எஸ்கிமோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒரு எஸ்கிமோ குடும்பம்

எஸ்கிமோக்கள் (Eskimo) எனப்படுவோர் வடதுருவப் பகுதிகளில் வாழும் பழங்குடி மக்கள். எஸ்கிமோ என்றால் அவர்கள் மொழியில் இறைச்சியை பச்சையாகச் சாப்பிடுபவர்கள் என்று பொருள். இவர்களில் இனுவிட்டு (Inuit) எனப்படுவோர் வடக்கு அலாஸ்கா, வட கனடா, கிறீன்லாந்து வரை காணப்படுகின்றனர். யுபிக் எனப்படுவோர் மேற்கு அலாஸ்காவிலும் சைபீரியாவின் வடகிழக்கு முனையிலும் வாழ்கின்றனர். இவர்களை விட அலாஸ்காவின் அலூசியன் தீவுகளிலும், ரஷ்யாவின் கம்சாத்கா கிராயிலும் வாழும் உனாங்கா எனப்படும் அலூட் மக்கள் மூன்றாவது வகையான எஸ்கிமோக்கள்.

எஸ்கிமோக்கள் குள்ளமாகவும், குட்டையான கால்களையும் உடையவர்கள். குளிர்காலத்தில் இவர்கள் இக்லூ என்றழைக்கப்படும் பனிக்கட்டிகளினால் ஆன வீடுகளில் வசிக்கின்றனர். கோடைகாலத்தில் மிருகங்களின் தோலால் ஆன கூடாரங்களில் வாழ்கின்றனர்.

எஸ்கிமோ என்ற ஆங்கிலச்சொல் ஆர்க்டிக் பகுதிச் செவ்விந்தியர்களின் மொழியில் இருந்து வந்தது. இச்சொல்லுக்கு பச்சை இறைச்சியை தின்பவர்கள் என்பது பொருள்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்கிமோ&oldid=2712865" இருந்து மீள்விக்கப்பட்டது