ஏ. பி. சண்முகசுந்தர கவுண்டர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஏ. பி. சண்முகசுந்தர கவுண்டர் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1967 மற்றும் 1971 ஆம் ஆண்டுகளில் நடந்த சட்டமன்றத் தேர்தலில், பொள்ளாச்சி தொகுதியில் இருந்து, திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக போட்டியிட்டு, தமிழக சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2] இவர் சென்னையில் உள்ள, இலயோலா கல்லூரியில் இளங்கலை அறிவியல் (வேதியியல் பிரிவில்) பட்டம் பெற்றார். இவருக்கு மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இப்போது இவர் பல்வேறு ஆன்மீக நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்.[சான்று தேவை]

முன்னர் வாழ்க்கையில் அவர் ஒரு நாத்திகராகவும் திராவிடர் கழகத்தின் பின்பற்றுபவராகவும் இருந்தார். இவர் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கா. ந. அண்ணாதுரையின் உரைகளால் ஈர்க்கப்பட்டார்.

மேற்கோள்கள்[தொகு]