ஒளிமானி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒளிமானி

ஒளிமானி (photometer) என்பது புறவூதா முதல் அகச்சிவப்பு வரையிலான மற்றும் கட்புலனாகு நிறமாலை உட்பட மின்காந்த கதிர்வீச்சின் திறனை அளவிடும் ஒரு கருவியாகும். பெரும்பாலான ஒளிமானிகள் ஒளித்தடைகள், ஒளியுணர் இருமுனையம், அல்லது ஒளிபெருக்கிகளைப் பயன்படுத்தி ஒளியை மின்னோட்டமாக மாற்றுகின்றன.

ஒளிமானிகள் பின்வருவனவற்றை அளவிடுகின்றன:

இரம்ஃபோர்ட்சு ஒளிமானி

நிழல் ஒளிமானி[தொகு]

நிழல் ஒளிமானி (shadow photometer) என்பது இருவேறு ஒளி மூலங்களின் ஒளிர்திறனை (luminous intensities) ஒப்புநோக்கப் பயன்படும் ஒரு மிக எளிய கருவியாகும்.[1]ஒரு செங்குத்தான வெண் திரை உள்ளது.அதிலிருந்து சில சென்றி மீட்டர் தொலைவில் ஒரு மரத்தாலோ அல்லது உலோகத்தாலோ ஆன ஒரு கோல் செங்குத்தாக இருக்கிறது.அதற்கு அப்பால் சில சென்றிமீட்டர் தொலைவில் ஓர் ஒளி உமிழும் ஒளிமூலம் S1 உள்ளது.இந்த நிலையில் திரையில் கோலின் நிழல் திரையில் விழுகிறது.கோலுக்கும் ஒளிமூலத்திற்குமுள்ள இடைவெளியினைப் பொறுத்து கோலின் நிழல் கருமையாக இருக்கும்.இப்போது மற்றொரு ஒளி மூலத்தினை-இதன் ஒளிர்திறன் முதல் ஒளிமூலத்தின் திறனைவிட மாறுபட்டு இருக்க வேண்டும்-முதல் ஒளிமூலத்திற்கு அருகில் வைக்கவும். இப்போது திரையில் இரு நிழல்கள் கிடைக்கின்றன.இரண்டாவது ஒளிமூலம் S2 என்று கொள்ளப்பட்டால், I1,I2 என்பன முறையே அவைகளின் ஒளிர் திறன் என்றும் கொள்ளப்படலாம். இந்நிலையில் இரு ஒளிமூலங்களின் இடத்தினை நகர்த்தி திரையில் ஒரே கருமையுடன் இரு நிழல்களும் இருக்ககுமாறுள்ள இடத்தினை பெறவேண்டும். d1 ,d2 என்பன ஒளிமூலம் S1 ,S2 கள் திரையிலிருந்து எவ்வளவு தொலைவில் இருக்கின்றன என்பதனைச் சுட்டும்.இப்போது

I1 / I2 = d22 / d12.

என்று தெரியும் ஏதாவது ஒர் ஒளிமூலத்தின் ஒளிர்திறன் தெரிந்து இருக்கும் நிலையில், மற்றதன் ஒளிர்திறனைக் கணக்கிட்டுத் தெரியலாம்.இக்கருவி இரம்போர்ட் ஒளிமானி என்றும் அறியப்படுகிறது.

இரிச்சியின் ஒளிமானி

ரிச்சி ஒளிமானி[தொகு]

ரிச்சி ஒளிமானி (Ritche's photometer) இதுவும் ஒளிச்செறிவினை ஒப்பிடவும் ஒளிச்செறிவினை அளவிடவும் பயனாகும் ஒரு கருவியாகும். இக்கருவியில் 20 சென்டி மீட்டர் நீளமும் 8 செ.மீ. விட்டமும் கொண்ட ஒரு குழல் (a,b)உள்ளது. இதன் நடுப்பகுதியில் 10 செ.மீ நீளமும் அதே விட்டமும் கொண்ட ஒரு குழல் (c ,d) பொருத்தப்பட்டுள்ளது.இந்த இரண்டாவது குழலின் கீழ் மரத்தால் ஆனதும் சாய்ந்த பக்கங்களில் வெண்மையான தாள் ஒட்டப்பட்டும் இருக்கின்ற ஒரு ஆப்பு போன்ற அமைப்பு (efg ) உள்ளது.இரு வேறு ஒளிர்திறனுடைய இரு ஒளி மூலங்கள் (S1 ,S2 ) குழலின் இரு பக்கமும் உள்ளன.

குழல் ஏபி யின் மையத்திலிருந்து ஒளி மூலங்களின் தொலைவுகளை டி1 ,டி2 என கொள்வோம்.இத் தொலைவுகளை சீர் செய்து டி யின் பக்கமிருந்து பார்க்கும் போது ஒரே ஒளிர்வுடன் இருக்குமாறு செய்யவேண்டும்.இப்போது,

I1 / I2 = d22 / d12.

இவ்வாறு ஒளர்திறன்களை ஒப்பிடலாம்.

பன்சன் எண்ணெய்ப் புள்ளி ஒளிமானி[தொகு]

புன்சன் எண்ணெய் புள்ளி ஒளிமானி (Bunson oil spot photometer) என்பதும் ஒரு எளிய கருவியே. செங்குத்தாக உள்ள ஒரு சின்னத் திரையில் ஒரு சென்டி மீட்டர் விட்டம் கொண்ட ஒரு எண்ணெய் தடவிய புள்ளி உள்ளது.இத்திரையின் இரு பக்கமும் இரு வேறு ஒளிர்திறனுடைய ஒளிர்மூலங்கள் உள்ளன.இவைகளின் தொலைவுகளை சீர்செய்து எண்ணெய் புள்ளி மாறுவது போல் செய்யவேண்டும். திரையிலிருந்து அவைகளின் தொலைவுகளை அளந்து கொள்ள வேண்டும். முன்பு போல் ஒளிர்மூலங்களின் திறனை ஒப்பிடலாம்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "19th century textbook illustrations XII: two photometers". AAPT Physics Teacher. பார்த்த நாள் 5 October 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒளிமானி&oldid=2810946" இருந்து மீள்விக்கப்பட்டது