உள்ளடக்கத்துக்குச் செல்

ஏமா பாராலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏமா பாராலி
Hema Bharali
2006 ஆம் ஆண்டு ஒரு பத்திரிகையாளர் மாநாட்டில் ஏமா பாராலி பேசுகிறார். 6
பிறப்பு(1919-02-19)பெப்ரவரி 19, 1919
அசாம் மாகாணம், பிரித்தானிய இந்தியா
இறப்புஏப்ரல் 29, 2020(2020-04-29) (அகவை 101)
அசாம், இந்தியா
கல்லறைமும்பை
பணிசமுகப் பணியாளர்
சுதந்திரப் போராட்ட வீரர்
காந்தியவாதி
சர்வோதயம் தலைவர்
செயற்பாட்டுக்
காலம்
1950 – 2020
விருதுகள்பத்மசிறீ
தேசிய வகுப்புவாத நல்லிணக்க விருது
பக்ருதின் அலி அகமது Memorial Award

ஏமா பாராலி (Hema Bharali) (19 பிப்ரவரி 1919-29 ஏப்ரல் 2020) என்பவர் ஓர் இந்திய சுதந்தர ஆர்வலர், சர்வோதய இயக்கத் தலைவர் மற்றும் காந்தியவாதி ஆவார். பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பின்தங்கியவர்களின் முன்னேற்றத்திற்காகவும் இவர் பெரும் பாடுபட்டார்.[1] 1950 ஆம் ஆண்டு அசாம் மாநிலத்திலுள்ள வடக்கு லக்கீம்பூரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதற்கான நிவாரண பணியிலும் சீன இந்தியப் போரிற்கு பின்னர் எடுக்கப்பட்ட வளர்ச்சித் திட்டங்களிலும் இவர் தீவிரமாக செயல்பட்டார்.[2] இந்தியாவின் நான்காம் உயரிய குடியியல் விருதான பத்மசிறீ விருதை இந்திய அரசு 2005ஆம் ஆண்டு இவருக்கு வழங்கியது.[3] ஓராண்டிற்குப் பிறகு, உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய மதநல்லிணக்க குழு இவருக்கு தேசிய மத நல்லிணக்க விருது வழங்கியது.[4]

வாழ்க்கை வரலாறு

[தொகு]

ஏமா பாராலி வட கிழக்கு இந்திய மாநிலமான அசாமில் 1919 ஆம் ஆண்டு பிப்ரவரி 19 ஆம் தேதி சுதியா என்னும் குடும்பத்தில் பிறந்தார். இளம் வயதிலிருந்தே இவர் சமூக சேவை செய்து வந்தார். மற்றும் இந்திய விடுதலைப் போராட்டத்திலும் இவர் கலந்து கொண்டார். 1950 இல் வடக்கு லக்கீம்பூரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதற்கான நிவாரணப் பணிகளிலும் இவர் தீவிரமாக செயல்பட்டார்..[2][2][5] 1951இல் வினோபா பாவேவால் ஆரம்பிக்கப்பட்ட நிலக்கொடை இயக்கத்தில் இணைந்து பிறகு அந்த இயக்கத்தின் தலைவராகவே ஆனார்.[6] வினோபா பாவேவால் உருவாக்கப்பட்ட குழுவில் கலந்து கொண்டு தேசுபூரின் யுத்தப் பகுதிகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவினார். அப்போது வினோபா பாவேவால் ஆரம்பிக்கப்பட்ட மைத்ரேயி ஆசிரமத்திலும் தங்கினார்.[7] நிலக்கொடை இயக்கம் சம்பந்தப்பட்ட நடை பயணங்களிலும் கலந்து கொண்டார். மற்றும் மத்திய சமூக நல வாரியத்தின் நிர்வாக சபையை உருவாக்கியவரும் இவரே.[8]

நான்காவது உயரிய குடியியல் விருதான பத்மசிறீ விருதை 2005 ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று பெறுபவர் பட்டியலில் இவரையும் இந்திய அரசு இணைத்துக்கொண்டது.[3] 2006 ஆம் ஆண்டு உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய நல்லிணக்க குழு இவருக்கு தேசிய மத நல்லிணக்க விருது வழங்கி சிறப்பித்தது.[4] மூன்று வருடங்களுக்குப் பிறகு, தேசிய ஒருமைப்பாட்டிற்காக பக்ருதின் அலி அகமது விருது அசாம் அரசு இவருக்கு வழங்கியது.[9] திருமணமாகாத ஏமா பாராலி 90களில் பொருளாதார நிதி நெருக்கடியை சந்திக்க வேண்டியிருந்தது.[10][11] அப்பொழுது மாநில அரசு அவருக்கு நிதி உதவி செய்தது. அவர் அசாம் மாநிலத்தின் குவகாத்தியில் வசித்தார்.Assam.[12] ஏப்ரல் 2016ஆம் ஆண்டு அவர் மீண்டும் சமூக சேவை செய்ய தொடங்கினார்.[13]

அவர் 29 ஏப்ரல் 2020 தனது 101 ஆவது அகவையில் மறைந்தார்.[14]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "PM's Speech on Presentation of Fakhruddin Ali Ahmed Memorial Award 2008 & 2009". Government of India. 18 February 2011. பார்க்கப்பட்ட நாள் 30 November 2015.
  2. 2.0 2.1 2.2 "Hema Bharali to be felicitated at AICC session". Assam Tribune. 18 திசம்பர் 2010. Archived from the original on 8 திசம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 29 நவம்பர் 2015.
  3. 3.0 3.1 "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 15 அக்டோபர் 2015. பார்க்கப்பட்ட நாள் 21 சூலை 2015.
  4. 4.0 4.1 "Award for Hema Bharali". The Hindu. 1 May 2006. பார்க்கப்பட்ட நாள் 29 November 2015.
  5. "Kalam to present Communal Harmony awards". One India. 30 April 2006. பார்க்கப்பட்ட நாள் 30 November 2015.
  6. "Hema Bharali - Assam News". Assam News. 6 June 2011. பார்க்கப்பட்ட நாள் 29 November 2015.
  7. Threads Woven Ideals, Principles and Administration. Allied Publishers. 2010. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788184244700. பார்க்கப்பட்ட நாள் 29 November 2015.
  8. "Our History". Ask Guwahati. 2015. Archived from the original on 4 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 30 November 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  9. "PM Confers Fakruddin Ali Ahmed Award to MJ Akbar, Hema Bharali". Radiance Weekly. 2015. Archived from the original on 2015-12-08. பார்க்கப்பட்ட நாள் 29 November 2015.
  10. "Other nonagenarian Gandhians". Ashta Bharati. October 2010. பார்க்கப்பட்ட நாள் 30 November 2015.
  11. "Financial aid to ailing Gandhian Hema Bharali". Tarun Gogoi. 19 திசம்பர் 2013. Archived from the original on 4 மார்ச்சு 2016. பார்க்கப்பட்ட நாள் 30 நவம்பர் 2015.
  12. "MS. HEMA BHARALI" (PDF). Government of India. 2015. பார்க்கப்பட்ட நாள் 30 November 2015.
  13. "Tributes paid to philanthropist Dr HK Das". The Assam Tribune. 7 April 2016 இம் மூலத்தில் இருந்து 7 ஆகஸ்ட் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160807025210/http://www.assamtribune.com/scripts/detailsnew.asp?id=apr0816%2Fcity051. 
  14. Freedom Fighter Hema Bharali Passes Away in Guwahati
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏமா_பாராலி&oldid=3947295" இலிருந்து மீள்விக்கப்பட்டது