ஒலேனா கோக்லட்கினா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒலேனா கோக்லட்கினா
தாய்மொழியில் பெயர்Олена Хохлаткіна
பிறப்புசனவரி 28, 1968 (1968-01-28) (அகவை 56)
கெர்சன் மாகாணம், உக்ரேனிய சோவியத் சோசலிச குடியரசு, சோவியத் குடியரசு
படித்த கல்வி நிறுவனங்கள்கெர்சன் கலாச்சார மற்றும் கல்வி பள்ளி
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1989–
வாழ்க்கைத்
துணை
விக்டர் சடனொவ்
பிள்ளைகள்2

ஒலேனா அன்டோனிவ்னா கோக்லட்கினா (Olena Antoniivna Kokhlatkina, உக்குரேனிய மொழி: Олена Анатолиявна Коклаткина; பிறப்பு: சனவரி 28,1968) ஒரு உக்ரைனிய நாடக, திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை ஆவார். இவர் உக்ரைனின் சிறந்த கலைஞர் மற்றும் மக்கள் கலைஞர் ஆகிய பட்டங்களை பெற்றுள்ளார்.

வாழ்க்கை வரலாறு[தொகு]

ஒலேனா அன்டோனிவ்னா கோக்லட்கினா சனவரி 28,1968 அன்று கெர்சன் மாகாணத்தில் பிறந்தார்.[1] இவர் 1989 ஆம் ஆண்டில் கெர்சன் கலாச்சார மற்றும் கல்வி பள்ளியில் பட்டம் பெற்றார்.[2][3] 1989 முதல் 1999 வரை, கெர்சன் பிராந்திய உக்ரேனிய இசை மற்றும் நாடக அரங்கில் நடிகையாக இருந்தார்.[4] 1997 முதல் 1998 வரை, இவர் மேகோப்பில் உள்ள ஒரு உருசிய நாடக அரங்கின் ஒரு பகுதியாக இருந்தார். 2000 ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில், டொனெட்ஸ்க் நகரில் உள்ள உக்ரேனிய தேசிய இசை மற்றும் நாடக அரங்கின் அழைப்பை ஏற்றுக்கொண்டு உக்ரைன் நாட்டுக்கு திரும்பினார். 2014 இல் டொனெட்ஸ்க் உருவிசயாவால் ஆக்கிரமிக்கப்பட்ட பிறகு இவர் தனது குடும்பத்துடன் டொனெட்ஸ்கை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.[5][6] கீவ் நகருக்கு குடிபெயர்ந்த இவர் 2015 இல் இவான் பிராங்கோ தேசிய கல்வி நாடக அரங்கில் ஒரு நடிகையானார்.[2]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

கோக்லட்கினா விக்டர் சதானோவை மணந்தார்.[1] இவர்களுக்கு நடிகை ஒக்சானா சதானோவா என்ற மகளும் ஒரு மகனும் உள்ளனர்.[7][8] இவர் உருசிய மற்றும் உக்குராணிய மொழிகளில் புலமை பெற்றவர்.[3]

நடிப்பு[தொகு]

திரை[தொகு]

ஆண்டு தலைப்பு பாத்திரம் இடம் மேற்கோள்கள்
ஜெல்ஸோமினோ இன் தி கன்டரி ஆப் லாயர்ஸ் டொமிசல் இவான் பிராங்கோ தேசிய கல்வி நாடக அரங்கம் [9]
டியர் பமீலா பமீலா
லைமெரிவ்னா ஷகாண்டிபியா
திரீ காம்ரேட்ஸ் மாடில்டா ஸ்டாஸ்
க்ரம் குரமின் தாய்
பீர் கின்ட் ஆசி
சிங், லோலா, சிங்! நடிகை, லோலாவின் நண்பர்
கலிகுலா ஹெலிகொண்
தி விட்ச் ஆப் கொனோடோப் ஜுபிகா
ஸ்மூத் ஆபராடர்ஸ் கிளாவ்டியா இவானிவ்னா
பாரஸ்ட் உலிதா

