உள்ளடக்கத்துக்குச் செல்

ஒசே மார்த்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒசே மார்த்தி
பிறப்புஒசே யூலியன் மார்த்தி பெராசு
சனவரி 28, 1853
 கியூபா
இறப்புமே 19, 1895(1895-05-19) (அகவை 42)
 கியூபா தசு ரியோசு, கியூபா
தொழில்கவிஞர், எழுத்தாளர், தேசிய தலைவர்
தேசியம் கியூபா கியூபன்
இலக்கிய இயக்கம்நவீனத்துவம்
துணைவர்கார்மன் சயாசு பசானை
பிள்ளைகள்ஒசே பிரான்சிசுகோ "பெபிடோ" மார்த்தி
குடும்பத்தினர்மரியானோ மார்த்தி நவரோ (தந்தை) லியோனோர் பெரேசு கபரேரா (தாய்), 7 சகோதரிகள் (லெனோர், மரியானா, மரியா டி கார்மென், மரியா டி பெலெர், ரிதா அமீலியா, அந்தோனியா மற்றும் டொலாரெசு)

ஒசே யூலியன் மார்த்தி பெராசு (ஹோசே ஜூலியன் மார்த்தி பெராஸ், எசுப்பானியம்: José Julián Martí Pérez, சனவரி 28, 1853 – மே 19, 1895) கியூபாவின் தேசிய நாயகன் மற்றும் நன்கறியப்பட்ட இலத்தின் அமெரிக்க இலக்கியவாதி ஆவார். கவி, கட்டுரையாளர், ஊடகவியளாலர், புரட்சிகர சிந்தனையாளர், மொழிபெயர்ப்பாளர், பேராசிரியர், பதிப்பாளர், அரசியல் தத்துவங்கள் உருவாக்குனர் போன்ற பன்முக தன்மைகளையும் கொண்டவர். 19ம் நூற்றாண்டில் கியூபாவில் ஏற்பட்ட எசுப்பானியத்திற்கு எதிரான விடுதலைப் போரில் முக்கிய இடத்தை வகித்தார். தனது எழுத்துக்கள் மற்றும் அரசியல் நடவடிக்கைகளின் மூலம் கியூப விடுதலை மட்டுமின்றி ஒட்டு மொத்த இலத்தின் அமெரிக்கர்களின் அறிவுசார் தேடலுக்கான விழிப்புணர்ச்சியையும் மேம்படுத்த முயன்றார்.

வாழ்க்கை வரலாறு

[தொகு]

பிறப்பு

[தொகு]

ஒசே மார்த்தி 1853ம் ஆண்டு சனவரி 28ம் நாள் கியூபாவில் உள்ள அவானாவில் பிறந்தார். இவரது தந்தை மரியானோ மார்த்தி நவரோ. தாய் லியோனோர் பெரேசு கபரேரா. ஏழு தமைக்கைகளுக்கு பிறகு எட்டவதாக பிறந்தவர். இவருக்கு நான்கு வயதாக இருக்கும் பொழுது, இவரது குடும்பம் எசுப்பானியத்திற்கு குடிபெயந்தது. இருப்பினும் இரண்டே வருடங்களில் மீண்டும் அவானாவுக்கே திரும்பியது.

இளமை

[தொகு]

1856ல் அவானவில் இருந்த ஒரு தொடக்கப் பள்ளியில் மார்த்தி சேர்க்கப்பட்டர். இளவயதில் இவருக்கு ஓவியங்களின் மீது இருந்த ஆர்வத்தின் காரனமாக, ஒரு ஓவியப் பள்ளியில் சேர்ந்து ஓவியம் மற்றும் சிற்பக்கலையையும் பயிற்றுவிக்கப் பட்டார்[1]. இருப்பினும் ஓவியத்தை விட கவிதை மற்றும் கட்டுரையாக்கமே இவருக்கு கைவரப்பட்டது. இந்த காலகட்டத்தில் இவரின் படைப்புகளில் சில எல் ஆல்பம் என்ற நாளிதழில் வெளிவந்தன.

