உள்ளடக்கத்துக்குச் செல்

ஏப்ரல் 8, 1959 சூரிய கிரகணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏப்பிரல் 8, 1959-இல் நிகழ்ந்த கதிரவ மறைப்பு
Map
மறைப்பின் வகை
இயல்புவலய மறைப்பு
காம்மா-0.4546
அளவு0.9401
அதியுயர் மறைப்பு
காலம்446 வி (7 நி 26 வி)
ஆள் கூறுகள்19°06′S 137°36′E / 19.1°S 137.6°E / -19.1; 137.6
பட்டையின் அதியுயர் அகலம்247 km (153 mi)
நேரங்கள் (UTC)
பெரும் மறைப்பு3:24:08
மேற்கோள்கள்
சாரோசு138 (28 of 70)
அட்டவணை # (SE5000)9418

1959 ஆம் ஆண்டு ஏப்ரல் 8 அன்று வலய கதிரவமறைப்பு ஏற்பட்டது. புவிக்கும் சூரியனுக்கும் இடையில் நிலா செல்லும் போது கதிரவமறைப்பு ஏற்படுகிறது, இதனால் புவியில் உள்ள ஒரு பார்வையாளருக்கு சூரியன் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ மறைக்கப்படுகிறது. நிலாவின் தோற்ற விட்டம் சூரியனை விட சிறியதாக இருக்கும்போது ஒரு வலயக் கதிரவமறைப்பு ஏற்படுகிறது, இது சூரியனின் பெரும்பாலான ஒளியைத் தடுக்கிறது. இந்நிலையில் சூரியன் வலயம் போல தோற்றமளிக்கும். பூமியின் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் அகலத்தில் ஒரு பகுதி ஒளிமறைப்பாக ஒரு வலய கதிரவமறைப்பு தோன்றுகிறது. பாப்புவா நியூ கினியா (இன்றைய பப்புவா நியூ கினியா ), பிரித்தானிய சாலமன் தீவுகள் (இன்றைய சாலமன் தீவுகள் ), கில்பர்ட் , எலிசு தீவுகள் (இப்போது துவாலு, தோக்கே தீவுகளுக்குச் சொந்தமான பகுதி) வட்டாரத்தில் உள்ள மில்னே விரிகுடா மாகாணத்தின் தென்கிழக்கு முனை, ஆஸ்திரேலியா, அமெரிக்க சமோவாவில் உள்ள ஸ்வைன்ஸ் தீவு ஆகிய இடங்களில் வலயம் தெரிந்தது. .

தொடர்புடைய கிரகணங்கள்

[தொகு]

1957-1960 சூரிய கிரகணங்கள்

[தொகு]

சரோசு 138

[தொகு]

இது சாரோசு சுழற்சி 138 இன் பகுதியாகும். இச்சுழற்சி காலம் 18 ஆண்டுகள்11நாட்கள் ஆகும்.  இது 70  தடவைகள் மீள மீள நிகழும். இத்தொடர் 1472சூன் 6 அன்று பகுதி கதிரவமறைப்பாகத் தொடங்கியது. இதில் 1598, ஆகத்து 31 அன்று முதல் வலயக் கதிரவமறைப்புகளும் நிகழலாம்.  இந்தச் சுழற்சி 2482 பிப்ரவரி 18 வரை தொடரும்.  2500 மார்ச்சு 1 அன்று ஒரு கலப்புக் கதிரவமறைப்பு நிகழும்..  இதில் 2518 மார்ச்சு 12 அன்று முதல் 2554 ஏப்பிரல் 3 வரை முழுக் கதிரவமறைப்புகள் தொடரும்.  இத்தொடர் 2716, சூலை 11 அன்று 70  ஆம் முறையாக பகுதி கதிரவமறைப்ப்பாக  முடிவுறும்.  மிக நெடுநேர கதிரவமறைப்பு 2554 ஏப்பிரல் 3, அன்று 56 நொடிகள் நீடிக்கும்.

திரைத்தோசு தொடர்

[தொகு]

இது  திரைத்தொசு தொடரி பகுதியாகும். இந்த சுழற்சி மாற்றுக் கணுக்களிடையே  135 நிலா மாதங்களுக்கு(synodic months( (≈ 3986.63 நாட்கள்  அல்லதுor 11ஆண்டுகளில் ஒரு  மாதம் குறைவான  சுழற்சி காலத்தில் நிகழும், இவற்றின் தோற்றப்பாடும் நெட்டாங்கும் புவியண்மை சுழல்காலத்துடன் (பிறழ்மாதத்துடன்) ஒத்தியங்காமையால் ஒழுங்கற்றவையாக அமைகின்றன.  ஆனால்,  மூன்று திரைத்தோசு சுழற்சிகள் தொகுப்புக் காலம், தோராயமாக 33 ஆண்டுகளுக்கு 3 மாதங்கள குறைவாக( தோராயமாக 434.044 பிறழ்மாதங்ககளுக்குச்) சமமாகும். எனவே ஒளிமறைப்புகள் இந்தச் சுழற்சித் தொகுப்பு காலத்தோடு ஒத்தமைகின்றன.

இனெக்சு தொடர்

[தொகு]

இந்த ஒளிமறைப்பு நெடிய அலைவு நேரமுள்ள இனெக்சு சுழற்சித் தொடரின் பகுதியாகும். இந்த சுழற்சி மாற்றுக் கணுக்களிடையே  358 நிலா மாதங்களுக்கு(synodic months)  (≈ 10,571.95 நாட்கள்  அல்லதுor 29ஆண்டுகளில் 20 நாட்கள்) குறைவான  சுழற்சி காலத்தில் நிகழும். இவற்றின் தோற்றப்பாடும் நெட்டாங்கும் புவியண்மை சுழல்காலத்துடன் (பிறழ்மாதத்துடன்) ஒத்தியங்காமையால் ஒழுங்கற்றவையாக அமைகின்றன.  என்றாலும், ஆனால், மூன்று இனெக்சு சுழற்சிகள் தொகுப்புக் காலம், தோராயமாக 87 ஆண்டுகளில் 2 மாதங்கள் குறைவாக( தோராயமாக, 1,151.02 பிறழ்மாதங்ககளுக்குச்) சமமாகும்.  எனவே ஒளிமறைப்புகள் இந்தச் சுழற்சித் தொகுப்பு காலத்தோடு ஒத்தமைகின்றன.

மெட்டானிக் தொடர்

[தொகு]

மெட்டானிக்கத் தொடரில் கதிரவமறைப்பு19 ஆண்டுகளுக்கு(6939.69 நாட்களுக்கு) ஒருமுறை 5 சுழற்சிகள் நிகழ்கிறது. கதிரவமறைப்புகள் ஏறத்தாழ அதே நாட்காட்டி நாளில் ஏற்படுகிறது. மேலும்,  இதன் எண்மத் துணைத்தொடர் ஒவ்வொரு 3.8 ஆண்டுகளில்(1387.94 நாட்களில்)  ஐந்தில் ஒரு பங்கு காலத்துக்கு ஒருமுறை நிகழ்கிறது.

குறிப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏப்ரல்_8,_1959_சூரிய_கிரகணம்&oldid=3924750" இலிருந்து மீள்விக்கப்பட்டது