உள்ளடக்கத்துக்குச் செல்

ஒடிசாவின் கலைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒடிசாவின் கலைகள் (Arts of Odisha) இந்திய மாநிலமான ஒடிசா ஒரு வளமான கலாச்சார மற்றும் கலை பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. கடந்த காலங்களில் பல்வேறு ஆட்சியாளர்களின் ஆட்சியின் காரணமாக, ஒடிசாவில் கலை மற்றும் கைவினைப்பொருட்கள் இன்று பாரம்பரிய கைவினைப்பொருட்கள், ஓவியம் மற்றும் செதுக்குதல், நடனம் மற்றும் இசை, ஆடைகள் போன்ற வடிவங்களில் கலை பன்முகத்தன்மையைக் கொடுக்கும் பல மாற்றங்களுக்கு உட்பட்டுள்ளன.

நடனம் மற்றும் இசை[தொகு]

நடனம்[தொகு]

கல்லில் செதுக்கிய சிற்பங்கள், கொனார்க் சூரியக் கோயில்

ஒடிசி நடனத்தைத் தவிர, ஒடிசாவில் பல நடன வடிவங்களும் நாட்டுப்புற நிகழ்ச்சிகளும் உள்ளன. இதில் பௌன்சா ராணி, சைத்தி, கோடா, சங்கு நாட்டா, சாவ், தல்காய், தண்டா நாட்டா, பாலா, தசகதியா, தனு யாத்திரை, காந்தா படுவா, குமுரா, கர்மா நாச், கதினாச்சா, கேது, கேலா கெலுனி [மேத நாச்சா, நாகா நாடனம் கேலான்சா, லாடி கேலான்சே, பைகா நிருத்யா, ஜாத்ரா, படுவா ஜாத்ரா, பொம்மலாட்டம், இராணப்பா]] மற்றும் சம்பிரதா ஆகியனவும் அடங்கும் . [1]

இசை[தொகு]

16 ஆம் நூற்றாண்டில் இசைக்கான இலக்கியம் தொகுக்கப்பட்டது. சங்கீதமவ சந்திரிகா, நாட்டிய மனோரமா, சங்கீத கலாலதா மற்றும் கீதா பிரகாசா ஆகிய நான்கு முக்கிய நூல்கள் இந்தக் காலத்தில் எழுதப்பட்டன. ஒடிசி இசை என்பது சித்ரபாதா, துருவபாதா, பாஞ்சால் மற்றும் சித்ரகலா ஆகிய நான்கு தனித்துவமான இசைகளின் கலவையாகும். இசை கலைப்படைப்பைப் பயன்படுத்தினால், அது சித்திகலா என்று அழைக்கப்படுகிறது. வார்த்தைகளை வேகமாகப் பாடும் "பாடி" என்பது ஒடியா இசையின் ஒரு தனித்துவமான அம்சம்.

ஒடிய இசை இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கும் மேலானது . மேலும் பல வகைகளைக் கொண்டுள்ளது. இவற்றில்,பழங்குடி இசை, கிராமிய இசை, இலகு இசை, இலகு-பாரம்பரிய இசை மற்றும் பாரம்பரிய இசை ஆகியவை. ஒடிசாவின் கலாச்சாரத்தைப் புரிந்து கொள்ள முயற்சிக்கும் எவரும் அதன் இசையை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். இசை அதன் பாரம்பரியத்தின் ஒரு பகுதியாகும்.

பண்டைய காலங்களில், மக்களின் மத உணர்வுகளைத் தூண்டுவதற்காகப் பாடப்பட்ட கவிதைகள் மற்றும் பாடல்களின் வரிகளை எழுதிய துறவிகள் இருந்தனர். 11 ஆம் நூற்றாண்டில்தான் ஒடிசாவின் இசை, திரீசுவரி, சதுரீசுவரி மற்றும் பஞ்சேசுவரி வடிவங்களில் மாற்றம் அடைந்து பாரம்பரிய பாணியாக மாற்றப்பட்டது.