1869ம் ஆண்டு கியூபாவில் பத்தாண்டுப் போர் என அழைக்கப்படும், எசுப்பானிய மேலாதிக்கத்துக்கு எதிரான கிழர்ச்சி ஆரம்பமானது. இளமை முதலே எசுப்பானியத்தின் ஆதிக்கத்துக்கும், அது ஆதரித்த அடிமை முறைக்கும்[2] எதிரான மனப்போக்கு கொண்ட மார்த்தி, இந்த கிழர்ச்சியில் தன்னையும் ஈடுபடுத்திக் கொண்டார். 16 வயதே ஆன மார்த்தின் கவிதைகளும், புரட்சிக் கட்டுரைகளும் கிழர்ச்சியாளர்களின் மத்தியில் மிகுந்த அபிமானத்தைப் பெற்றன. இவர் தனது நண்பர் பெர்மென் என்பவருடன் இனைந்து எசுப்பானிய இரானுவத்தில் சேர்ந்த மற்றொரு நண்பனுக்கு எழுதிய கடிதம் அரசாங்கத்தின் கைகளில் கிடைத்தது. இதைத் தொடர்ந்து தேசத்துரோக குற்றம் சாட்டப்பட்ட மார்த்திக்கு, ஆறு வருடங்கள் சிறைதண்டனை விதிக்கப்படது[3]. மார்த்தின் வயது மற்றும் அவரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு வழங்கப்பட்ட தண்டனையை குறைக்க வேண்டும் என அவரின் பெற்றோர்கள் போராடியதை தொடர்ந்து, சிறைதண்டனை விலக்கிக் கொள்ளப்பட்டு எசுப்பானியத்துக்கு நாடு கடத்தப்பட்டார்[4]. மேழும் அங்கேயே தன் கல்வியை தொடரவும் அனுமதிக்கப் பட்டார்[4].

ஏசுப்பானிய வாழ்க்கை

[தொகு]
மார்த்தியின் நினைவுச்சின்னம், எசுப்பானியம்

நாடு கடத்தைப் பட்ட மார்த்தி, எசுப்பானிய தலைநகரமான மாட்ரிட் மற்றும் சார்கோசா நகரங்களில் உள்ள அரசுப் பல்கலைக்கழகங்களில் சட்டம் மற்றும் கலை பயின்றார். அங்கும் தந்து எழுத்துப் பனியை தொடர்ந்தவர், கியூபாவில் நடந்து வரும் அரச பயங்கரவாதத்தை பற்றி எசுப்பானிய மக்களுக்கும் மாணவர்களுக்கும் எடுத்துரைத்தார். இவர் அங்கிருந்தபடியே எழுதிய பல கட்டுரைகள், மாட்ரிட், நியூ யோர்க் மற்றும் கியூபாவில் இருந்து வெளிவரும் சில நாளிதல்கழில் தொடர்ந்து அச்சேரின. 1874ல் தனது படிப்பை முடித்த மார்த்தி, அதே ஆண்டு தனது நன்பர் பெர்மனுடன் பாரிசுக்கு பயனமானார். இறுதியில் 1875ல் அப்போது மெக்சிகோவில் தங்கி இருந்த தனது குடும்பத்துடன் இனைந்தார்.

மெக்சிகோ மற்றும் குவாத்தமாலா

[தொகு]

மெக்சிகோவிற்கு வந்த மார்த்தி கியூப விடுதலையை மட்டும் அன்றி அந்நாட்டின் குடிமக்களுக்கு இருந்த உள்ளூர் பிரட்சனைகளை பற்றியும் எழுத ஆரம்பித்தார். கூடவே தனது கவிதை, மொழிபெயர்ப்பு ஆகியவற்றோடு நாடகங்களையும் எழுத ஆரம்பித்தார். amor con amor se paga (காதலோடு காதலைத் திருப்பிக் கொடு) எண்ற இவரது நாடகம் மெக்சிகோவின் முன்னனி நாடகக் குழுவால் தயாரிக்கப்பட்டு புகழ் பெற்றது[5]. மெக்சிகோ வந்த ஒரே வருடத்திலேயே, மார்த்தி "கொரிசித்தா” எனப்படும் மெக்சிகோ எழுத்தாளர்கள் மற்றும் கலைகர்களுக்கான சங்கத்தில் உறுப்பினராக சேர்த்துக் கொள்ளப்பட்டார். இந்த சங்கத்திலேயே இவர் தனது எதிர்கால மனைவியான சயாசு பசானை சந்தித்தார்[6].

