ஐதராபாத்து மராக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐதராபாத்து மராக்
மராக்
மாற்றுப் பெயர்கள்இறைச்சி வடிசாறு
தொடங்கிய இடம்இந்தியா
பகுதிதெலிங்காணா
முக்கிய சேர்பொருட்கள்இறைச்சி மற்றும் எலும்பு, இந்திய மசாலா

ஐதராபாத்து மராக் அல்லது மராக் என்பது ஒரு காரமான இறைச்சி வடிசாறு (soup) ஆகும். இது இந்தியாவின் ஐதராபாத்து நகரத்தில் புழங்கும் ஐதராபாத்து சமையலின் ஒரு பகுதியாகப் பரிமாறப்படுகிறது. இது எலும்புடன் மென்மையான ஆட்டிறைச்சியிலிருந்து சமைக்கப்படுகிறது. இந்த சுவையான வடிசாறு, [1] ஐதராபாத்து திருமண விருந்துகளில், தொடக்க பானமாக பரிமாறப்படுவது வழக்கமாகிவிட்டது.

தேவையான பொருட்கள்[தொகு]

உள்ளூரில் கிடைக்கும் ஆட்டிறைச்சி மற்றும் எலும்பு, வெங்காயம், முந்திரி, தயிர், தேங்காய்த் துருவல், காய்ச்சிய பால், கிரீம், இஞ்சி-பூண்டு விழுது, உப்பு, ஏலக்காய், இலவங்கப்பட்டை, கிராம்பு, கருப்பு மிளகு தூள், பச்சை மிளகாய் ஆகியன ஆகும் .

மேலும் பார்க்கவும்[தொகு]

  • சூப்களின் பட்டியல்

மேற்கோள்கள்[தொகு]

  1. Bilquis Jehan Khan. "A Song of Hyderabad". thefridaytimes.com. Archived from the original on 22 February 2014. பார்க்கப்பட்ட நாள் 28 January 2012.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐதராபாத்து_மராக்&oldid=3593980" இலிருந்து மீள்விக்கப்பட்டது