உள்ளடக்கத்துக்குச் செல்

எரிக் எரிக்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எரிக் எரிக்சன்
எரிக் எரிக்சன்
பிறப்புErik Homburger Erikson
(1902-06-15)15 சூன் 1902
பிராங்க்ஃபுர்ட், செருமனி[1]
இறப்பு12 மே 1994(1994-05-12) (அகவை 91)
ஹார்விச், கேப் கோட், மாசச்சூசெட்ஸ்[1]
குடியுரிமைஅமெரிக்கா, செருமன்
தேசியம்செருமனியர்
துறைஅபிவிருத்தி உளவியல்
பணியிடங்கள்யால
கலிபோர்னியா பல்கலைக்கழகம்
பிட்ஸ்பேர்க் பல்கலைக்கழகம்
ஹவார்ட் மருத்துவப் பாடசாலை
குறிப்பிடத்தக்க மாணவர்கள்ரிச்சாட் செனெட்
அறியப்படுவதுசமூக அபிவிருத்திக் கொள்கை
தாக்கம் 
செலுத்தியோர்
சிக்மண்ட் பிராய்ட், அனா பிராய்ட்
துணைவர்யோவான் எரிக்சன் (1930–1994)

எரிக் எரிக்சன் (Erik Homeburger Erikson; சூன் 15 1902-மே 12 1994) என்பவர் ஒரு உளவியல் பகுப்பாய்வாளர் ஆவார். எரிக்சனின் சமூக உளவியல்சார் வளர்ச்சிப் படிநிலைகள் எட்டு என்பது குறிப்பிடத்தக்கது. மனித வாழ்வில் சமுதாயத்தினால் ஏற்படும் விளைவுகள், மாற்றங்கள், தாக்கங்கள் ஆகியன பற்றி ஆய்வு செய்துள்ளார்.

பிறப்பு

[தொகு]

எரிக் எரிக்சன் செருமனியில் உள்ள பிரான்ங்பர்ட்டில் பிறந்தார். தம் சொந்தத் தந்தையாரை எரிக் எரிக்சன் பார்த்ததில்லை. அவருடைய தாய் திருமணம் செய்து கொள்ளாமல் கொண்ட உறவினால் எரிக் எரிக்சன் பிறந்தார். யூதப் பெண்மணியான அவருடைய தாய் தியோடர் ஓம்பர்கர் என்னும் மருத்துவரைப் பின்னர் மணந்து கொண்டார். தியோடர் ஓம்பர்கர் தான் எரிக்சனின் சொந்தத் தந்தை என்று பல ஆண்டுகளாக நம்பி வந்தார். ஓம்பர்கர் தம் சொந்த அப்பா இல்லை என்று பிற்காலத்தில் அறிந்ததும் அவருக்குக் குழப்பம் ஏற்பட்டது. தாம் யார், தம் அடையாளம் யாது என்பதை அறிந்து கொள்ள அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது. இளம் பருவத்தில் ஏற்பட்ட இந்த அனுபவம் எரிக்சனுக்கு பிற்காலத்தில் பாரம்பரியம் பற்றியும் அடையாளம் பற்றியும் ஆய்வு செய்வதற்கு ஏதுவாக அமைந்தது.

கல்வி

[தொகு]

பள்ளிப் படிப்பை முடித்துவிட்ட எரிக்சன் கலையில் தேர்ச்சிப் பெற பிளாரன்சுக்குச் சென்றார். உளவியல் கல்வி கற்பதில் ஆர்வம் கொண்டார். எரிக் எரிக்சன் தோற்றத்தில் உயரமாகவும் நீல வண்ணக் கண்களுடனும் இருந்த காரணத்தால் பிற மாணவர்களிடமிருந்து வேறுபட்டுக் காணப்பட்டார். யூத இனத்தைச் சேர்ந்தவர் என்பதால் இலக்கண வகுப்பிலிருந்து வெளியேற்றப் பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பணி

[தொகு]

1933 ஆம் ஆண்டில் அமெரிக்காவுக்குக் குடியேறினார். ஆர்வர்டு மருத்துவப் பள்ளியில் ஆசிரியராகப் பணி புரிந்தார். ஆசிரியராகப் பணியில் இருக்கும்போதே குழந்தைகள் மனவியல் மருத்துவம் பார்ப்பதிலும் ஈடுபட்டார். பெர்க்கிலியில் உள்ள கலிபோர்னியாப் பல்கலைக் கழகம், ஏல் பல்கலைக் கழகம், சான் பிரான்சிசுகோ மனவியல் நிறுவனம் ஆகியவற்றில் ஆசிரியப் பணி ஆற்றினார். சிக்மண்ட் பிராய்ட், அவருடைய மகள் அன்னா பிராய்டு ஆகியோருடன் தொடர்பும் நட்பும் கொண்டு பழகினார். காந்தி அடிகளைப் பற்றி ஒரு நூல் எழுத சில மாதங்கள் இந்தியாவில் தங்கினார்.

கருத்துக்கள்

[தொகு]

சிக்மாண்ட் பிராய்டின் உளவியல் கருத்துகளில் பெரும்பாலானவற்றை ஏற்றுக்கொண்டார். மேலும் சில புதிய கருத்துக்களை முன் வைத்து எழுதியுள்ளார். சிக்மண்ட் பிராய்டின் கருத்தான உளவியல் பாலுணர்வு இளம்பிராயத்துடன் தொடர்பு கொண்டது. ஆனால் எரிக் எரிக்சனின் கருத்து மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை ஏற்படும் வளர்ச்சி நிலைகளைப் பற்றியது ஆகும். குழந்தைகள் வெறும் உயிர்ப் பிண்டங்கள் அல்ல என்றும் குழந்தைகள் குமுக மலர்ச்சியிலும் வளர்ச்சியிலும் பங்களிக்கக் கூடியவர்கள் என்றும் குழந்தைகள் பராமரிப்பும் வளர்ப்பும் குமுகாய வளர்ச்சிக்கு மிகவும் தேவையானவை என்றும் வலியுறுத்திக் கூறிவந்தார்.

குடும்பம்

[தொகு]

பாடல் ஆசிரியரான ஜோன் செர்சன் என்னும் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு 3 பிள்ளைகள். ஒரு மகனான காய் டி எரிக்சன் என்பவர் புகழ் பெற்ற அமெரிக்க சமூகவியல் அறிஞர் ஆவார்.

எழுதிய நூல்கள்

[தொகு]
  • Childhood and Society (1950)
  • Identity: Youth and Crisis (1968)
  • Life History and the Historical Moment (1975)
  • Dialogue with Erik Erison (1996)
  • Gandhi's Truth (இந்நூலிற்குப் புலிட்சர் பரிசும் தேசியப் புத்தக விருதும் கிடைத்தன)

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=எரிக்_எரிக்சன்&oldid=3686330" இலிருந்து மீள்விக்கப்பட்டது