எருசலேம் சிலுவை
எருசலேம் சிலுவை அல்லது சிலுவைப் போர்வீரர்களின் சிலுவை என்பது முன்னறிவிப்புச் சிலுவை அல்லது கிறித்தவ அடையாளம். இது நான்கு சிறிய கிரேக்க சிலுவைகளால் சூழப்பட்ட பெரியதொரு கிரேக்க சிலுவையைக் கொண்டதாகும்.[1]
முதலாவது சிலுவைப் போரின்போது இரண்டாம் ஏர்பன் எனும் திருத்தந்தையால் சிலுவைப் போர்வீரர்களுக்குக் கொடுக்கப்பட்ட பதாகை பின்பு இலத்தீன் எருசலேம் பேரரசின் அடையாளமாக விளங்கியது. இது "சிலுவைப் போர்வீரர்களின் சிலுவை" என அழைக்கப்படும். இது அப்பேரரசின் முதலாவது தலைவராகவிருந்த கோட்பிரி என்பவரால் அணியப்பட்டது.[2] நான்கு சிறிய சிலுவைகளும் நான்கு நற்செய்தி நூல்கள் அல்லது எருசலேமிலிருந்து நாற் திசைக்கும் பரந்து சென்ற கிறிஸ்துவின் வார்த்தை என மாதிரியாகக் கொள்ளப்படுகின்றது. மாற்றீடாக, ஐந்து சிலுவைகளும் இயேசுவின் ஐந்து காயங்களையும் முதல் ஐந்து கிறிஸ்தவ சபைகளையும் அடையாளப்படுத்துவதாகவும் அர்த்தம் கொள்ளப்படும்.[3][4]
எருசலேம் சிலுவை சியார்சியா நாட்டுக்கொடியிலும், கத்தோலிக்க கய்ரோஸ் ஞான ஒடுக்கத்தின் பின்பு அணியும் பதக்கமாகவும், திருக்கல்லறைத் தேவாலய ஆணையிலும்,[5] கனடாவின் ஆளுனரின் சின்னத்திலும்[6] பாவிக்கப்படுகின்றது.
ஒருங்குறி குறியீடு
[தொகு]ஒருங்குறி குறியீடு பிற அடையாளங்களின் அட்டவணையில் ☩, U+2629 (CROSS OF JERUSALEM) காணப்படுகின்றது. ஆயினும், அக்குறியீடு எருசலேம் சிலுவை அல்லாமல் கிரேக்க சிலுவை போன்று காணப்படுகின்றது.
உசாத்துணை
[தொகு]- ↑ JERUSALEMPEDIA - Jerusalem Cross
- ↑ "Jerusalem Cross Tattoo - What Does It Mean?". Archived from the original on 2009-04-15. பார்க்கப்பட்ட நாள் 2012-07-24.
- ↑ Jerusalem Cross History
- ↑ The History and Meaning of the Jerusalem Cross, or the Crusader's Cross
- ↑ "Equestrian Order of the Holy Sepulchre of Jerusalem". Archived from the original on 2012-10-17. பார்க்கப்பட்ட நாள் 2012-07-24.
- ↑ Robert Gerald Guest