ஏ. கே. வீராசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஏ. கே. வீராசாமி (இறப்பு: ஆகத்து 22, 2010) பழம்பெரும் தமிழ்த் திரைப்பட நடிகர். தென்னிந்திய நடிகர் சங்க துணைத் தலைவராகப் பணியாற்றியவர். இவர், உன்னைப்போல் ஒருவன் படத்தில் நடித்ததற்காக தேசிய விருது பெற்றவர்.

பணம் படைத்தவன், முதல் மரியாதை, திருமலை தென்குமரி, வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான படங்களில் இவர் நடித்திருக்கிறார்.

மறைவு[தொகு]

ஏ. கே. வீராசாமி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் தனது 84வது அகவையில் காலமானார். இவரது மனைவி ராஜலட்சுமி 2009 ஆம் ஆண்டில் இறந்தார். இவருக்கு 4 மகன்களும், 1 மகளும் உள்ளனர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Sudha (2010-08-23). "'எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் சாமி' புகழ் நடிகர் வீராசாமி மரணம்". tamil.filmibeat.com. பார்க்கப்பட்ட நாள் 2022-01-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._கே._வீராசாமி&oldid=3479835" இலிருந்து மீள்விக்கப்பட்டது