ஐதரசன் தூய்மையாக்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஐதரசன் தூய்மையாக்கி (hydrogen purifier) என்பது ஐதரோ கார்பன்களில் இருந்து உற்பத்தி செய்யப்படும் ஐதரசனை தூய்மையாக்கப் பயன்படும் கருவியாகும். புரோட்டான் பரிமாற்ற எரிபொருள் மின்கலன்களில் இவ்வாறு தூய்மைப்படுத்தப்பட்ட மீத்தூய ஐதரசன் பயன்படுத்தப்படுகிறது.

பலேடியம் சவ்வு ஐதரசன் தூய்மையாக்கிகள்[தொகு]

பலேடியம் மென்தகடு என்பது பலேடியமும் வெள்ளியும் சேர்ந்த உலோகக் கலவையால் ஆக்கப்பட்ட உலோகக் குழாயாகும் பொதுவாக 300 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு மேல் வெப்பப்படுத்தும் போது அதன் படிக வடிப்பி வழியாக ஓரணு ஐதரசனை மட்டுமே புகுந்து செல்ல அனுமதிப்பது இவ்வுலோகக் கலவையிலான தகட்டின் தனிச்சிறப்பு ஆகும்.[1]

அடர்த்தியான உலோக மெல்லிழை தூய்மையாக்கி[தொகு]

அடர்த்தி மிகுந்த மெல்லிய உலோகவிழைத் தகடுகள் ஐதரசன் சுத்திகரிப்புக்கு மலிவானதாகவும் பயன்படுத்துவதற்கு எளியனவாகவும் உள்ளன.[2][3][4]

அழுத்த ஊஞ்சல் பரப்பு ஈர்த்தல்[தொகு]

தொகுப்பு முறையில் பெருமளவில் ஐதரசன் தயாரிக்கும் திட்டங்களில் இறுதிப்படிநிலையில் தோன்றும் கார்பன் டை ஆக்சைடை நீக்குவதறகு அழுத்த ஊஞ்சல் பரப்பு ஈர்த்தல் தொழினுட்பம் பயன்படுத்தப்படுகிறது. தேவைப்பட்டால் இத்தொழினுட்பம் மூலம் மீத்தேன், கார்பன் மோனாக்சைடு , நைட்ரசன் , ஆர்கான் மற்றும் ஈரத்தன்மை ஆகியனவற்றையும் ஐதரசனில் இருந்து நீக்க முடியும்.

வினையூக்க மறுசேர்க்கை அல்லது ஆக்சிசனீக்கம்[தொகு]

உயிர்வளி நீக்கம் அல்லது வினையூக்க மறுசேர்க்கை வினையின் மூலம் ஆக்சிசன் மாசுக்கள் நீக்கப்படுகின்றன. இச்செயல்முறை டீயாக்சோ செயல்முறை என்றும் அழைக்கப்படுகிறது. ஆக்சிசன் ஐதரசனுடன் வினைபுரிந்து நீராவி உண்டாகிறது. தேவைப்பட்டால் இந்நீராவியை உலர்த்திகளைக் கொண்டும் நீக்கிவிடலாம். பிளாட்டினம் தொகுதித் தனிமங்கள் இங்கு அடிப்படை வினையூக்கிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன.பொதுவாக இவ்வமைப்பில் 3% ஆக்சிசன் உட்செலுத்தப்பட்டு மில்லியனில் ஒரு பங்கு அளவு மாசு ஆக்சிசன் நீக்கப்படுகிறது.[5]

பயன்கள்[தொகு]

ஒளியுமிழ் இருமுனையங்கள் தயாரிக்கும் கரிமவுலோக ஆவிநிலை மேலொழுங்கு உலைகளில் ஐதரசன் தூய்மையாக்கிகள் பயன்படுகின்றன.[6]

மேற்கோள்கள்[தொகு]

இவற்றையும் காண்க[தொகு]

ஐதரசன் நெரிப்பு பகுப்பாய்வு

வாயுப் பிரிவினை

சவ்வில் வாயுப் பிரிவினை

வெளிப்புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐதரசன்_தூய்மையாக்கி&oldid=2943681" இருந்து மீள்விக்கப்பட்டது