ஏ. எம். ஆரிப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏ.எம். ஆரிஃப்
A. M. Ariff
இந்திய மக்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
23 மே 2019
முன்னையவர்கே. சி. வேணுகோபால்
தொகுதிஆலப்புழா
சட்டமன்ற உறுப்பினர், கேரள சட்டமன்றம்
பதவியில்
2006–2019
முன்னையவர்கே. ஆர். கௌரி அம்மா
பின்னவர்சானிமோல் உசுமான்
தொகுதிஅரூர் (கேரளம்)
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1964 மே 20
மன்னார், கேரளம், இந்தியா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஇந்தியப் பொதுவுடமைக் கட்சி

ஏ.ம் ஆரிஃப் (A. M. Ariff) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 2019 ஆம் ஆண்டு முதல் கேரள மாநிலத்தின் ஆலப்புழா தொகுதியை நாடாளுமன்ற உறுப்பினராக இவர் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். இந்திய பொதுவுடமைக் கட்சியின் (மார்க்சியம்) உறுப்பினரான இவர், 2006 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை கேரள சட்டமன்றத்தில் அரூர் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார். மூத்த அரசியல் தலைவர் கே.ஆர்.கௌரி அம்மாவைத் தோற்கடித்து ஆரிஃப் 2006 ஆம் ஆண்டு அரூரில் தனது முதல் வெற்றியைப் பெற்றார். 2006, 2011 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் அரூரில் இருந்து கேரள சட்டமன்றத்திற்கு 3 முறை ஆரிஃப் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஆலப்புழாவில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2006 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அப்போதைய மாநில விவசாய அமைச்சரும் மூத்த அரசியல்வாதியுமான கே.ஆர். கௌரியம்மாவைத் தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்க வெற்றியாகும். 2016 ஆம் ஆண்ட்டின் கேரள சட்டப் பேரவைத் தேர்தலில், அதிக வாக்குகள் பெற்ற வேட்பாளர்கள் பட்டியலில் இவர் மூன்றாவது இடத்தைப் பிடித்தார். 2017 ஆம் ஆண்டில், கேரளா முதல் காசுமீர் சமூக அறக்கட்டளை இந்தியாவின் சிறந்த சட்டமன்ற உறுப்பினர் விருதை வழங்கியது. 17 ஆவது நாடாளுமன்றத்தில் கேரளாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுவுடமைக் கட்சி உறுப்பினர் என்ற சிறப்பும் இவருக்கு உண்டு.

அரசியல் வாழ்க்கை[தொகு]

ஆரிஃப் தனது தீவிர அரசியல் வாழ்க்கையை கல்லூரி காலத்திலேயே தொடங்கினார். கல்லூரியில் ஒன்றிய இதழின் ஆசிரியராகவும், பின்னர் சங்கத்தின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு செயல்பட்டார். தொடர்ந்து மாணவர் அமைப்பின் தலைவர், ஆலப்புழா மாவட்டச் செயலர் என பல பதவிகளை வகித்து இறுதியாக கட்சியின் மாணவர் பிரிவின் மாநிலக் குழு உறுப்பினரானார். பின்னர் இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் இளைஞர் பிரிவில் மாநிலக் குழு உறுப்பினரானார். [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "MLA Profile Gov of Kerala". Archived from the original on 23 சனவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 29 திசம்பர் 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._எம்._ஆரிப்&oldid=3455305" இலிருந்து மீள்விக்கப்பட்டது