உள்ளடக்கத்துக்குச் செல்

நின்றொளிர்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நின்றொளிர்தல்

நின்றொளிர்தல் (Phosphorescence) என்பது உடனொளிர்தலிருந்து சற்று மாறுபட்டது. வெள்ளியால் தூண்டப்பட்ட சிங் சல்பைடு, மாசு இணைந்த இசுற்ராண்சியம் அலுமினேட் போன்ற கூட்டுப் பொருட்கள் எக்சு, காமாக் கதிர்களால் தாக்கப்படும் போது அவைகள் ஒளிர்கின்றன. தாக்கும் கதிர்கள் அகற்றப்பட்ட பின்பும் அவைகள் ஒளிர்கின்றன. இவ்வாறு தூண்டப்படுவது நின்ற பின்பும் ஒளிர்வது நின்றொளிர்தல் அல்லது பின்னும் ஒளிர்தல் எனப்படும். கதிர்படம் எடுக்கும் போது இப்பண்பு படத்தின் தெளிவின்மையை அதிகரிக்கவே செய்யும்.

பொதுவாக உடனொளிர்தலும் நின்றொளிர்தலும் ஒளிர்தல் (Luminescence) எனப்படும். இது அதிக வெப்பத்தால் ஒளிர்வதைச் சுட்டாது.

ஆதாரம்

[தொகு]
  • A dictionary of science -ELBS
"https://ta.wikipedia.org/w/index.php?title=நின்றொளிர்தல்&oldid=1501609" இலிருந்து மீள்விக்கப்பட்டது