ஒக்சிடென்டல் மின்டோரோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஒக்சிடென்டல் மின்டோரோ
மாகாணம்
மாகாணச் சின்னம்
மாகாணச் சின்னம்
நாடு பிலிப்பீன்சு
பிராந்தியம் மிமரோபா
நேர வலயம் பிசீநே (ஒசநே+8)
அதிகாரப்பூர்வ இணையதளம்

ஒக்சிடென்டல் மின்டோரோ (Occidental_Mindoro) என்பது பிலிப்பீன்சின் லூசோனின், மிமரோபா பிராந்தியத்தில் அமைந்துள்ள ஐந்து மாகாணங்களில் ஒன்றாகும்.[1] இதன் தலைநகரம் மம்புராவோ ஆகும். இது 1950 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்டது.[2] இம்மாகாணத்தில் 162 கிராமங்களும், 12 மாநகராட்சிகளும் உள்ளன. இதன் தற்போதைய மாகாண சபை ஆளுநர் மரியோ கெனெ மென்டொயோலா (Mario Gene Mendiola) ஆவார். இதன் மொத்த நிலப்பரப்பளவு 5,865.71 சதுர கிலோமீற்றர்கள் ஆகும். 2015 ஆம் ஆண்டின் சனத்தொகைக் கணக்கெடுப்புக்கு அமைவாக ஒக்சிடென்டல் மின்டோரோ மாகாணத்தின் சனத்தொகை 487,414 ஆகும்.[3] மேலும் பிலிப்பீன்சில் காணப்படும் 81 மாகாணங்களில், மொத்த நிலப்பரப்பளவின் அடிப்படையில் இம்மாகாணம் 11ஆம் மாகாணமாகவும் சனத்தொகையின் அடிப்படையில் 56ஆம் மாகாணமாகவும் காணப்படுகின்றது. அத்துடன் இம்மாகாணத்தில் தகலாகு ஆங்கிலம் ஆகிய இரு பிரதான மொழிகள் பேசப்படுகின்றன. இம்மாகாணத்தின் சனத்தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீற்றருக்கு 83 மக்கள் என்பதாகும். மேலும் சனத்தொகை அடர்த்தியின் அடிப்படையில் இது 81 பிலிப்பீனிய மாகாணங்களில் 71ஆம் மாகாணம் ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "List of Provinces". PSGC Interactive. Makati City, Philippines: National Statistical Coordination Board. பார்த்த நாள் 30 December 2013.
  2. PromdiNEWS: Bulacan celebrates 435th founding year
  3. "Population of the provine".