ஐந்தாந்தலைமுறைத் தாரைப் போர் விமானம்
Jump to navigation
Jump to search
ஐந்தாந்தலைமுறைத் தாரைப் போர் விமானம் (Fifth-generation jet fighter) என்பது ஐக்கிய அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் மிகவும் மேம்பட்ட போர் விமானத்தின் வகைப்பாடு ஆகும். 2015 வரை இது ஒன்றே மிக அதிக நவீன தொழில்நுட்பங்களை கொண்ட போர் விமானமாகும். நான்காம் தலைமுறை போர்விமானங்களிலிருந்து இது மேம்படுத்தப்பட்டது. ஆயுதமேந்திய இந்த விமானத்தை ரேடாரால் கூட கண்டுபிடிக்க இயலாது. மேலும் ரேடார் இடைமறிப்புக்கு குறைந்த நிகழ்தகவு மற்றும் மேம்படுத்தப்பட்ட வான் மின்னணுவியல் மற்றும் நவீன கணினி அமைப்பு போன்ற மேம்பாடுகளை ஐந்தாம் தலைமுறை ஜெட் போர் விமானம் கொண்டுள்ளது. தற்பொழுது பயன்பாட்டில் உள்ள ஒரே ஐந்தாம் தலைமுறை ஜெட் போர்விமானம் ஐக்கிய அமெரிக்க வான்படையில் பயன்படுத்தப்படும் போர்விமானம் லாக்ஹீட் மார்டின் எப்-22 ராப்டர் ஆகும்.[1][2][3]