ஏக்தாரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Ektara, drone lute
ஒரு நரம்பு கொண்ட ஏக்தாரா
Ektara, drum zither
ஏக்தாரா கருவி

ஏக்தாரா (Ektara) என்பது தெற்கு ஆசியாயாவின் நாட்டுப்புற இசையில் பயன்படுத்தப்படும் ஒரு நரம்பிசைக் கருவியாகும். தெற்கு ஆசியாவில் தோன்றிய இது, வங்காளதேசம், இந்தியா, பாக்கித்தானின் நவீனகால இசையில் பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு விரலால் இசைக்கப்படுகிறது.

ஆரம்பத்தில் ஏக்தாரா என்பது இந்தியாவில் அலைந்து திரிந்த நாடோடிப் பாடகர்கள், அரசர்களுக்காக பாடும் பாடகர்களின் வழக்கமான இசைக்கருவியாக இருந்தது. ஏக்தாரா என்பது குறைந்த சுருதியால் இசைக்கப்படும் கருவியாகும். இது தோலால் மூடப்பட்ட பூசணியின் காய்ந்த பகுதியைக் கொண்டுள்ளது. இதில் துண்டு செருகப்படுகிறது. இது இன்று இந்தியா, நேபாளத்தின் சில பகுதிகளில் யோகிகளால் பயன்படுத்தப்படுகிறது. அழைந்து திரியும் சாதுக்கள் தங்கள் பாடல்களுக்கும், பிரார்த்தனைகளுக்கும் இதனை பயன்படுத்துகிறார்கள். நேபாளத்தில், இந்த கருவி இராமாயணம், மகாபாரதத்தை பாடுவர்கள் கொண்டுள்ளனர். [1]

பயன்பாடு[தொகு]

ஏக்தாரா பாவுல் இசையில் ஒரு பொதுவான கருவியாகும்

ஏக்தாரா என்பது வங்காளத்தைச் சேர்ந்த பாவுல் இசையில் ஒரு பொதுவான கருவியாகும். வங்காளத்தில் பிரபலமான இசைக்குழுக்கள் மற்றும் திரைப்படங்களால் பாவுல் இசையை ஏற்றுக்கொண்டது. மேலும் அதன் தனித்தன்மையை அழித்துவிட்டதாக சமீபத்திய ஆண்டுகளில் சில சர்ச்சைகள் எழுந்துள்ளன. பரந்த பார்வையாளர்களைக் கவர்ந்திழுக்கும் முயற்சியில் ஏக்தாரா போன்ற பாரம்பரியக் கருவிகளை நவீன ஒலிகளுடன் கலப்பது பொதுவானதாகிவிட்டது. இது பூர்ணா தாஸ் பாவுலின் கூற்றுப்படி பாவுல் இசையின் "உண்மையான அழகை அழிக்கிறது". [2]

கீர்த்தனை பாடுபவர்[தொகு]

ஏக்தாரா பொதுவாக கீர்த்தனை பாடுவதில் பயன்படுத்தப்படுகிறது. இது இறைவன் அல்லது இறைவியைப் புகழ்வதாக பாடும் ஒரு இந்து சமய பக்தி நடைமுறையாகும். [3] ஏக்தாராவை சாதுக்கள் அல்லது அலைந்து திரியும் புனிதர்கள், சூஃபிக்கள் போன்றவர்களாலும், வங்காளத்தில் பாவுல்களாலும் பயன்படுத்தப்படுகிறது . [4]

புகைப்படக் காட்சி[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏக்தாரா&oldid=3768761" இருந்து மீள்விக்கப்பட்டது