கைவினைப்பொருட்கள்[தொகு]

ஒடிசாவின் முக்கிய கைவினைப் பொருட்களில் அப்ளிக் வேலைகள், பித்தளை மற்றும் மணி உலோகம், வெள்ளி பிலிகிரீ மற்றும் கல் செதுக்குதல் ஆகியவை அடங்கும். மற்ற வடிவங்களில் அரக்கு, பேப்பியர் மச்சே, மற்றும் பழங்குடி சீப்புகள், கைத்தறி மற்றும் மரம் மற்றும் பாரம்பரிய கல் செதுக்குதல் ஆகியவையும் அடங்கும். [1]

ஓவியம்[தொகு]

தாலா பட்டேரி

ஒடிசாவில் ஓவியத்தின் வரலாறு பண்டைய காலங்களிலிருந்தே பாறை-தங்குமிட ஓவியங்களுடன் பழமையானது. அவற்றில் சில ஆரம்பகால வரலாற்றுக் காலத்தைச் சேர்ந்தவை (கிமு 300 - கிபி 100). பாறை ஓவியத் தளங்களைத் தவிர, கஞ்சாம் மாவட்டத்திலுள்ள திகபகண்டி மற்றும் பெர்காம்பூர் மற்றும் பிற இடங்களில் பாறை மேற்பரப்பில் உருவங்களை ஒத்த பல வரைபடங்கள் மற்றும் பொறிப்புகள் உள்ளன. பல குகை ஓவியங்கள் பழங்குடியினமானவை. மேலும் பாறை தங்குமிட ஓவியம் பல நூற்றாண்டுகளாக ஒடிசா பாரம்பரியமாக தொடர்கிறது. [2] அவை பெரும்பாலும் சடங்குகளுடன் கலந்த அலங்கார இயல்புடையவை. மேலும் பல மையக்கருத்துக்களைக் கொண்டிருக்கலாம். ஒடிசாவில் உள்ள சுவரோவியங்கள் இந்தியாவில் மற்ற இடங்களைப் போலவே ஒரு பழங்கால பாரம்பரியமாக இருந்தன. மேலும் கந்தகிரி மற்றும் உதயகிரி குகைகளில் கிமு 1 ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த பேரரசர் காரவேலனின் ஆட்சி காலத்தைச் சேர்ந்த சுவரோவிய நிறமி பூச்சுகளின் சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. [2]

கேந்துசர் மாவட்டத்திலுள்ள சிதாபிஞ்சி பாறை தங்குமிட ஓவியங்களின் தொகுப்பில் உள்ள இராவணச்சாயாவின் பாறாங்கல் மீது பிற்கால குப்தர் காலத்தைச் சேர்ந்த ஒரு சுவரோவியம் உள்ளது. மேலும், அஜந்தா பாணியை ஒத்திருக்கிறது. [2] 1600 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை ஒடிசாவின் ஏராளமான வார்ப்புருக்களில் சுவரோவியங்கள் வரையப்பட்டுள்ளன. அவை இலட்சுமி கோயில், ஜகமோகனத்தில் புத்த விஜயத்தின் ஓவியம், புரியிலுள்ள புரி ஜெகன்நாதர் கோயில், பிரஞ்சிநாராயணன் கோயில், புகுடா, கஞ்சாம் மாவட்டம் போன்ற பல [2]

முத்தீசுவர் கோவிலில் சிற்றின்ப சிற்பம்

12 ஆம் நூற்றாண்டில் புரி ஜெகன்நாதர் கோயிலிலிருந்து உருவான ஒடிய ஓவியத்தின் முக்கிய வடிவமாக படா ஓவியம் கருதப்படுகிறது. இந்த பாணி கங்க மன்னர்கள் மற்றும் போய்புரிக்கு வருகை தரும் இலட்சக்கணக்கான யாத்ரீகர்களுக்கு ஜெகன்னாதரின் வழிபாட்டை பிரபலப்படுத்துவதே படா ஓவியத்தின் நோக்கமாகும். [2] இருப்பினும், படா ஓவியங்கள் பல வடிவங்களை எடுக்கலாம். முகமூடிகள் முதல் பொம்மைகள் மற்றும் மாதிரிகள் வரை இருக்கலாம்.

ஒடிசாவில், மணல் கலை என்பது புரியில் உருவாக்கப்பட்ட ஒரு தனித்துவமான கலை வடிவமாகும்

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 "Arts and crafts". Odisha Tourism. Archived from the original on July 9, 2009. பார்க்கப்பட்ட நாள் March 31, 2009.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 "Orissa Painting". Travel Mati.com. Archived from the original on 3 March 2009. பார்க்கப்பட்ட நாள் March 31, 2009.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒடிசாவின்_கலைகள்&oldid=3653373" இலிருந்து மீள்விக்கப்பட்டது