அபிவிருத்தி உளவியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
எரிக் எரிக்சன், இதனை ஆழ்ந்து ஆராய்ந்தவர்

முன்னேற்ற உளவியல் அல்லது அபிவிருத்தி உளவியல் (Developmental psychology) என்பது மனித இருப்பில் ஏற்படும் மாற்றங்கள் பற்றிய அறிவியல் ஆய்வு ஆகும். முதலில் குழந்தைகள் மற்றும் சிறார்கள் பற்றி கருத்திலெடுத்திருந்த இத்துறையானது வாலிபப்பருவம், வயது வந்தோர் மேம்பாடு, முதுமை மற்றும் முழு ஆயுட்காலம் பற்றியும் கருத்திலெடுத்திலெடுத்து விரிந்துள்ளது. இத்துறை தசை இயக்க ஆற்றல் மற்றும் ஏனைய உளவியல் உடற்கூற்று செயற்முறைகளான அறிதிறன் வளர்ச்சியுடன் தொடர்புபட்ட சிக்கல் தீர்வு, ஒழுக்கநெறி புரிந்துணர்வு, கருத்துருவாக்கல் புரிந்துணர்வு, மொழி பழக்கப்படுத்தல், சமூக, ஆளுமை, உணர்வு வளர்ச்சி, சுய கருத்து மற்றும் அடையாள உருவாக்கம் போன்ற பரந்த அளவு மாற்றத்தை சோதிக்கின்றது.

ஆய்தல்[தொகு]

மிகவும் செல்வாக்குமிக்க அபிவிருத்தி உளவியலாளர்களில் ஒருவரான எரிக் எரிக்சன் அபிவிருத்தி உளவியல் பற்றி ஆய்வு செய்திருந்தார். எரிக்சன் 1959 இல் சமூக உளவியல்சார் நிலைகள் பற்றி முன்மொழிந்திருந்தார்.[1] மற்றொரு பிரபல அபிவிருத்தி உளவியலாளர் சிக்மண்ட் பிராய்ட் பாலுணர்வுள முன்னேற்றம் பற்றி ஆய்வு செய்திருந்தார்.[2]

உசாத்துணை[தொகு]

  1. "Erik Erikson". பார்த்த நாள் 10 November 2014.
  2. "Psychosexual Stages". பார்த்த நாள் 10 November 2014.

வெளி இணைப்புகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அபிவிருத்தி_உளவியல்&oldid=2849510" இருந்து மீள்விக்கப்பட்டது