ஒன்றிணைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மைக்ரோசாப்டு எக்செலில் ஒன்றிணைப்பு

கணினி நிரலாக்கத்தில் ஒன்றிணைப்பு (Concatenation) என்பது இரண்டு வரியுரு இழைகளை ஒன்றிணைத்தலைக் குறிக்கும். எடுத்துக்காட்டாக, விக்கிப் என்ற இழையும் பீடியா என்ற இழையும் ஒன்றிணைக்கப்பட்டால் விக்கிப்பீடியா என்று தோன்றும்.

குறியீடுகள்[தொகு]

செய்நிரல்களில் ஒன்றிணைப்பை மேற்கொள்வதற்கு + அல்லது & பயன்படுத்தப்படுகின்றது.[1]

+ஐப் பயன்படுத்துவதற்கு எடுத்துக்காட்டாக, "விக்கிப்பீடியா, " + "கட்டற்ற கலைக்களஞ்சியம்"; என்பதைக் கூறமுடியும். இதன் வருவிளைவாக விக்கிப்பீடியா, கட்டற்ற கலைக்களஞ்சியம் என்பது அமையும்.

&ஐப் பயன்படுத்துவதற்கு எடுத்துக்காட்டாக, மைக்ரோசாப்டு எக்செலில் = "தமிழ்"&"மொழி" என்பதைக் கூறமுடியும். இதன் வருவிளைவாகத் தமிழ்மொழி என்பது அமையும்.

மைக்ரோசாப்டு எக்செலில் CONCATENATE எனும் சார்பைப் பயன்படுத்துவதன் மூலமும் ஒன்றிணைக்க முடியும்.[2]

பயன்பாடு[தொகு]

ஒலிதம்[தொகு]

கதைக்கும் கடிகார மென்பொருட்களில் தேவையான சொற்கள் ஒவ்வொன்றும் தனித்தனியே பதிவு செய்யப்பட்டிருக்கும். அவற்றை ஒன்றிணைப்பதன் மூலம் பயனருக்குக் கருத்துப் பிழையற்ற முழுமையான வசனம் கிடைக்கும். எடுத்துக்காட்டாக,

  • நேரம்
  • ஒன்பது
  • மணி
  • இருபத்து
  • இரண்டு
  • நிமிடங்கள்

என்றவாறு அமையும்.

தொலைபேசி நிறுவனங்களில் பண மீதியைப் பயனர்களுக்குத் தெரியப்படுத்தவும் இம்முறையே பயன்படுத்தப்படுகின்றது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒன்றிணைப்பு&oldid=1368844" இருந்து மீள்விக்கப்பட்டது