உள்ளடக்கத்துக்குச் செல்

ஏ. விசயராகவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
A. Vijayaraghavan
இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) அலுவல் குழுவின் உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
20 நவம்பர் 2020 (2020-11-20)
முன்னையவர்கோடியேரி பாலகிருஷ்ணன்
தலைவர், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம்
பதவியில் உள்ளார்
பதவியில்
2022
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புமலப்புறம்
அரசியல் கட்சிஇந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
துணைவர்ஆர். பிந்து
முன்னாள் கல்லூரிஅரசு சட்டக் கல்லூரி, கோழிக்கோடு

ஏ. விசயராகவன் ( A. Vijayaraghavan ) இந்தியப் பொதுவுடைமைக் கட்சியைச் (மார்க்சிஸ்ட்) சேர்ந்த ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். மேலும் கேரளாவில் இடது ஜனநாயக முன்னணியின் ஒருங்கிணைப்பாளராகவும், கட்சியின் கேரள மாநிலக் குழுவின் முன்னாள் செயலாளராகவும் இருந்தார்.[1][2] இவர் மலப்புரத்தில் பிறந்தவர்.[1] இவர் நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில்கேரளாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். மேலும், துணைச் சட்டங்கள் மற்றும் பொது உத்தரவாதங்கள் தொடர்பான நாடாளுமன்றக் குழுக்களின் தலைவராக இருந்தார். இவர் மாநிலங்களவையில் கட்சியின் தலைமைக் கொறடாவாகவும் இருந்தார். 1989ல் பாலக்காடு மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் (மார்க்சிஸ்ட்) மத்திய செயலக உறுப்பினராகவும், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் உள்ளார். இவர் 2022 தேர்தல்களின் போது கேரளாவில் கட்சியின் தற்காலிகச் செயலாளராக பணியாற்றினார்.[3]

இவர் 2014 இந்தியப் பொதுத் தேர்தலில் கோழிக்கோடு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார்.[4] கோழிக்கோடு அரசு சட்டக் கல்லூரியில் சட்டத்தில் இளங்கலைப் பட்டமும் பெற்றுள்ளார். இவர் இந்திய அரசியல்வாதியும் பேராசிரியையுமான ஆர். பிந்துவை மணந்தார். பிந்து பிரபல கட்சிப் பணியாளரும், திருச்சூரில் உள்ள சிறீ கேரள வர்மா கல்லூரியின் ஆசிரியரும் ஆவார்.[5] இவர்கள் திருச்சூரில் வசிக்கின்றனர்.

பிற பணிகள்

[தொகு]

ஏ. விசயராகவன் இந்திய மாணவர் கூட்டமைப்பு தலைவராகவும் பணியாற்றியுள்ளார். மலையாள கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தில் இயக்குநராகவும் உள்ளார். ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் சபைக்கான இந்தியக் குழுவில் உறுப்பினராகவும் இருந்தார்.[6] தற்போது அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் அகில இந்திய பொதுச் செயலாளராகப் பணியாற்றி வருகிறார்.[7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Vijayaraghavan is new LDF convener". The Hindu. Retrieved 23 January 2021.
  2. "Kodiyeri goes on leave for treatment". The Hindu. Retrieved 23 January 2021.
  3. "Kodiyeri Balakrishnan returns as CPI(M) State secretary in Kerala". Frontline (in ஆங்கிலம்). 2021-12-03. பார்க்கப்பட்ட நாள் 2023-11-04.
  4. "Campaign with a gentle touch". The Hindu. Retrieved 23 January 2021.
  5. "Bindu elected Thrissur Mayor". The Hindu. Retrieved 23 January 2021.
  6. "Index to the Proceedings of the General Assembly". ஐக்கிய நாடுகள் அவை. p 308. Retrieved 23 January 2021.
  7. "Agricultural workers to rise up against ‘injustices’ of the Centre". The Hindu. Retrieved 23 January 2021.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._விசயராகவன்&oldid=3906749" இலிருந்து மீள்விக்கப்பட்டது