ஐஆர்என்எஸ்எஸ்-1எச்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஐஆர்என்எஸ்எஸ்-1எச்
திட்ட வகைசெயற்கைக்கோள் கல இயக்கம்
இயக்குபவர்இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்
திட்டக் காலம்10 ஆண்டுகள்
விண்கலத்தின் பண்புகள்
தயாரிப்புஇந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் செயற்கைக்கோள் மையம்
விண்வெளி பயன்பாட்டு மையம்
ஏவல் திணிவு1425கிகி
உலர் நிறை0 கிகி
திட்ட ஆரம்பம்
ஏவப்பட்ட நாள்31 ஆகத்து 2017, 18:59 UTC
ஏவுகலன்பிஎஸ்எல்வி-எக்ஸ்எல்-C39
ஏவலிடம்சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையம் - எஸ்எல்பி
ஒப்பந்தக்காரர்இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்
திட்ட முடிவு
கழிவு அகற்றம்ஏவுதல் தோல்வி[1]

ஐஆர்என்எஸ்எஸ்-1எச் (IRNSS-1H) இந்தியப் பகுதிக்கான இடஞ்சுட்டி செயற்கைக்கோள் அமைப்புத் (IRNSS) தொடர் செயற்கைக்கோள் வரிசையில் எட்டாவது செயற்கைக்கோள் ஆகும்.

இதற்கு முந்தைய ஏழு செயற்கைகோள்கள்: இந்தியப் பகுதிக்கான இடஞ்சுட்டி செயற்கைக்கோள் அமைப்பு-1ஏ, இந்தியப் பகுதிக்கான இடஞ்சுட்டி செயற்கைக்கோள் அமைப்பு-1பி, இந்தியப் பகுதிக்கான இடஞ்சுட்டி செயற்கைக்கோள் அமைப்பு-1சி, இந்தியப் பகுதிக்கான இடஞ்சுட்டி செயற்கைக்கோள் அமைப்பு-1டி, இந்தியப் பகுதிக்கான இடஞ்சுட்டி செயற்கைக்கோள் அமைப்பு-1இ, இந்தியப் பகுதிக்கான இடஞ்சுட்டி செயற்கைக்கோள் அமைப்பு-1எஃப் மற்றும் இந்தியப் பகுதிக்கான இடஞ்சுட்டி செயற்கைக்கோள் அமைப்பு-1ஜி.

ஐஆர்என்எஸ்எஸ்-1எச், இந்தத் தொடரின் கல இயக்க கடைசி ஏவூர்தி ஆகும்.  இந்த செயற்கைக்கோளானது புவி ஒத்தியக்கப்பாதையில் நிலைநிறுத்தப்பட இருந்தது. இந்த செயற்கைக்கோளானது, பி.எஸ்.எல்.வி.சி- 39 ராக்கெட் மூலம் திட்டமிட்டபடி ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள, சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் உள்ள இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து ஆகத்து 31 ஆம் தேதி செலுத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இம்முயற்சி தோல்வியடைந்தது [2][3]

இது குறித்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத் தலைவர் கிரண்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது, செயற்கைக்கோளுக்குப் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த வெப்பத்தடுப்பு அமைப்பு சரியாகப் பிரியாததால் விண்ணில் செலுத்தப்பட்ட செயற்கைக்கோள் தோல்வி அடைந்ததாக தெரிவித்துள்ளார். மேலும், ஏவூர்தியின் நான்கு நிலைகளில் 3 நிலைகள் நன்கு செயல்பட்டதாகவும். 4-வது நிலையில் வெப்பத்தடுப்பு அமைப்பு சரியாகப் பிரியாததால் செயற்கைக்கோள் நிலை நிறுத்துவதிலும், தொழில் நுட்ப கோளாறு காரணமாகவும் தோல்வி அடைந்ததாகவும், இதனால் திட்டமிட்டபடி 19 நிமிடத்தில் செயற்கைக்கோளை நிலைநிறுத்த முடியாமல் போய்விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தோல்விக்கான காரணங்கள் ஆராயப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.[4]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐஆர்என்எஸ்எஸ்-1எச்&oldid=2470527" இருந்து மீள்விக்கப்பட்டது