ஐக்கிய அரபு அமீரக திர்கம்
درهم إماراتي (அரபு மொழி) | |
---|---|
ஐ.எசு.ஓ 4217 | |
குறி | AED (எண்ணியல்: 784) |
சிற்றலகு | 0.01 |
அலகு | |
குறியீடு | د.إ |
மதிப்பு | |
துணை அலகு | |
1/100 | ஃபில்கள் |
வங்கித்தாள் | 5, 10, 20, 50, 100, 200, 500, 1000 திராம் |
Coins | 1, 5, 10, 25, 50 ஃபில்கள், 1 திராம் |
மக்கள்தொகையியல் | |
பயனர்(கள்) | ஐக்கிய அரபு அமீரகம் |
வெளியீடு | |
நடுவண் வங்கி | ஐக்கிய அரபு அமீரகத்தின் மத்திய வங்கி |
இணையதளம் | www.centralbank.ae |
மதிப்பீடு | |
பணவீக்கம் | 10% |
ஆதாரம் | The World Factbook, 2006 est. |
உடன் இணைக்கப்பட்டது | அமெரிக்க டாலர் = 3.6725 திராம் |
ஐக்கிய அரபு அமீரக திர்கம் (UAE DIRHAM) என்பது ஐக்கிய அரபு அமீரகத்தின் நாணயம் ஆகும். இதன் பெறுமதி ஐக்கிய அமெரிக்க டாலருடன் நிரந்தரமாகப் பிணைக்கப்பட்டுள்ளது. இதன் ஐஎஸ்ஓ 4217 குறியீடு AED என்பதாகும். அதிகாரபூர்வமற்ற முறையில் இதனை DH, Dhs. எனவும் குறிப்பது உண்டு. ஒரு திராம் 100 சிறு அலகுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இது ஃபில் எனப்படும்.
வரலாறு
[தொகு]இது 1973 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. இது, அபுதாபி தவிர்ந்த ஏனைய அமீரகங்களில் 1966 ஆம் ஆண்டிலிருந்து பயன்பாட்டில் இருந்து வந்த கட்டார் மற்றும் துபாய் ரியால் என்னும் நாணயத்துக்கும், அபுதாபியில் புழங்கிய பஹ்ரெய்ன் தினாருக்கும் பதிலாகப் புழக்கத்துக்கு வந்தது. 1966 ஆம் ஆண்டுக்கு முன்னர் ஐக்கிய அரபு அமீரகத்தின் உறுப்பு அமீரகங்கள் வளைகுடா ரூபா (Gulf rupee) என்னும் நாணயத்தைப் பயன்படுத்தின. வளைகுடா ரூபாவில் இருந்து கட்டார் மற்றும் துபாய் ரியாலுக்கு மாறிய இடைக்காலத்தில் சிறிது காலம் சவூதி ரியாலும் இந்த அமீரகங்களில் புழங்கியது.
நடைமுறையில் திராம், ஐக்கிய அமெரிக்க டாலருடன் பிணைக்கப்பட்டுள்ளது. ஒரு அமெரிக்க டாலர், 3.6725 திராமுக்குச் சமன் ஆகும். திராம் என்னும் சொல் திராச்மே (Drachmae) என்னும் கிரேக்கச் சொல்லிலிருந்து பெறப்பட்டது. திராச்மே உலகில் மிகப் பரவலாகப் புழங்கிய ஒரு நாணயம். நூற்றாண்டுகளாக நடைபெற்ற வணிகத்தின் காரணமாக, ஓட்டோமான் பேரரசு ஊடாக மத்திய கிழக்கில் இது வழங்கி வருகின்றது.
நாணயக் குற்றிகள்
[தொகு]1973 ஆம் ஆண்டில் திராம் ஐக்கிய அரபு அமீரகத்தின் நாணயமாக அறிமுகப்படுத்தப்பட்ட போது, 1, 5, 10, 25, 50 ஃபில்கள் மற்றும் 1 திராம் பெறுமதி கொண்ட நாணயக் குற்றிகள் வெளியிடப்பட்டன. 1, 5, 10 ஃபில் நாணயங்கள் வெண்கலத்திலும், உயர் பெறுமது கொண்ட நாணயங்கள் குப்பிரோ நிக்கலிலும் அச்சிடப்பட்டன. 1995 அம் ஆண்டில் 1 திராம், 50 ஃபில் குற்றிகளின் அளவு சிறிதாக்கப்பட்டது. வட்ட வடிவமாக இருந்த 50 ஃபில் குற்றி, எழுகோண வடிவமாக்கப்பட்டது.
நாணயத் தாள்கள்
[தொகு]1973 இல், ஐக்கிய அரபு அமீரக நாணயச் சபை 1, 5, 10, 50, 100, 1000 ஆகிய பெறுமதிகளில் நாணயத் தாள்களை வெளியிட்டது. 1982 இன்னொரு தொடர் வெளியிடப்பட்டபோது 1 திராம், 1000 திராம் தாள்கள் விலக்கப்பட்டன. 500 திராம் தாள் 1983 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. 200 திராம் தாள் 1989 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. 2000 ஆவது ஆண்டில் 1000 திராம் தாள் மீண்டும் புழக்கத்துக்கு வந்தது. 200 திராம் தாள் 1989 இல் மட்டுமே அச்சடிக்கப்பட்டதால் அண்மைக் காலங்களில் அதன் புழக்கம் மிகவும் அரிதாகவே காணப்பட்டது. மே 2008 இல் புதிய 200 திராம் தாள்கள் வெளியிடப் பட்டுள்ளன.
1982 தொடர் | |||||
---|---|---|---|---|---|
படிமம் | பெறுமதி | முதன்மை நிறம் | விபரம் | ||
முன்பக்கம் | பின்பக்கம் | முன்பக்கம் | பின்பக்கம் | ||
5 திராம் | மண்ணிறம் | ||||
10 திராம் | பச்சை | ||||
20 திராம் | நீலம் | ||||
50 திராம் | ஊதா | ||||
100 திராம் | இளஞ்சிவப்பு | ||||
200 திராம் | பச்சை / மண்ணிறம் | ||||
500 திராம் | இள நீலம் | ||||
1000 திராம் | பசும்-நீலம் |