ஒட்டுபொருள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Nitrocellulose குழலில் இருந்து பிதுக்கும் ஒட்டுபொருள்

ஒட்டுபொருள் (Adhesive), பசை, பிணை, கோந்து, அல்லது பிசின்,[1] என்பது இரண்டு தனிப் பொருள்களின் ஒருபக்கம் அல்லது இருபக்கம் பூசி ஒட்டவைக்க உதவும் பொன்ம(உலோக)மற்ற பொருளாகும்.[2]

ஓட்டுபொருள்களின் பயன்பாடு தையல், எந்திரப் பூட்டல், பற்றுவைப்பு சில மேம்பாடுகளைத் தருகிறது. இதனால் வேருபட்ட பொருள்களை இணைக்க முடிகிறது. இணைப்பில் சீரான தகைவுப் பரவல் கிடைக்கிறது. எளிய முறையாக உள்ளதால் செலவும் குறைகிறது. வடிவமைத்தலில் பேரளவு நெகிழ்திறம் கிடைக்கிறது. இதன் குறைபாடுகளாக, உயர் வெப்பநிலையில்நிலைப்பு குறைதல், சிறுபரப்பால் பெரும்பொருட்களை இணைத்தலில் உள்ள நலிவான நிலை ஓர்வுக்காகப் பொருட்களைப் பிரிப்பதில் உள்ள அரிய நிலை ஆகியன் அமைகின்றன.[3]

தொடக்க கால மாந்தன் 200,000 ஆண்டுகளுக்கு முன்பே ஒட்டுபொருட்களைப் பயன்படுத்தியுள்ளான்;[4] கற்கருவிகளை மரப்பிடியுடன் இணைக்க பிர்ச்சுமரப் பட்டையில் இருந்து ஒட்டுகீலை இறக்கியுள்ளனர், நியோந்திரதால மாந்தர்கள்.[5] கிமு 2000 ஆம் ஆண்டுவாக்கிலேயே ஒட்டுப்ருள் பயன்பாட்டுக்கான இலக்கியச் சான்றுகள் கிடைக்கின்றன. கிரேக்கரும் உரோமரும் ஒட்டுபொருள் உருவாக்க பெருமுயற்சி எடுத்துள்ளனர். கிபி1500 முதல் கி1700 வரை ஐரோப்பவில் ஒட்டுபொருள் பயன்படவில்லை. பிறகு கிபி 1900 வரை ஒட்டுபொருள் பயன் கூடிவந்துல்ளது. ஒட்டுபொருள் கண்டுபிடிப்புகளும் படிப்படியா வளர்ந்துள்ளன. சென்ற நூர்றாண்டில் இருந்துதான் செயற்கை ஒட்டுப்ருளின் உருவாக்கம் வேகமாக்க வளரலானது; இப்பணியில் இன்றும் புத்தாக்கங்கள் தொடர்கின்றன.

வகைகள்[தொகு]

ஒட்டும் முறையைப் பொறுத்து ஒட்டுபொருட்கள் பிரிக்கப்படுகின்றன. இவை பிறகு வினைபுரிவன, வினை புரியாதன எனப் பிரிக்கப்படுகின்றன. ஒட்டுதல் வலிமையூஅ வேதிவினை நிகழ்தலைப் பொறுத்து இந்த வகைபாடு அமைகிறது. மாறாக, இவற்றை இயற்கையானதா செயற்கையானதா எனவும் பிரிக்கலாம். அல்லது இவற்றின் தொடக்கப் பொருள்நிலையைச் சார்ந்தும்(நீர்ம, குழைவு, பிசின் போல) பிரிக்கலாம்.[6]

வச்சிரம்[தொகு]

நீர்ம வச்சிரம்

வச்சிரம் ( Animal glue) என்பது விலங்கின் ஊன்பசைப் பொருளாகும். இது மரம், தோல், காகிதம், துணி போன்றவற்றை ஒட்டுவதற்குப் பயன்படுகிறது. விலங்குகளின் தோல், எலும்பு, இரத்தம், பால் ஆகியவற்றிலிருந்து வச்சிரம் தயாரிக்கிறார்கள். இதைத் தூய்மையற்ற ஊன்பசை எனும் புரதவகைப் பொருள் எனலாம்.

செய்யும் முறை[தொகு]

 • விலங்குகளின் தோலைத் தூய்மையாக்கிக் கொதிக்கலத்திலிட்டுக் காய்ச்சினால் நீர்ம வடிவில் வச்சிரம் கிடைக்கும்.
 • எலும்பை நீர்த்த அமிலத்திலிட்டுக் கொழுப்பு முதலியவர்றை நீக்கிப் பிறகு பலமுறை நீரிற் கழுவி அமிலத்தை நீக்க வேண்டும். இவ்வாறு தூய்மையாக்கிய எலும்பை நீரிலிட்டு நீராவியால் காய்ச்சி வடித்தால் நீர்ம வச்சிரம் கிடைக்கும்.
 • நீர்ம வச்சிரத்தை வெற்றிடத்தில் சுண்டக்காய்ச்சினால் பிசுபிசுப்புள்ளதாகிவிடும். வச்சிரத்தை வெளுக்கக் கந்தக டையாக்சைடு வளிமத்தைச் செலுத்துவர். பிறகு ஆழமற்ற தட்டுகளில் ஆறவைத்தால் கெட்டியான வச்சிரம் கிடைக்கும். கெட்டியான வச்சிரத்தை நீரில் நீண்டநேரம் ஊறவைத்துப் பிறகு சூடாக்கிப் பயன்படுத்துவார்கள். சூடான வச்சிரத்திற்கு ஒட்டுப்பண்பு அதிகம்.

