ஒன்னாலி
ஒன்னாலி | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 14°15′N 75°40′E / 14.25°N 75.67°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கருநாடகம் |
மண்டலம் | அரை- மலைநாடு |
மாவட்டம் | தாவண்கரே |
ஏற்றம் | 540 m (1,770 ft) |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 15,574 |
மொழிகள் | |
• அலுவல் | கன்னடம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 577217 |
வாகனப் பதிவு | கேஏ-17 |
இணையதளம் | karnataka |
ஒன்னாலி (Honnāli) என்பது இந்திய மாநிலமான கர்நாடகாவின் தாவண்கரே மாவட்டத்தில் உள்ள ஒரு பேரூராட்சி நகரமாகும் . சிவமோகா சுமார் 40 கி.மீ தெற்கே அமைந்துள்ளதுபடும்.
இந்த நகரம் வழியாக துங்கபத்திரை ஆறு பாய்கிறது. இந்தப் பகுதி மக்களின் பிரதான தொழில் விவசாயமாகும்.
நிலவியல்
[தொகு]நகரம் 14.25 ° வடக்கிலும், 75.67 °கிழக்கிலும் அமைந்துள்ள அரை மலைநாட்டின் ஒரு பகுதியாகும்.[1] இது சராசரியாக 54 மீட்டர் உயரத்தில் (1771 அடி) உள்ளது.
புள்ளிவிவரங்கள்
[தொகு]2001 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி ,[2] ஒன்னாலியின் மக்கள் தொகை 15,574. ஆண்களில் மக்கள் தொகையில் 51%, பெண்கள் 49%. இந்நகரத்தின் சராசரி கல்வியறிவு விகிதம் 68% ஆகும், இது தேசிய சராசரியான 59.5% ஐ விட அதிகமாகும்: ஆண் கல்வியறிவு 73%, மற்றும் பெண் கல்வியறிவு 62%. இங்குள்ள மக்களில், 12% மக்கள் 6 வயதுக்குட்பட்டவர்கள்.
கோயிகள்
[தொகு]ஒன்னாலி, சிவன் கோயிலுக்கு புகழ்பெற்ற தீர்த்த இராமேசுவரன் கோயில் ஒரு சுற்றுலா இடமாகும். மேலும் சுங்கடகட்டே சிறீமஞ்சுநாத சுவாமி கோயிலும், சிறீ நரசிம்ம சுவாமி கோயிலும் இங்கிருந்து 3 கி.மீ. தொலைவில் இருக்கிறது. துங்கபத்ரா நதிக்கரையில் இருக்கும் மேலும் ஒரு கோயில் "சிறீ மாதவ ரங்கநாத சுவாமி கோயில்" ஆகும். இது கொல்லரஹள்ளி கிராமத்திற்கு அடுத்தது மற்றும் ஒன்னாலி நகரத்திலிருந்து 3 கி.மீ. தூரத்தில் இருக்கிறது. ஒவ்வொரு சனிக்கிழமையும் சிறப்பு பூஜை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Falling Rain Genomics, Inc - Honnali
- ↑ "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.