ஐகிபானா

இகெபானா (Ikebana (生け花 生け花?, வாழும் பூக்கள்) என்பது பூக்களை ஒழுங்குபடுத்தும் ஒரு ஜப்பானியக் கலை வடிவாகும். இக்கலை கடோ kadō (華道? பூக்களின் வழி) என்றும் அறியப்படுகின்றது.
பெயரியல்[தொகு]
ஜப்பானியச் சொற்களான இகேருவும் ஹனாவும் சேர்ந்து இகெபானா என்றானது. இகேரு ikeru (生ける? "உயிரோடு இருக்கவை, ஒழுங்குபடுத்தும், வாழும்") ஹானா hana (花? "பூ") இகெபானா என்ற சொல்லுக்குப் பூக்களுக்கு உயிரளிப்பது என்றோ பூக்களை ஒழுங்குபடுத்துவது என்றோ பொருள் கொள்ளலாம்.[1]
அணுகுமுறை[தொகு]
ஒரு சிறிய தொட்டியில் பலவிதமான பூக்களையும் இலைகளையும் வைத்து வடிவமைப்பது எனப்பொதுவாக அறியப்பட்டாலும் இது இயற்கையையும் மனிதத்தன்மையையும் ஒருங்கிணைக்கும் ஒரு ஒழுங்கமைப்பு கொண்ட கலைவடிவமாகும். பூக்களின் அலங்காரத்தை விடத் தாவரத்தின் பிற பகுதிகளான தண்டு, இலைகள் போன்றவற்றின் வடிவையும் வரியையும் அமைப்பையும் முன்நிறுத்துகின்றது.
வரலாறு[தொகு]
இகெபானா உருவான துல்லியமான வரலாறு தெரியவில்லை. புத்தரை வணங்கி மாடத்தில் மலர்களை செலுத்தும் வழக்கத்திலிருந்தோ மாண்டவர்களின் ஆன்மாக்களுக்கு மலர்களையளிக்கும் வழக்கத்திலிருந்தோ உருவாகியிருக்கலாம் என்று கருதப்படுகின்றது.[2] 15 ஆம் நூற்றாண்டின் இடையில் புத்த துறவியர்களிடமிருந்து இக்கலை பரவியது.


பாங்குகள்[தொகு]
இக்கலைக்காகப் பலவகையான பள்ளிகளும் பாங்குகளும் தோன்றியுள்ளன. அவற்றுள் சில
- இகெபனொபோ
- சக கொர்யூ
- சென்கை ரியூ
- யோஷின் கொர்யூ
- மிஷோ ரியூ
- ஒஹரா ரியூ
- சொங்கெட்சு ரியூ
- பண்மி ஷோஃபூ ரியூ
- கடென் ரியூ
இயற்கையின் அழகைப் போற்றும் புத்த சமய வெளிப்பாடாக நிற்கும் பூக்கள் எனப்பொருள்படும் ரிக்கா பாங்கு உருவானது. இயற்கையின் மூலகங்களை உணர்த்தும் வகையில் ஏழு கிளைகள் கொண்டவாறு வடிவமைப்பது இப்பாங்கின் சிறப்பு.[3] அவை
- ருயூ - சிகரம்
- காகு - குன்று
- ரூ - அருவி
- ஷீ - நீர்நிலை அருகில் உள்ள நகர்
- பி - பள்ளத்தாக்கு
- யூ - காட்சியின் கதிரொளி விழும் பகுதி
- இன் - காட்சியின் கதிரொளி மறை பகுதி
அமைப்புகள்[தொகு]
இகெபானா பள்ளிகளில் பயிற்றுவிக்கப்படுகின்றது. 1956 ல் இகெபானா பன்னாட்டு அமைப்பு தொடங்கப்பட்டது.[4]
இவற்றையும் காண்க[தொகு]
சான்றுகள்[தொகு]
- ↑ The Modern Reader's Japanese-English Character Dictionary, Charles E. Tuttle Company, ISBN 0-8048-0408-7
- ↑ "IKEBANA SOGETSU History of Ikebana | Know Sogetsu" இம் மூலத்தில் இருந்து 2016-02-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160205012739/http://www.sogetsu.or.jp/e/know/about/ikebana_history.html.
- ↑ "Forms of Ikebana | Ikebana-flowers.com" இம் மூலத்தில் இருந்து 2015-03-12 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20150312114840/http://ikebana-flowers.com/forms-of-ikebana/.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2016-10-21 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161021191305/http://ikebanahq.org/profile.php.
பிற இணைப்புகள்[தொகு]
- இகெபானா பாங்குகளை விளக்கும் படக்கையேடு பரணிடப்பட்டது 2015-04-02 at the வந்தவழி இயந்திரம்
- இகெபானா விக்கி