உள்ளடக்கத்துக்குச் செல்

ஒக்சானா மதராஷ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒக்சானா மதராஷ்
பிறப்புசெப்டம்பர் 12, 1969 (1969-09-12) (அகவை 54)
புச்சாச், உக்ரைன்
படித்த கல்வி நிறுவனங்கள்உக்ரைனின் சாய்கோவ்ஸ்கி தேசிய இசை அகாதமி
பணிஇசை நடத்துநர்
வலைத்தளம்
oksanamadarash.com

மதராஷ் ஒக்ஸானா ஸ்டெபனிவ்னா (Madarash Oksana Stepanivna, உக்ரைனியன்: Мадараш Оксана Степанівна; பிறப்பு செப்டம்பர் 12, 1969) என்பவர் உக்ரைனைச் சேர்ந்த இசை நடத்துநர், கலை இயக்குநர், ஆசிரியர் ஆவார். இவர் உக்ரைனின் மரியாதைக்குரிய கலைஞர் (2008) என்ற விருதைப் பெற்றவர்.

கல்வி[தொகு]

இவர் உக்ரைனின் சாய்கோவ்ஸ்கி தேசிய இசை அகாதமியில் உயர் இசைக் கல்வியைப் பெற்றார்:

 • 2002-2005-ஓபரா மற்றும் சிம்பொனி நடத்துதலில் முதுகலை பட்டம், ஓபரா மற்றும் சிம்பொனி நடத்தும் துறையில் உதவி- உள்ளகப்பயிற்சி, உக்ரைன் மக்கள் கலைஞரின் வகுப்பு, பேராசிரியர் ஈ. துஷென்கோ.
 • 1999-ஓபரா மற்றும் சிம்பொனி நடத்துதல், உக்ரைனின் மக்கள் கலைஞரின் வகுப்பு, பேராசிரியர் ஈ. துஷென்கோ,
 • 1994-கோரல் நடத்துதல், உக்ரைனின் மக்கள் கலைஞரின் வகுப்பு, பேராசிரியர் வி பெட்ரிச்சென்கோ மற்றும் ஓபரா மற்றும் சிம்பொனி நடத்தும் துறையில் விருப்ப வகுப்புகள், உக்ரைன் மற்றும் உருசிய கூட்டமைப்பின் மக்கள் கலைஞரின் வகுப்பு, பேராசிரியர் வி. கொசுஹார்.

மைகோலயிவ் நகர அரசு உயர் இசைக் கல்லூரியின் இசை நடத்துநர் மற்றும் பாடகர் பிரிவில் பட்டம் பெற்றார், (1989, ஆசிரியர் எல். லக்கிசா).

இசை நடத்துநர் தொழில்[தொகு]

2002 முதல்-கீவ் நேசனல் அகாடமிக் தியேட்டர் ஆஃப் ஓபரெட்டாவின் நடத்துநர்-இயக்குநராகவும்,[1] கீவ் சில்ட்ரன்ஸ் அகாதமி ஆஃப் ஆர்ட்சின் இசைக் கலை பீடத்தின் இளம் மாணவர்களின் சேம்பர் ஆர்கெஸ்ட்ராவின் கலை இயக்குநர் மற்றும் நடத்துநராகவும் இருந்தார்.[2] மேலும் ஸ்டான்கோவிச்சின் பெயரிலான முதலாவது சர்வதேச போட்டியின் வெற்றியாளராக ஆனார்.

ஜி. பிசெட்டின் "கார்மென்", ஜே. ஸ்ட்ராஸ் "டை ஃப்ளெடர்மாஸ்", ஜி. டோனிசெட்டி "தி பெல்", எஃப். லோவ், மை ஃபேர் லேடி", ஜே. எஸ். காப். "காபி கான்டாட்டா", இ. கல்மான் "தி வயலட் ஆஃப் மோன்ட்மார்ட்ரே",[3] எம். அர்காஸ் "கட்ரேயனா" மற்றும் பல புதிய இசை நிகழ்ச்சிகளை ஒக்சானா இயக்கி நடத்தியுள்ளார்.

கீவ் நேசனல் அகாதாமிக் தியேட்டர் ஆஃப் ஓபரெட்டாவில் பின்வரும் படைப்புகளுக்கு இசை இயக்குநராகவும் நடத்துனராகவும் இவர் உதவினார். அவை வருடாந்திர சிம்போனிக் கச்சேரி "ஸ்ட்ராஸ் இன் தி ஓபரெட்டா",[4][5] கலை மாலை "பெரன்க் லெகர்",[6] அங்கேரிய இசையின் மாலை "தி பேர்ல் ஆஃப் தி டானூப்","சிம்பொனி ப்ளூஸ் காக்டெய்ல்",[7] "விவாட், ஆஃபன்பாக்!",[8][9] "விவாட், எல்'ஓபரெட்", "தி பெஸ்ட் ஆஃப் தி டானூப்" மற்றும் பல.

கௌரவங்களும் விருதுகளும்[தொகு]

 • 1998-சிம்பொனி நடத்துநர்களின் 2 வது எஸ். துர்ச்சக் தேசிய போட்டியில் சிறப்பு பரிசு "ரோஸ் ஆஃப் ஹோப்"
 • 2003-டிப்ளோமா, எம். ஆர்காஸ் தியேட்டர் விருதின் பரிசு பெற்றார் ("கேடரினா", ஓபரா)
 • 2005-கௌரவ சான்றிதழ் உக்ரைன் அமைச்சரவை,
 • 2008-கௌரவப் பட்டம் "உக்ரைனின் மரியாதைக்குரிய கலைஞர்[10]",
 • 2019-கௌரவப் பட்டம் "உக்ரைன் மக்கள் கலைஞர்"

மேற்கோள்கள்[தொகு]

 1. "МАДАРАШ Оксана Степановна - Киевские театры - Театр оперетты в Киеве, Киевский национальный академический театр оперетты". 24 March 2016.
 2. "The Kyiv Children's Academy of Arts (KCAA)". www.kdam.kiev.ua.
 3. "Kyiv Operetta Theater stages new version of Emmerich Kalman's "The Violet of Montmartre" (2008)". day.kyiv.ua.
 4. "Strauss in the operetta". Strauss in the operetta (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-07-10.
 5. KievOperetta (31 December 2012). "В опереті відбувся "Новорічний Штраус-концерт"" – via YouTube.
 6. "Знайомтесь: Ференц Легар! Мистецький вечір до 145-річчя угорського композитора в Київській опереті | Спільнобачення". spilnotv.com (in உக்ரைனியன்). பார்க்கப்பட்ட நாள் 2017-07-10.
 7. "Österreichisches Kulturforum Kiew". www.facebook.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-07-10.
 8. "Киевский театр оперетты сыграл "по-французски"". www.facenews.ua. பார்க்கப்பட்ட நாள் 2017-07-10.
 9. "Филипп Уи. Браво, Маэстро! Виват Оффенбах! — chercherlafemme.ua". www.chercherlafemme.ua (in ரஷியன்). பார்க்கப்பட்ட நாள் 2017-07-10.
 10. "Про нагородження діячів театрального мистецтва - від 19.12.2008 № 1185/2008". zakon3.rada.gov.ua.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒக்சானா_மதராஷ்&oldid=3918254" இலிருந்து மீள்விக்கப்பட்டது