1877ல் தனது அடையாளத்தை மறைத்துக் கொண்டு, வேறு பெயரில் கியூபா சென்ற மார்த்தி, ஒரு மாதத்திற்கும் குறைவான நாட்களே அங்கு தங்கினார். பிறகு மெக்சிகோ வழியாக குவாத்தமாலா சென்ற மார்த்திக்கு அங்கு பேராசிரியர் பணி கிடைத்தது[5]. சான் கார்லசு பல்கலைக்கழகத்தின் பிரென்ச்சு, ஆங்கிலம், இடாய்ச்சு மற்றும் இத்தாலிய இலக்கியம், வரலாறு, மற்றும் தத்துவம் ஆகிய துறைகளின் தலைவராக நியமிக்கப்பட்டார். இடையில் ஒரு முறை மெக்சிகோ சென்று திரும்பிய மார்த்தி, 1878ல் தனது தாயகமான கியூபாவிரற்கு வந்து சேர்ந்தார். தொடர்ந்து தனது காதலியான சயாசு பாசனை மணந்தார். அதே ஆண்டு அக்டோபர் மாதத்தில் மார்த்தி வின்னப்பித்த வழக்கறிங்கறாக பயிர்ச்சி பெறுவதர்க்கான வின்னப்பத்தை எசுப்பானிய அரசு நிராகரித்தது. எனவே பேராசிரியராக தனது வாழ்க்கயை தொடர்ந்தார்.

நியூ யோர்க்

[தொகு]
தொழிலாளர்களுடன் மார்த்தி (நடுவில் நிற்பவர்). புளோரிடா மாகாணம்.

இதன் பிறகு நியூ யோர்க் நகருக்கு சென்ற மார்த்தி, அங்கு கலிசாட்டோ கார்சியா எனப்படும் கியூப புரட்சியாளரின், புரட்சிக் குழுவில் இனைந்தார். எசுப்பானிய அரசினால் நாடு கடத்தப் பட்ட கியூபர்களால் நடத்தப்பட்ட இந்த குழு, நியூ யோர்க் நகரத்தை அடிப்படையாக கொண்டு கியூப விடுதலை போரை முன்னெடுத்தது. அடிப்படையில் இந்த குழுவில் இருந்த புரட்சியாளர்களுக்கும், மார்த்திக்கும் இடையே சில கருத்து வேறுபாடுகள் இருந்தன. குறிப்பாக பத்தாண்டு போரில் ஈடுபட்ட கியூப விடுதலைக் குழுவின் தளபதிகளான மேக்சிமோ கோமாசு மற்றும் அன்டோனியோ மாக்கோ கிராசல்சு ஆகியோர் 1884ல் முன்னெடுத்த படையெடுப்புக்கு மார்த்தி தனது கடுமையான கண்டனங்களை தெரிவித்தார்[7]. பொறுமையும் திட்டமிடலும், கியூப விடுதலைக்கு மிக முக்கிய தேவைகள் என வாதிட்ட அவர், இந்த படையெடுப்பு அவசரகதியில் திட்டமிடப்பட்டது என கருத்து தெரிவித்தார்.

தொடர்ந்து அமெரிக்காவின் பல பகுதிகளுக்கும் சென்ற மார்த்தி, அங்கிருந்த கியூப குடிகளிடம், தமது நாட்டின் விடுதலையின் தேவையைப் பற்றி உரையாற்றினார். மத்திய அமெரிக்கா, மேற்கு இந்தியத் தீவுகள் என பல இடங்களுக்கும் நீண்ட இந்த பயணத்தில் திரட்டப் பட்ட நிதி, கியூப புரட்சிக் குழுவின் தேவைகளுக்கு பெரிதும் பயன்பட்டது. அதே நேரத்தில் 1894ல் இவர் பாட்ரியா நாளிதழில் எழுதிய எ கியூபா என்ற கட்டுரை அமெரிக்க மற்றும் எசுப்பானிய அரசுகளுக்கு இடையே இருந்த ரகசிய உறவை அம்பலப்படுத்தியது. அதே ஆண்டு ஆகத்து மாதம் எசுப்பானிய அரசுக்கு எதிரான ஆயுதம் தாங்கிய குழு ஒன்றை தயார் செய்யும் வேலைகளை மார்த்தி தொடங்கினார்[8].

