ஒரும எண் முறைமை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஒரும எண் முறைமையில் எட்டானது பல்வேறு முறைகளில்

ஒரும எண் முறைமை (Unary Numeral System) என்பது ஒன்றை அடியாகக் கொண்ட எண் முறைமை ஆகும்.[1] இயற்கை எண்களைக் காட்டுவதற்குப் பயன்படுத்தக்கூடிய மிக எளிய எண் முறைமை ஒரும எண் முறைமையே ஆகும்.[2]

ஒரும எண் முறைமையில் N என்ற எண்ணைக் காட்டுவதற்கு, குறியீடொன்று N தடவைகள் எழுதப்படும்.[3] | என்ற குறியீட்டைப் பயன்படுத்தி, ஆறானது |||||| என்றவாறு காட்டப்படும்.

கணித்தல்கள்[தொகு]

ஒரும எண் முறைமையில் எண்களைக் கூட்டலும் கழித்தலும் இலகுவான செயற்பாடுகளாகும். ஒரும எண் முறைமையில் எண்களைக் கூட்டுவது, ஒன்றிணைப்பை ஒத்தது (எ-டு: ||| + ||||| = ||||||||).[4] ஆனால், ஒரும எண் முறைமையில் அமைந்துள்ள எண்களைப் பெருக்குவதும் பிரித்தலும் சிக்கல் நிறைந்த செயற்பாடுகளாகும்.

ஏனைய எண் முறைமைகளுடனான ஒப்பீடு[தொகு]

பண்டைய எண் முறைமைகளைப் போல ஒரும எண் முறைமையிலும் சுழியம் இல்லை. ஒரும எண் முறைமையில் சுழியத்தையும் இணைத்தால், அது இரும எண் முறைமை ஆகிவிடும்.

மேற்கோள்கள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஒரும_எண்_முறைமை&oldid=1369964" இருந்து மீள்விக்கப்பட்டது