வச்சிரப் பயன்கள்[தொகு]

தோல்பெட்டிகள், மரப்பொருட்கள் ஆகியவை செய்தல், புத்தகக் கட்டட வேலை, தீக்குச்சித்தொழில், நாணய நோட்டடிக்கும் தாள்செயல், மிதியடி செய்தல் போன்ற பலவகைத் தொழில்களில் வச்சிரம் பயன்படுகிறது.

செயலாக்க முறைகள்[தொகு]

பல்வேறு ஒட்டுபொருட்களுக்கு அவற்றின் ஒட்டும் தன்மையைப் பொறுத்தும் ஒட்டப்படும் பரபாளவைப் பொறுத்தும் செயலாக்க முறை வடிவமைக்கப்படுகிறது. ஒட்டுபொருள் இணைக்கும் பொருள்களில் ஒன்ரூக்கோ அல்லது இரண்டுக்குமோ பரத்திப் பூசப்படும் பொருட்கள் ஒழுங்காக வைக்கப்பட்டு இறுகவொட்டவும் இடையில் அமையும் காற்றுக்குமிழிகளை வெளியேற்றவும் நன்கு அழுத்தப்படும்.

ஒட்டுபொருட்களைப் பரத்திப் பூச, தூவிகளோ உருளிகளோ வழக்கமாகப் பயன்படுகின்றன. தெளிப்பு வீசிகளோ எறிதூவிகளோ கூட பயன்படலாம். இவை மனித ஆற்றலாலோ எந்திர விசையாலோ செயல்படுத்தப்படலாம்.

தேக்க ஆயுள்[தொகு]

சில பசைகளும் ஒட்டுபொருட்களும் வரம்புடைய தேக்க வாழ்நாளைக் கொண்டுள்ளன. தேக்க வாழ்நாள் பல்ல காரணிகளைச் சார்ந்துள்ளது. அவற்றில் முதன்மையான கரணி வெப்பநிலையாகும். இவை உயர் வெப்பநிலைகளில் தம் திறத்தை இழக்கின்றன; மேலும் கெட்டியாகி விடுகின்றன.[7] உயிரக(ஆக்சிசன்), ஆவிநீர் ஆட்பாடு தேக்க ஆயுளைக் கட்டுபடுத்துகிறது.

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. Pike, Roscoe "adhesive". Encyclopædia Britannica Online. Encyclopædia Britannica Inc.. 
 2. Kinloch, A.J. (1987). Adhesion and Adhesives : Science and Technology (Reprinted. ed.). London: Chapman and Hall. p. 1. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-412-27440-X.
 3. Kinloch 1987, ப. 2.
 4. Mazza, P; Martini, F; Sala, B; Magi, M; Colombini, M; Giachi, G; Landucci, F; Lemorini, C et al. (January 2006). "A new Palaeolithic discovery: tar-hafted stone tools in a European Mid-Pleistocene bone-bearing bed". Journal of Archaeological Science 33 (9): 1310. doi:10.1016/j.jas.2006.01.006. 
 5. Kozowyk, P. R. B.; Soressi, M.; Pomstra, D.; Langejans, G. H. J. (2017-08-31). "Experimental methods for the Palaeolithic dry distillation of birch bark: implications for the origin and development of Neandertal adhesive technology" (in En). Scientific Reports 7 (1): 8033. doi:10.1038/s41598-017-08106-7. பன்னாட்டுத் தர தொடர் எண்:2045-2322. பப்மெட்:28860591. Bibcode: 2017NatSR...7.8033K. 
 6. "MIL-HDBK-691B - Department of Defense - Military Standardization Handbook - Adhesive Bonding". Roof Online. p. 47. பார்க்கப்பட்ட நாள் 2020-05-08.
 7. Loguercio, AD; Salvalaggio, D; Piva, AE; Klein-Júnior, CA; de LR Accorinte, M; Meier, MM; Grande, RHM; Reis, A (2011-05-01). "Adhesive Temperature: Effects on Adhesive Properties and Resin-Dentin Bond Strength". Operative Dentistry 36 (3): 293–303. doi:10.2341/10-218L. பன்னாட்டுத் தர தொடர் எண்:0361-7734. பப்மெட்:21851256. https://doi.org/10.2341/10-218L. 
 • "குழந்தைகள் கலைக் களஞ்சியம்",1993, சென்னை:தமிழ் வளர்ச்சிக் கழகம்.


நூல்தொகை[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Adhesives
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒட்டுபொருள்&oldid=3740804" இலிருந்து மீள்விக்கப்பட்டது