கியூப புரட்சி

[தொகு]

1895ல் சனவரியில் மார்த்தியால் முன்னெடுக்கப்பட்ட கியூப ஊடுறுவளில் சிறிது தடை ஏற்பட்டது. புரட்சிப் படைக்கு தேவையான ஆயுதங்களை கொண்டு சென்ற மூன்று நீராவிக் கப்பல்கள், வட அமெரிக்க அதிகாரிகளால் பரிமுதல் செய்யப்பட்டதை அடுத்து, மார்த்தி தனது படையெடுப்பை கைவிட நேர்ந்தது[9]. இதைத் தொடர்ந்து, அப்போது டொமினிகன் குடியரசில் தங்கி இருந்த முன்னாள் கியூப புரட்சிப் படையின் தளபதியான மேக்சிமோ கோமாசை சந்தித்த மார்த்தி, தனது படையெடுப்பை பற்றி விழக்கியதோடு, அதில் கலந்து கொள்ளவும் அழைப்பு விடுத்தார்[10].

மார்த்தியின் அழைப்பை ஏற்ற கோமாசோடு அவரின் படையனி, 1895ம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதியில் மவுன்டே கிரிசுடி நரில் இருந்து புறப்பட்டது. அதே மாதம் பதினொன்றாம் திகதி கியூபாவின் மைசி கபேயை அடைந்த படை, அங்கிருந்த உள்ளூர் புரட்சிப் படையுன் கூட்டு சேர்ந்து கொண்டது.

மரணம்

[தொகு]

மார்த்தின் கூட்டுப் படை எசுப்பானிய படையுடன் ஒப்பிடும் போது மிகவும் சிறியதாக இருந்தது. மேலும் தாக்குதல்களை திட்டமிடுவதிலும், அதை செயல்படுத்துவதிலும் இந்த படையனி சில நடைமுறை சிக்கல்களை சந்தித்தது. இறுதியில் மே 19, தசு ரியோசு நகரத்தில் நடந்த தாக்குதல்களில் எசுப்பானிய படைகளால் மார்த்தி கொல்லப்பட்டார். முன்னதாக எசுப்பானிய படைகளுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்த தளபதி கோமாசு, மார்த்தியின் படைகளை தன்னுடைய படைக்கு பின்புறக் காவலனியாக செயல்படுமாரு கேட்டுக்கொண்டார். ஆனால் பெரும் எண்ணிக்கையிலான எசுப்பானிய படைகளினால் திசை மாறிய மார்த்தி, எதிரிகளின் எல்கைக்குள் சென்றதே அவரின் மரணத்திற்குக் காரணமானது[10].

படைப்புகள்

[தொகு]
ஆண்டு மாதம் படைப்பு தமிழாக்கம்
1869 சனவரி Abdala அப்தலா
1869 சனவரி 10 de octubre அக்டோபர் 10
1871 - El presidio político en Cuba கூபாவின் அரசியல் சிறை
1873 - La República Española ante la revolución cubana எசுப்பானிய குடியரசும் கூப புரட்சியும்
1875 - Amor con amor se paga காதலோடு காதலைத் திருப்பிக்கொடு
1882 - Ismaelillo இசுமயிலிலோ
1882 பெப்ரவரி Ryan vs. Sullivan ரையானும் சல்லிவனும்
1882 பெப்ரவரி Un incendio நெருப்பு
1882 யூலை El ajusticiamiento de Guiteau குயீடுவின் மரனதண்டனை
1883 சனவரி Batallas de la Paz அமைதி போராட்டம்
1883 மார்ச் Que son graneros humanos -
1883 மார்ச் Karl Marx ha muerto கார்ல் மார்க்சு இறந்துவிட்டார்
1883 மார்ச் El Puente de Brooklyn புரூக்ளின் நகரத்து பாலம்
1883 செப்டம்பர் En Coney Island se vacía Nueva York நியூ யோர்க்கின் கொனேத் தீவு காலியாக இருந்தது
1883 திசம்பர் Los políticos de oficio தொழில்முறை அரசியல்வாதிகள்
1883 திசம்பர் Bufalo Bil -
1884 ஏப்ரல் Los caminadores நடந்து செல்பவர்கள்
1884 நவம்பர் Norteamericanos வட அமெரிக்கர்கள்
1884 நவம்பர் El juego de pelota de pies கால் பந்தாட்டம்
1885 - Amistad funesta நட்பின் சேதம்
1885 சனவரி Teatro en Nueva York நியூ யோர்க்கின் திரைஅரங்கம்
1885 மார்ச் Una gran rosa de bronce encendida -
1885 மார்ச் Los fundadores de la constitución அரசியலமைப்பின் தந்தை
1885 யூன் Somos pueblo original நாங்களே உன்மையான குடிகள்
1885 ஆகத்து Los políticos tiene sus púgiles -
1886 மே Las revueltas anarquistas de Chicago -
1886 செப்டம்பர் La ensenanza கற்பித்தல்
1886 ஒக்டோபர் La Estatua de la Libertad சுதந்திர தேவி சிலை
1887 ஏப்ரல் El poeta Walt Whitman கவிஞர் வால்ட் வைட்மென்
1887 ஏப்ரல் El Madison Square மாடிசன் சதுக்கம்
1887 நவம்பர் Ejecución de los dirigentes anarquistas de Chicago சிகாகோ அரசின்மைவாதிகளின் மரனதண்டனை
1887 நவம்பர் La gran nevada பெரிய வெண்பனி
1888 மே El ferrocarril elevado உயர்மட்டதொடர்வண்டிப் பாதை
1888 ஆகத்து Verano en Nueva York நியூ யோர்க்கின் கோடைகாலம்
1888 நவம்பர் Ojos abiertos, y gargantas secas திறந்த கண்களும், வறண்ட தொண்டையும்
1888 நவம்பர் Amanece y ya es fragor விடியலும் அதன் முழக்கமும்
1889 - La edad de oro பொற்காலம்
1889 மே El centenario de George Washington சியார்ச் வாசிங்டனின் நூற்றாண்டு நினைவு
1889 யூலை Bañistas -
1889 ஆகத்து Nube Roja சிகப்பு மேகம்
1889 செப்டெம்பர் La caza de negros கருப்பர்களின் வேட்டை
1890 நவம்பர் El jardín de las orquídeas மந்தாரைத் தோட்டம்
1891 ஒக்டோபர் Versos Sencillos எளிய பாடல்
1891 சனவரி Nuestra América நமது அமெரிக்கா
1894 சனவரி A Cuba கூபா
1895 - Manifiesto de Montecristi மவுன்டே கிரிசுடி கொள்கை பிரகடனம்

