மேல் சட்டையை அணிய வேண்டும் என்று கனவு கண்டார். இறுதியில் ஓ. எம். நம்பியார் இந்தியாவின் சிறந்த பயிற்சியாளர்களில் ஒருவராக மாறினார், இந்திய தடகளத்திற்கு பி.டி. உஷாவை வழங்கியதற்காக அங்கீகரிக்கப்பட்ட `துரோணாச்சார்யா விருது வழங்கப்பட்டது.[3] விளையாட்டு வீராங்கனையான பி,டி, உஷாவை பயிற்சியாளர் ஓ. எம். நம்பியார் ஆசிய தடகளத்தின் அனைத்து காலத்திலும் சிறந்த வீராங்கனையாக மாற்றினார்."
லக்னோ மூத்தோர் தேசிய விளையாட்டுப் போட்டியில் 200 மீட்டர் ஓட்டத்தில் உஷாவின் சாதனை முறியடிப்பு வெற்றியைப் பற்றி நம்பியார் இவ்வாறு கூறினார். என்னுடைய வழிகாட்டுதலின் கீழ் ஆசிய தடகள மற்றும் களப் போட்டியில் முந்தைய சாதனையை உஷா பதித்த பத்தாண்டுகளுக்குப் பிறகு அவரது முயற்சியால் வந்தது பாராட்டத்தக்கது." என்றார்.
புனித இசுடீபன்சு
[தொகு]2005 ஆம் ஆண்டு வரை, நம்பியார் தெலுங்கானாவின் ஐதராபாத்தில் உள்ள புனித இசுடீபன்சு பன்னாட்டு பள்ளியில் மூத்த பயிற்சியாளராகப் பணியாற்றி வந்தார். இவருக்கு சேகர் பட்டாச்சார்யா மற்றும் சபிக் அலி ஆகிய இரு பயிற்சியாளர்கள் அங்கு இருந்தனர். அவர்களில் குறைந்தபட்சம் ஒருவராவது சிறந்து விளங்குவார் என்று நம்பியார் நம்பினார்.
நம்பியார் செயல்திறனை மேம்படுத்தும் மருந்துகளைப் பயன்படுத்துவதில் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார் அவ்வாறு பயன்படுத்துவதை மிகவும் எதிர்த்தார். சோதனை மற்றும் தரநிலைகள் மிகவும் மந்தமாக இருப்பதால், இந்தியாவில் தடகளப் போட்டிகள் முறைகேடுகளால் நிறைந்திருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.[3] பன்னாட்டு அளவில் இந்திய விளையாட்டு வீரர்கள் மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்கு இதுவே காரணம் என்று அவர் வாதிட்டார். வெளிநாடுகளில் இத்தகைய சோதனைகள் மிகவும் கடுமையாக இருந்தன.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ ലേഖകൻ, മാധ്യമം (2021-08-19). "കായിക പരിശീലകൻ ഒ.എം. നമ്പ്യാർ അന്തരിച്ചു". madhyamam.com (in மலையாளம்). பார்க்கப்பட்ட நாள் 2021-08-20.
- ↑ Chakraborty, Samrat (26 January 2021). "Padma Shri for OM Nambiar: The guiding force behind the 'Payyoli Express'". Olympics.com. பார்க்கப்பட்ட நாள் 19 August 2021.
- ↑ 3.0 3.1 Suryanarayanan, S. R. (12 March 2005). "The passion to coach is still there". SportStar. Vol. 28, no. 11. Archived from the original on 25 March 2006.
- ↑ Kumar, P. K. Ajith (2 November 2011). "O.M. Nambikr – still raring to go". தி இந்து இம் மூலத்தில் இருந்து 1 September 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150901211729/http://www.thehindu.com/todays-paper/tp-sports/om-nambiar-still-raring-to-go/article2590521.ece.