ஐயவுணர்வு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சந்தேகம் (Suspicion ) என்பது அவநம்பிக்கையின் அறிதிறன் ஆகும், இதில் ஒருவர் மற்றொரு நபரின் நேர்மையை சந்தேகிக்கிறார் அல்லது மற்றொரு நபரை உறுதியான ஆதாரம் இல்லாமல் சில வகையான தவறு அல்லது குற்றச் செயல் புரிந்த குற்றவாளி என்று நம்புகிறார். அமெரிக்காவில், நீதிமன்றங்கள் " நியாயமான சந்தேகம் " என்ற வார்த்தையைப் பயன்படுத்துகின்றன, இது மக்களை தெருவில் சோதனை செய்ய காவல்துறைக்கு அனுமதி அளிக்கிறது. இந்த வார்த்தை பழைய பிரெஞ்சு வார்த்தையான "suspicion" எனபதிலிருந்து வந்தது, இது இத்தாலிய வார்த்தையான "sospetto" என்பதன் மாறுபாடு ஆகும் (லத்தீன் வார்த்தையான "suspectio" என்பதற்கு,"பார்க்க" என்பது பொருளாகும்).

வரலாறு[தொகு]

ஆங்கிலேய தத்துவஞானி, அரசியல்வாதி மற்றும் எழுத்தாளர் பிரான்சிசு பேக்கன் (1561-1626) சந்தேகம் என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதினார், அதில் சந்தேகங்கள் அடக்கப்பட்டு நன்கு பாதுகாக்கப்பட வேண்டும், இல்லையெனில் அவை தனது குடிமக்கள் தனக்கு எதிராக சதி செய்கிறார்கள் என்ற பயம் காரணமாக ஆட்சியாளார்களை கொடுங்கோன்மையை நோக்கி நகர்த்தச் செய்யும், ஒரு கணவன் மற்ற ஆண்களுடன் தனது மனைவி பேசுவதைக் கண்டு பொறாமை மற்றும் பயம் அடைவான் என்று கூறினார். பேகன் சந்தேகத்தின் அடிப்படை அறிவின்மை என்று வாதிட்டார்; எனவே, சந்தேகத்திற்கு தீர்வு, உங்களை தொந்தரவு செய்யும் சிக்கலைப் பற்றி மேலும் அறிந்து கொள்வதாகும். ஒரு கணவன் தன் மனைவியின் ஆண் நண்பர்களைப் பற்றிக் கவலைப்படுகிறான் என்றால், அவனுடைய சந்தேகத்தை வளர்த்துக் கொள்ளாமல், இந்த நட்பின் தன்மையைப் பற்றி அவரிடம் கேட்டு, அவனுடைய கவலைகளைச் சொல்ல வேண்டும். பேகன் ,சந்தேகம் இருக்கும் நபர்களிடம் வெளிப்படையாக இருக்கவும், விடயத்தை தெளிவுபடுத்தவும் வலியுறுத்தினார். [1]

ஆங்கில நாடக ஆசிரியர் வில்லியம் சேக்சுபியர், "குற்றமுள்ள மனதை சந்தேகம் எப்போதும் வேட்டையாடும்" என்று குறிப்பிட்டார். ஆங்கில மறுமலர்ச்சி நாடக ஆசிரியர், கவிஞர் மற்றும் நடிகர் பென் ஜான்சன் (1572-1637), சேக்சுபியரின் சமகாலத்தவர், சந்தேகத்தை "கருப்பு விஷம்" என்று விவரித்தார், இது "பிளேக் போல மனித மனதை பாதிக்கிறது" என்றார். சாமுவேல் ஜான்சன் (1709-1784), ஒரு ஆங்கில எழுத்தாளர் மற்றும் கட்டுரையாளர், சந்தேகத்தை "பயனற்ற வலி" என்று அழைத்தார், இதில் ஒரு நபர் தனது சக மனிதர்கள் அனைவருக்கும் தவறான எண்ணம் கொண்டுள்ளார்கள் என்று நம்புகிறார். இசுக்காட்டிய கவிஞரும் பாடலாசிரியருமான இராபர்ட் பர்னசு (1759-1796) சந்தேகத்தை "கனமான கவசம்" என்று அழைத்தார், அது மனிதர்களைப் பாதுகாப்பதை விட அதிகமாக மக்களிடம் பழகுவதைத் தடுக்கிறது. அகிம்சை, இந்திய சுதந்திர இயக்கத்தின் அரசியல் மற்றும் ஆன்மீகத் தலைவரான மகாத்மா காந்தி, ஒரு நபரின் எந்த நோக்கத்திலும் சந்தேகம் எழுந்தால், அவர்களின் செயல்கள் அனைத்தும் அவநம்பிக்கை மற்றும் நிச்சயமற்ற தன்மையால் கறைபடும் என்று எச்சரித்தார்.

சான்றுகள்[தொகு]

  1. "Archived copy". Archived from the original on 2008-12-17. பார்க்கப்பட்ட நாள் 2008-10-23.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐயவுணர்வு&oldid=3827678" இலிருந்து மீள்விக்கப்பட்டது