எழுமுகத்திண்மம்
Appearance
எழுமுகத்திண்மம் அல்லது எழுமுகி (heptahedron) என்பது ஏழு முகங்கள் கொண்ட பன்முகியாகும். எழுமுகிகள் வெவ்வேறான அடிப்படை வடிவங்களில் அமையலாம். அறுகோணப் பட்டைக்கூம்பு, ஐங்கோணப் பட்டகம் இரண்டும் நன்கறியப்பட்ட இரு எழுமுகிகளாகும். எழுமுகிகள், ஒழுங்குப் பன்முகிகள் இல்லை.
வேறுபட்ட எழுமுகிகள்
[தொகு]விளிம்புகளின் நீளங்களையோ, விளிம்புகளுக்கு அல்லது முகங்களுக்கு இடைப்பட்டக் கோணங்களையோ மாற்றுவதன் மூலம் ஒன்றை மற்றொன்றுக்கு ஒத்ததாக மாற்ற முடியாத எழுமுகிகள், இடவியலாக வேறுபட்ட எழுமுகிகள் எனப்படும். இத்தகைய எழுமுகிகளில் எந்தவிரு எழுமுகிகளிலும் பக்கங்கள், முனைகளின் அமைப்புகள் வேறுபட்டிருக்கும்.
குவிவு எழுமுகிகள்
[தொகு]ஆடி எதிருருக்கள் நீங்கலாக 34 இடவியலாக வேறுபட்ட குவிவு எழுமுகிகள் உள்ளன.[1] ஒவ்வொரு வகைக்கும் ஒரு எடுத்துக்காட்டென கீழே தரப்பட்டுள்ளது.
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
நீள் முக்கோணப் பட்டைக்கூம்பு
|
|
|
|
|
|
|
மேற்கோள்கள்
[தொகு]வெளியிணைப்புகள்
[தொகு]- Polyhedra with 4–7 Faces by Steven Dutch
- Weisstein, Eric W., "Heptahedron", MathWorld.