திரைப்படம்[தொகு]

ஆண்டு தலைப்பு பாத்திரம் மேற்கோள்கள்
யா ப்ரட்ஸ்யுயு ந த்சவ்ய்ந்தறி [1]
2022 பாம்பிர் முக்கிய கதாபாத்திரத்தின் தாய்

தொலைக்காட்சி[தொகு]

ஆண்டு தலைப்பு பாத்திரம் மேற்கோள்கள்
2020 டாக்டர் விபா [10]

விருதுகளும் கௌரவங்களும்[தொகு]

1996 ஆம் ஆண்டில், கோக்லட்கினா உக்ரைனின் சிறந்த கலைஞர் (மெரிட்டட் ஆர்ட்டிஸ்ட்) என்று பெயரிடப்பட்டார்.[3] 2008 ஆம் ஆண்டில், இவருக்கு உக்ரைனின் மக்கள் கலைஞர் விருது வழங்கப்பட்டது.[1] பாரஸ்ட் என்ற நாடகத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகைக்கான கீவ் பெக்டோரல் விருதைப் பெற்றார். 2018 ஆம் ஆண்டில், டியர் பமீலா (2019) நாடகத்தில் நடித்ததற்காக கீவ் பெக்டோரல் விருதைப் மீண்டும் பெற்றார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 "About Donetsk region in 2014, Kherson, a nephew in captivity and the theater: actress Olena Khokhlatkina in "Footnote"". Kanaldim. March 15, 2023. Archived from the original on 4 April 2023. பார்க்கப்பட்ட நாள் 4 April 2023.
  2. 2.0 2.1 2.2 "Khohlatkina Olena". National Academic Drama Theater named after Ivan Franko. Archived from the original on June 27, 2022. பார்க்கப்பட்ட நாள் March 30, 2023.
  3. 3.0 3.1 3.2 "Khokhlatkina Elena Anatolyevna". ABA Studio. Archived from the original on March 15, 2019. பார்க்கப்பட்ட நாள் March 30, 2023.
  4. Zharkykh, Larysa (March 9, 2018). "Olena Khokhlatkina: Kherson - Donetsk - Kyiv". Вгору. Archived from the original on May 16, 2022. பார்க்கப்பட்ட நாள் March 30, 2023.
  5. "Elena Khokhlatkina: "The only advantage of the war is that the people united"". Fakty. June 25, 2015. Archived from the original on July 12, 2022.
  6. Ovcharenko, Eduard (April 26, 2018). "Olena Khokhlatkina: "We create our plays with love"". Телеканал I-UA.tv. Archived from the original on March 15, 2023. பார்க்கப்பட்ட நாள் March 30, 2023.
  7. Zhdanova, Ksyusha (September 20, 2016). "Several Kherson actors already regularly star in Ukrainian TV series". Тnua. Archived from the original on March 20, 2019.
  8. Tkachenko, Oksana (January 15, 2022). ""It was very dangerous to stay." Actor Viktor Zhdanov spoke about moving from Donetsk and named the reason for separating from his wife". tnua. Archived from the original on April 4, 2023. பார்க்கப்பட்ட நாள் April 4, 2023.
  9. "Hohlatkina Olena". Ivan Franko National Academic Drama Theatre. Archived from the original on April 8, 2022. பார்க்கப்பட்ட நாள் March 31, 2023.
  10. "TINA KAROL'S SONG BECAME THE SOUNDTRACK FOR THE NEW TV SERIES "DOCTOR VIRA"". ТСН. March 13, 2020. Archived from the original on May 12, 2022. பார்க்கப்பட்ட நாள் March 31, 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒலேனா_கோக்லட்கினா&oldid=3931694" இலிருந்து மீள்விக்கப்பட்டது