ஐபாட் 4

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஐபாட் 4 (iPad 4) என்பது ஆப்பிள் இன்க் நிறுவனத்தினால் தயாரித்து விற்பனை செய்யப்படும் நான்காம் தலைமுறை கைக் கணினி ஆகும். ஐபாட் மூன்றாம் தலைமுறையை போன்றே ரெடினா திரையை கொண்டுள்ளது. ஆனால் இது ஆப்பிள் ஏ 6 எக்ஸ் சில்லு மற்றும் லைட்னிங் இணைப்பு போன்ற புதிய மேம்படுத்தப்பட்ட கூறுகளைக் கொண்டுள்ளது. ஐபாட் நான்காம் தலைமுறை கைக் கணனி ஐஓஎஸ் 6 இயங்குதள பதிப்புடன் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் இதனால் ஐஓஎஸ் 6, 7, 8, 9, 10 ஆகிய ஐந்து இயங்குதள பதிப்புக்கள் ஆதரிக்கப்படுகின்றன.

இந்த சாதனம் கருப்பு அல்லது வெள்ளை முன் வண்ணங்களுடனும், 16 ஜிபி , 32 ஜிபி, 64 ஜிபி, 128 ஜிபி மாறுப்பட்ட சேமிப்புத் திறன்களுடனும், ஒய்-பை மட்டும் அல்லது ஒய்-பை + செல்லிடம் ஆகிய மாறுப்பட்ட இணைப்பு விருப்பங்களுடனும் கிடைக்கின்றது.

2012 ஆம் ஆண்டு அக்டோபர் 23 அன்று ஐபாட் வரிசையின் நான்காவது தலைமுறை வெளியிடப்பட இருப்பதாக ஊடக மாநாட்டொன்றில் அறிவிக்கப்பட்டது. 2012 ஆம் ஆண்டு நவம்பர் 2 அன்று 35 நாடுகளில் வெளியிடப்பட்டது. பின்னர் திசம்பர் வரை சீனா, இந்தியா மற்றும் பிரேசில் உள்ளிட்ட பத்து நாடுகளில் வெளியிடப்பட்டது. ஐபாட் 4 இன் அறிவிப்பைத் தொடர்ந்து மூன்றாம் தலைமுறை ஐபாட் 3 வெளிவருவது நிறுத்தப்பட்டது.[1]

நான்காவது தலைமுறை ஐபாட் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. மேலும் அதன் வன்பொருள் மேம்பாடுகளுக்காகவும் ரெடினா திரைக்காகவும் பாராட்டப்பட்டது.

வரலாறு[தொகு]

கலிபோர்னியாவின் சான் ஜோஸில் உள்ள கலிபோர்னியா தியேட்டரில் அக்டோபர் 23 ஆம் தேதி திட்டமிடப்பட்ட ஊடக நிகழ்வொன்றை ஆப்பிள் நிறுவனம் அறிவித்தது. ஊடக நிகழ்வில் ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் ஐபாட் 4 , ஐபாட் மினி ஆகியவற்றை வெளியிட்டை பற்றி அறிவிக்க முன்பு ஐ-புத்தகத்தின் புதிய பதிப்பையும், மேக்புக் ப்ரோ , மேக் மினி மற்றும் ஐமாக் ஆகியவற்றின் புதிய தலைமுறைகளையும் அறிமுகப்படுத்தினார்.[2] அறிமுகத்தின் போது ஆப்பிள் நான்காவது தலைமுறை ஐபாட் அக்டோபர் 26 முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட எண்ணிக்கையிலான நாடுகளில் இணையத்தளத்தில் முன்கூட்டியே பதிவு செய்ய முடியும் என அறிவித்தது.[3]

2012 ஆம் ஆண்டு நவம்பர் 2 அன்று ஐபாட் நான்காம் தலைமுறை ஆப்பிள் சாதனத்தின் ஒய்-பை மாதிரி ஐரோப்பா, கிழக்கு ஆசியா மற்றும் வட அமெரிக்கா முழுவதுமான 35 நாடுகளில் வெளியிடப்பட்டது. ஆரம்ப வெளியீட்டிற்கு சில வாரங்களுக்குப் பிறகு செல்லிட இணைப்புகளைக் கொண்ட வர்த்தக நிலையங்களில் வெளியிடப்பட்டது.[3]

2013 ஆம் ஆண்டு அக்டோபர் 22 அன்று ஐபாட் ஏர் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து நான்காம் தலைமுறை ஐபாட் விற்பனை நிறுத்தப்பட்டது.[4] 2014 ஆம் ஆண்டு மார்ச் 18 அன்று ஐபாட் 2 நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து ஐபாட் 4 மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது.[5] 2014 ஆம் ஆண்டு அக்டோபர் 16 அன்று ஐபாட் ஏர் 2 க்கு ஆதரவாக நான்காம் தலைமுறை ஐபாட் வெளிவருவது நிறுத்தப்பட்டது.

வரவேற்பு[தொகு]

நான்காம் தலைமுறை ஐபாட் விமர்சகர்களிடம் இருந்தும், வர்ணனையாளர்களிடமிருந்தும் சாதகமான விமர்சனங்களைப் பெற்றது.

ஐபாட் மினி, ஐபாட் 4 என்பவற்றின் முதல் வார இறுதி விற்பனை 3 மில்லியன் ஆகும்.[6]

சான்றுகள்[தொகு]

  1. D'Orazio, Dante (2012-10-23). "3rd Generation iPad discontinued, refurbished models available starting at $379". The Verge (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-11-11.
  2. "Apple debuts iPad mini tablet". Los Angeles Times (in அமெரிக்க ஆங்கிலம்). 2012-10-23. பார்க்கப்பட்ட நாள் 2019-11-11.
  3. 3.0 3.1 "Apple Introduces iPad mini". Apple Newsroom (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-11-11.
  4. Pachal, Pete. "Apple Unveils iPad Air". Mashable (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-11-11.
  5. "Apple kills iPad 2 in favor of 4th-gen Retina display model". Engadget (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-11-11.
  6. Tablets, Kate Solomon 2012-11-05T15:00:00 309Z. "Apple boasts 3 million sales for iPad mini, iPad 4". TechRadar (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-11-11.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐபாட்_4&oldid=2867774" இலிருந்து மீள்விக்கப்பட்டது