ஏவிளம்பி ஆண்டு
Jump to navigation
Jump to search
ஏவிளம்பி ஆண்டு என்பது தமிழ்ப் புத்தாண்டில் பிரபவ ஆண்டு துவங்கி அறுபது ஆண்டுகள் என ஆண்டு வட்ட முறையில் வரக்கூடிய ஆண்டுகளில் முப்பதோதோராம் ஆண்டாகும். இந்த ஆண்டை செந்தமிழில் பொற்றடை என்றும் குறிப்பர்
ஏவிளம்பி ஆண்டு வெண்பா[தொகு]
விளம்பி ஆண்டு எப்படிப்பட்டது என்பது குறித்து இடைக்காட்டுச் சித்தர் இயற்றியதாக கூறப்படும் வெண்பா
ஏவிளம்பி மாரியற்பமெங்கும் விலைகுறைவாம்
பூவல்விளை வரிதாம் போர் மிகுதி சாவுதிகம்
ஆகுமமே வேந்தரணியாயமே புரிவார்
வேகுமே மேதினி தீ மேல்.[1]
இந்த வெண்பாவின்படி இந்த ஆண்டில் மழை குறையும், அதனால் உணவு விளைச்சலும் உற்பத்தியும் குறையும், ஆனால் விலைவாசியும் குறையும், விபத்துகளாலும், போராலும் உயிரிழப்புகள் கூடுதலாகும். நாடாளுபவர்கள் மனதிலே போர்க்குணம் கூடும். போர் மூளும், உலகெங்கும் தீ விபத்துகளும் மிகுதியாகும்.[2]
இந்த ஆண்டின் நிகழ்வுகள்[தொகு]
- ந. ச. பொன்னம்பல பிள்ளை பிறப்பு
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Shathyajith Nadesalingam. "சித்திரைப் புத்தாண்டு - ஏவிளம்பி வருடப் பிறப்பு - 13.04.2017 இரவு.....". கட்டுரை. https://www.karaitivu.org.+பார்த்த நாள் 14 ஏப்ரல் 2017.
- ↑ ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் (2017 ஏப்ரல் 13). "ஏவிளம்பி தமிழ்ப் புத்தாண்டு பொதுப் பலன்கள்: மேஷம், ரிஷபம், மிதுனம்". கட்டுரை. தி இந்து. பார்த்த நாள் 14 ஏப்ரல் 2017.