உள்ளடக்கத்துக்குச் செல்

டிம் குக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டிம் குக்

டிம் குக் (Timothy Donald Cook)(பிறப்பு 1 நவம்பர் 1960) என்பவர் அமெரிக்கத் தொழில் முனைவோர் மற்றும் தொழில் பொறியாளர் ஆவார். இவர் 2011 ஆகத்து 24 முதல் ஆப்பிள் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரியாகச் செயல்பட்டு வருகிறார். ஆப்பிள் நிறுவனத்தின் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்சின் பதவி விலகலுக்குப் பின் டிம் குக் ஆப்பிள் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரியாகப் பொறுப்பேற்றார்.[1] 1998 மார்ச்சில் இவர் ஆப்பிள் நிறுவனத்தில் சேர்ந்தார். தொடக்கத்தில் உலகளாவிய விற்பனைக்கான துணைத் தலைவர் என்ற பதவியில் இருந்தார்.

வாழ்க்கைக் குறிப்புகள்

[தொகு]

அமெரிக்காவில், அலபாமா மாநிலத்தில், மொபயில் என்ற ஊரில் டிம் குக் பிறந்தார். இவருடைய தந்தை டோனால்ட் கப்பல் கட்டுமிடத்தில் ஊழியராகப் பணி புரிந்தார். தாயார் ஒரு மருந்தகத்தில் பணி செய்தார்.[2] இவர் பள்ளிப் படிப்பை முடித்து 1982-ல் ஆபர்ன் பல்கலைக்கழகத்தில் தொழில் பொறியியலில் பட்டம் பெற்றார். பின்னர் டியூக் பல்கலைக்கழகப் பள்ளியில் 1988-ல் மேலாண்மையில் முது நிலைப் பட்டம் பெற்றார்.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Steve Jobs Resigns as CEO of Apple". Apple Inc. August 24, 2011. பார்க்கப்பட்ட நாள் August 25, 2011.
  2. "Tim Cook -- Apple CEO and Robertsdale's favorite son -- still finds time to return to his Baldwin County roots". AL.com.
  3. Love, Julia (January 14, 2009). "Fuqua grad takes reins at Apple". The Chronicle (Duke University) இம் மூலத்தில் இருந்து மார்ச் 28, 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150328090902/http://www.dukechronicle.com/articles/2009/01/15/fuqua-grad-takes-reins-apple. பார்த்த நாள்: February 11, 2011. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=டிம்_குக்&oldid=3797911" இலிருந்து மீள்விக்கப்பட்டது