இந்தியப் பகுதிக்கான இடஞ்சுட்டி செயற்கைக்கோள் அமைப்பு-1ஏ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1ஏ (IRNSS-1A) என்பது இந்திய பிராந்திய ஊடுருவும் துணைக்கோள்கள் வரிசையில் முதலாவது செயற்கைக்கோள் ஆகும். இதுபோல் இவ்வரிசையில் மொத்தம் ஏழு செயற்கைக்கோள்களை புவிநிலைச் சுற்றுப்பாதையில் நிலை நிறுத்த இந்திய விண்வெளி ஆய்வு மையம் திட்டமிட்டுள்ளது.[1][2]

உருவாக்கம்[தொகு]

இச்செயற்கைக்கோளை இந்திய விண்வெளி ஆய்வு மையம் 125 கோடி இந்திய ரூபாய் மதிப்பில் உருவாக்கியது. இசஞ்சுட்டும் அமைப்பில் தன்னிறைவு அடையும் பொருட்டு இச்செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டது.[3][4]

ஏவுதல்[தொகு]

ஆந்திர பிரதேசம் மாநிலத்தில், சென்னைக்கு 80 கி.மீ. (50 மைல்) வடக்கே அமைந்துள்ள ஸ்ரீஹரிக்கோட்டா நகரத்தில் உள்ள ஏவுதளத்திலிருந்து 1 சூலை 2013 ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்டு வெற்றிகரமாக புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. இச்செயற்கைக்கோள் முதலில் 26 சூன் 2013 அன்று ஏவத் திட்டமிடப்பட்டு தொழில்நுட்பக் கோளாறு காரணமாய் தாமதமாகியது.

இதையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "IRNSS-1A". பார்த்த நாள் 30 மார்ச் 2015.
  2. "IRNSS". இசுபேசு.இசுகைராக்கெட் இணையத்தளம். பார்த்த நாள் 30 மார்ச் 2015.
  3. "India's first ever dedicated navigation satellite launched". டிஎன்ஏஇந்தியா இணையத்தளம். பார்த்த நாள் 30 மார்ச் 2015.
  4. "India's first dedicated navigation satellite placed in orbit". என்டிடிவிஏ இணையத்தளம். பார்த்த நாள் 30 மார்ச் 2015.