ஏ. எல். நஜிமுத்தீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஏ. எல். நஜிமுத்தீன்
ஏ. எல். நஜிமுத்தீன்.png
பிறப்புநவம்பர் 23, 1953
தேசியம்இலங்கை
அறியப்படுவதுஈழத்து எழுத்தாளர்

ஏ. எல். நஜிமுத்தீன் (பிறப்பு: நவம்பர் 23, 1953) இலங்கை எழுத்தாளரும், ஆய்வாளரும், நூலாசிரியருமாவார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

நஜீமுத்தீன் மாத்தளை அரசினர் ஆண்கள் பாடசாலை, மாத்தளை சாகிராக் கல்லூரி, மாத்தளை புனித தோமஸ் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவராவார். இவர் நீதிமன்றத்தில் நீதிமன்ற முதலியாராகக் கடமையாற்றி தற்போது ஓய்வுபெற்றுள்ளார். இவரின் மனைவி மிஸ்ரியா. இவரின் பிள்ளைகள் நஸ்மினா, நாசிக் அஹமட், பாத்திமா ஹப்ஸா, ஆயிசா ஹானி.

இவரின் முதல் சிறுகதை 1972 இல் வீரகேசரி பத்திரிகையில் பிரசுரமானது. அதிலிருந்து பல சிறுகதைகளை இவர் எழுதியுள்ளார். எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் பாடல்கள் பற்றி இவர் எழுதிய ஆய்வுக்கட்டுரைகள் இந்தியாவிலிருந்து வெளிவரும் சினிமா மாத இதழில் தொடராக வெளிவந்தன. ஆரம்பகாலத்தில் அறிவியல் கதைகள் புனைவதிலும் அறிவியல் ஆய்வுக்கட்டுரைகள் எழுதுவதிலும் ஆர்வம் கொண்டிருந்த இவர், தற்போது முஸ்லிம் சமூகத்தின் வரலாறு தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றார்.

இவர் எழுதியுள்ள நூல்கள்[தொகு]

  • கண்டி இராச்சிய முஸ்லிம்களின் சிங்கள வம்சாவளிப்போர்கள் - 1998
  • முஸ்லிம்களும், கலவரச்சூழல்களும் - 2002
  • பாத்ததும்பறை முஸ்லிம்கள் - 2002
  • மலைநாட்டு முஸ்லிம்களின் அழிந்துபோன குடியேற்றங்கள் 1999
  • கசாவத்தை ஆலிமப்பாப் புலவர் - 2000

பெற்ற விருதுகள்[தொகு]

  • ரத்னதீபம்
  • சாமஸ்ரீ
  • கலாபூசணம் (2009)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._எல்._நஜிமுத்தீன்&oldid=2106866" இருந்து மீள்விக்கப்பட்டது