எலிசபெத் கோசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எலிசபெத் கோசி
Elizabeth Koshy
Elizabeth Koshy at the 12th South Asian Games in 2016.jpg
2016 ஆம் ஆண்டு தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் எலிசெபத் கோசி
தனிநபர் தகவல்
தேசியம்இந்தியர்
பிறப்பு10 மே 1994 (1994-05-10) (அகவை 28)
கொச்சி, கேரளம், இந்தியா
உயரம்1.61 m (5 ft 3 in)[1]
எடை54 கி.கி
விளையாட்டு
நாடு இந்தியா
விளையாட்டுதுப்பாக்கி சுடுதல்
பதக்கத் தகவல்கள்
Women's துப்பாக்கி சுடுதல்
 இந்தியா
2016 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2016 கவுகாத்தி 10 மீ காற்றுத் துப்பாக்கி
தங்கப் பதக்கம் – முதலிடம் 2016 கவுகாத்தி 10 மீ காற்றுத் துப்பாக்கி அணி

எலிசபெத் சூசன் கோசி (Elizabeth Susan Koshy) இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த இந்திய துப்பாக்கி சுடும் வீராங்கனை ஆவார். 1994 ஆம் ஆண்டு மே மாதம் 10 ஆம் தேதியன்று இவர் பிறந்தார்.[2] 2011 ஆம் ஆண்டு செருமனியில் நடைபெற்ற இளையோர் போட்டியில் இந்திய அணி ஆறாவது இடத்தில் இருந்தபோது பன்னாட்டு அளவில் எலிசெபத் அறிமுகமானார். அதே ஆண்டில் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற மாநில வெற்றியாளர் போட்டியில் எலிசெபத் கோசி ஐந்து தங்கப் பதக்கங்களை வென்றார். [3] ஆசிய துப்பாக்கி சுடுதல் வெற்றியாளர் கோப்பை போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றார். 2013 மற்றும் 2014 உலகக் கோப்பை போட்டிகளில் எலிசெபத் கோசி இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். 2014 கிளாசுகோ பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றார். 2015 தேசிய விளையாட்டுப் பெண்கள் 50 மீட்டர் துப்பாக்கி சுடும் போட்டியில் கோசி தங்கம் வென்றார், இது கேரளாவுக்கான முதல் போட்டியாகும்.[4][5][6] கடற்படையைச் சேர்ந்த அரியானாவின் சத்குரு தாசு என்பவரால் பயிற்சியளிக்கப்பட்டார். கொச்சியில் இருந்து வந்த இவர் தனது குழந்தைப் பருவத்தில் தேசிய துப்பாக்கி சுடும் போட்டியைப் பார்த்து இவ்விளையாட்டில் ஈடுபடத் தூண்டப்பட்டார்; இவருடைய தாத்தா ஒரு வேட்டைக்காரர் என்று ஒரு நேர் காணலில் இவர் தெரிவித்துள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Glasgow 2014 - Elizabeth Susan Koshy Profile". g2014results.thecgf.com. 2019-04-26 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Elizabeth Susan Koshy | SportingIndia". sportingindia.com. 2017-01-12 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2022-01-20 அன்று பார்க்கப்பட்டது.
  3. Rayan, Stan (16 June 2011). "Elizabeth Koshy sets sights on 2016 Rio Olympics". The Hindu. http://www.thehindu.com/todays-paper/tp-sports/elizabeth-koshy-sets-sights-on-2016-rio-olympics/article2108665.ece. பார்த்த நாள்: 9 April 2015. 
  4. G, Sandip (4 February 2015). "TN, Kerala Spread Shooting Wings". The New Indian Express. http://www.newindianexpress.com/sport/TN-Kerala-Spread-Shooting-Wings/2015/02/04/article2651740.ece. பார்த்த நாள்: 9 April 2015. 
  5. "Koshy gifts Kerala first shooting medal in National Games history". The Times of India. 3 February 2015. http://timesofindia.indiatimes.com/sports/more-sports/others/Koshy-gifts-Kerala-first-shooting-medal-in-National-Games-history/articleshow/46111565.cms. பார்த்த நாள்: 9 April 2015. 
  6. "Elizabeth Koshy gifts Kerala first shooting medal in games history". Millenniumpost. 4 February 2015. http://www.millenniumpost.in/NewsContent.aspx?NID=94169. பார்த்த நாள்: 9 April 2015. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=எலிசபெத்_கோசி&oldid=3546074" இருந்து மீள்விக்கப்பட்டது