(தளபதி கோமாசோடு இனைந்து தயாரித்தது)

அங்கீகாரம்

[தொகு]
மார்த்தியின் நிணைவிடம். அவானா, கியூபா.

மார்த்தி, தனது கியூப விடுதலைக்கான முயற்சிகளுக்காக இன்றளவும் ஒரு தேசிய நாயகனாக கியூபாவில் கொண்டாடப் படுகின்றார். மேலும் இலத்தீன் அமெரிக்க நாடுகள் அனைத்தின் விடுதலைப் போரிலும் அவரின் பங்கு இருந்தது[11]. கியூபாவின் முன்னாள் அதிபரான பிடல் காசுட்ரோ மார்த்தியை தனது அரசியல் தந்தை என குறிப்பிடுகிறார். மார்த்தியின் காலம் தொட்டு கியூபாவில் நடந்து வந்த அனனைத்து புரட்சி மட்டும் போராட்டங்களில் இவரது கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.

ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம், ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மார்த்தியின் பெயரால் விருதுகளை வழங்குகின்றது[12].

மேற்கோள்கள்

[தொகு]
 1. "latinamericanhistory.about.com". Archived from the original on 2013-03-28. பார்க்கப்பட்ட நாள் 2013-03-21.
 2. historyofcuba.com
 3. Alborch Bataller, Carmen, ed. (1995), José Martí: obra y vida, Madrid: Ministerio de Cultura, Ediciones Siruela, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-84-7844-300-0 பக்-398]
 4. 4.0 4.1 Alborch Bataller, Carmen, ed. (1995), José Martí: obra y vida, Madrid: Ministerio de Cultura, Ediciones Siruela, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-84-7844-300-0
 5. 5.0 5.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-03-28. பார்க்கப்பட்ட நாள் 2013-03-21.
 6. Alborch Bataller, Carmen, ed. (1995), José Martí: obra y vida, Madrid: Ministerio de Cultura, Ediciones Siruela, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-84-7844-300-0 - பக் 52
 7. García Cisneros, Florencio (1986), Máximo Gómez: caudillo o dictador?, Miami, FL: Librería & Distribuidora Universal, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-9617456-0-8 - பக் 56
 8. Alborch Bataller 1995 - பக் 184
 9. library of congress
 10. 10.0 10.1 Alberch Bataller 1995 - பக் 191
 11. Library of Congress
 12. unesco.org

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒசே_மார்த்தி&oldid=3731124" இலிருந்து மீள்விக்கப்பட்டது