2013 மே 10 சூரிய கிரகணம்
மே 10, 2013-இல் நிகழ்ந்த கதிரவ மறைப்பு | |
---|---|
Annularity viewed from Churchills Head, Australia. | |
மறைப்பின் வகை | |
இயல்பு | வலய மறைப்பு |
காம்மா | -0.2694 |
அளவு | 0.9544 |
அதியுயர் மறைப்பு | |
காலம் | 363 வி (6 நி 3 வி) |
ஆள் கூறுகள் | 2°12′N 175°30′E / 2.2°N 175.5°E |
பட்டையின் அதியுயர் அகலம் | 173 km (107 mi) |
நேரங்கள் (UTC) | |
(P1) பகுதி கிரகணம் துவக்கம் | 21:25:10 |
(U1) முழு கிரகணம் துவக்கம் | 22:30:34 |
பெரும் மறைப்பு | 0:26:20 |
(U4) முழு மறைப்பு முடிவு | 2:19:58 |
(P4) பகுதி கிரகணம் முடிவு | 3:25:23 |
மேற்கோள்கள் | |
சாரோசு | 138 (31 of 70) |
அட்டவணை # (SE5000) | 9537 |
2013 மே 9-10 ஆந் திகதிகளில் (ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்) (), 2013 பரிமாணங் கொண்ட கங்கண சூரிய கிரகணம் நிகழ்ந்தது. சூரிய கிரகணம் நிகழ்வது சந்திரன் புவிக்கும் சூரியனுக்குமிடையில் குறுக்கிடும்போது புவியிலிருப்போருக்குத் தோன்றும் ஒரு நிழல் தோற்றப்பாடு ஆகும். கங்கண சூரிய கிரகணம் என்பது சந்திரனின் தோற்றவிட்டம் சூரியனின் விட்டத்தை விட சிறிதாக இருக்கும்போது அது சூரியனின் நடுப்பகுதியை மறைப்பதால் நிகழ்வதாகும். இதனால் கிரகணம் ஒரு கங்கண (மோதிர) வடிவில் தோன்றும். இதனால் இது நெருப்பு வளையம் எனவும் அழைக்கப்படும்.[1]
தோற்றும் இடங்கள்
[தொகு]ஆஸ்திரேலியா, கிழக்கு பப்புவா நியூ கினி, சொலமன் தீவுகள், மற்றும் கில்பேர்ட் தீவுகள் உள்ளிட்டதான பசிபிக் பெருங்கடலின் கிழக்கு பிரெஞ்சு பொலினீசியாவில் இருந்து 171 - 225 கிலோகீட்டர் அகலப்பட்டையான பகுதியில் இக் கங்கணாகிரகணாம் தோற்றும். தோற்றும் காலம் 6 நிமிடம் 3 வினாடி வரையாக இருக்கும்.
இலங்கை, இந்தியாவில்
[தொகு]இலங்கை மற்றும் இந்தியாவில் உள்நாட்டு நேரப்படி அதிகாலை 2:05 முதல் முற்பகல் 8:55 வரை நிகழும். ஆயினும் பார்க்கமுடியாது.
படத்தொகுப்பு
[தொகு]-
கிரகணத்தின் கங்கண அமைப்பு
-
Interference patterns of a coconut leaf shadow. From Tarawa, Kiribati at 12:30 pm local time (00:30 UMT)